Home
News

'விண்வெளி ஒலிம்பிக்ஸ்' வீடியோ: இப்படி ஒரு ஒலிம்பிக்ஸ் போட்டியை உங்கள் வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது..

இந்த 2021 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி முதல் துவங்கி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களும் நேரலை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் பதக்கம் என ஒட்டுமொத்தமாக 113 பதக்கங்களைப் பெற்று முதல் நாடாக வெற்றி அடைந்துள்ளது.

இந்த ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா 48 வது இடம்

இந்த ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா 48 வது இடம்

இதனை தொடர்ந்து சீனா 38 தங்கம், 32 வெள்ளி,18 வெண்கலம் என்று மொத்தமாக 88 பதக்கங்களை பித்ரு சீனா இரண்டாவது இடத்தை ஒலிம்பிக்ஸ் போட்டியில் தட்டி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, மொத்தமாக 58 பதக்கங்களைப் பெற்று ஜப்பான் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று மொத்தமாக 7 பதக்கங்களை வென்று 48 வது இடத்தில் உள்ளது.

2024 ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு விண்வெளியில் விளம்பரமா?

இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் போட்டி நிறைவடைந்ததை தொடர்ந்து, அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டி எங்கு நடைபெறும்? எப்போது நடைபெறும் என்ற கேள்வி அதிகமாகக் கூகிளில் சர்ச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சரியான பதில் வரும் 2024 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக விண்வெளியில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டி அனைவரின் கவனத்தையும் தற்பொழுது ஈர்த்துள்ளது.

உங்களை வியப்பில் ஆழ்த்தும் 'விண்வெளி ஒலிம்பிக்ஸ்' வீடியோக்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் 'விண்வெளி ஒலிம்பிக்கில்' பங்கேற்கின்ற வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இது வரை யாரும் பார்த்திடாத வகையில் இந்த விண்வெளி ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

ஜீரோ கிராவிட்டி ஈர்ப்பு விசையில் விண்வெளி வீரர்கள் செய்யும் சாகச சேட்டை

விண்வெளியில் ஜீரோ கிராவிட்டி ஈர்ப்பு விசையில் இவர்கள் செய்யும் சேட்டைகளும், சாகசங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இந்த வீடியோ பதிவுகள் அனைத்தையும் நீங்களே பார்த்தால் நிச்சயமாக என்ன நடந்தது என்று தெரிந்து நீங்களும் வியப்பில் மூழ்கிவிடுவீர்கள். வாருங்கள் இந்த பதிவில் இருக்கும் வீடியோக்களை பார்க்கலாம். விண்வெளி வீர்கள் ஒவ்வொருவரும் இந்த விண்வெளி ஒலிம்பிக்ஸ் போட்டியை திறமையுடன் விளையாடியுள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு ரெடியா?

பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் மற்றும் ஜப்பானிய விண்வெளி வீரர் அகி ஹோஷைட் ஆகியோரும் 2024 ஆம் ஆண்டு பாரிசில் நடக்கும் ஒலிம்பிக்கைக் குறிக்கும் வகையில் தங்கள் சொந்த ஒப்படைப்பு விழாவை நடத்தினர். இந்த வீடியோகளில் உங்களுக்கு எந்த விண்வெளி ஒலிம்பிக்ஸ் போட்டி விளையாட்டு பிடித்தது என்று எங்களுடன் கமெண்டில் பகிர்ர்த்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Astronauts Aboard In The International Space Station Participates In Space Olympics : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X