இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?

|

விண்வெளி மற்றும் பூமி தொடர்பான பல சுவாரசியமான தகவல்களை நாம் நமது பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போகும் பதிவும் அப்படியானது தான். பூமியின் ஒரு பெரும் பகுதி பச்சை நிற தீப்பிழம்பால் சூழப்பட்டது போன்ற ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. சூரியனின் வித்தியாசமான நடத்தையினால் இந்த அரோரா ஒலிகள் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது என்ன காரணத்தினால் எழுந்தது என்று தெரிந்துகொள்ளலாம்.

சூரியனின் நடத்தையில் மாற்றமா? விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

சூரியனின் நடத்தையில் மாற்றமா? விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

கடந்த சில வாரங்களாக, சூரியன் சற்றே வித்தியாசமாக நடந்துகொள்வதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியில் அயனைஸ்ட் துகள்களின் தீவிரம் அதிகமாக உள்ளது என்றும், வழக்கத்தை விட அதிகளவில் இந்த துகள்கள் வெளியேற்றுகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது நமது கிரகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய ராட்சத அரோரா நிகழ்வை உருவாகியுள்ளது. இந்த மிக சமீபத்திய காஸ்மிக் நிகழ்வு சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களால் கைப்பற்றப்பட்டது.

வட அமெரிக்கா மற்றும் கனடாவின் மேற்பரப்பிற்கு மேல் தோன்றிய ராட்சத பச்சை நிற ஒளி

வட அமெரிக்கா மற்றும் கனடாவின் மேற்பரப்பிற்கு மேல் தோன்றிய ராட்சத பச்சை நிற ஒளி

ISS இன் தாமஸ் பெஸ்கெட், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது கடைசி சில நாட்களைக் கணக்கிடுகையில், வட அமெரிக்கா மற்றும் கனடாவின் மேற்பரப்பிற்கு மேலே உள்ள பரந்த இடங்களில் இந்த ராட்சத அரோராக்களை கண்டுள்ளார். இது அழகான ஒளிரும் பச்சை விளக்கு போலக் காட்சி அளித்தது என்று அவர் கூறியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, இந்த நிகழ்வை அவர் படம்பிடித்து, பூமியில் உள்ள மனிதர்களுடன் பகிர்ந்துள்ளார்.

LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?

அரோரா வளையத்தின் மையத்திற்கு மேலே பறந்த ISS

ISS விண்வெளி வீரரான பெஸ்கெட், இந்த படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவில், "வட அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் முழு பணியின் வலிமையான அரோராக்களை நாங்கள் நேரடியாகக் கண்காணித்தோம், நமது பூமியின் சுற்றுப்பாதையை விட அற்புதமான கூர்முனைகளை நாங்கள் கண்டறிந்தோம். மேலும், நாங்கள் அரோரா வளையத்தின் மையத்திற்கு மேலே பறந்து சென்றோம், அரோராவின் வேகமான அலைகள் மற்றும் துடிப்புகள் அனைத்தும் வளையத்தின் மையத்தில் இருந்து நேரடியாகக் கண்டு மகிழ்ந்தோம்" என்று அவர் கூறியுள்ளார்.

எதனால் இந்த ராட்சத அரோரா நிகழ்வு நிகழ்ந்தது?

எதனால் இந்த ராட்சத அரோரா நிகழ்வு நிகழ்ந்தது?

பூமி கிரகம் முழுவதுமாக பச்சை தீப்பிழம்புகளால் சூழப்பட்டு, அரோராவின் முடிவில் இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறத்துடன் கண்கவர் பிம்பத்தை இயற்கை உருவாக்கிய நிகழ்வைப் படம் பிடித்துள்ளனர். சரி, இப்போது எதனால் இந்த ராட்சத அரோரா நிகழ்வு நிகழ்ந்தது என்று பார்க்கலாம். சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு வெடிப்புகள் பூமியின் காந்தப்புலங்களைத் தாக்கும் போது இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ​​ஆங்கிலத்தில் இதை சதர்ன் லைட் மற்றும் நார்த்தன் லைட் என்று அழைக்கின்றனர்.

நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?

பூமியின் காந்தப்புலத்தை சூரியக் காற்று தாக்குகிறதா?

பூமியின் காந்தப்புலத்தை சூரியக் காற்று தாக்குகிறதா?

பனிக்காலத்தில் இந்த அரோராஸ் விளக்கு வானத்தில் தோன்றும். நாசாவின் கூற்றுப்படி, சூரியன் தொடர்ந்து சூரியக் காற்றை உருவாக்குகிறது, இது சூரியக் குடும்பத்தில் பாயும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களால் ஆனது. சூரியக் காற்று, பூமியின் காந்தப்புலத்திற்குள் வரும்போது, ​​காந்த மறு இணைப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு வெடிக்கும் செயல்முறையானது. விண்வெளியில் இருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை வளிமண்டலத்தில் துரிதப்படுத்த அனுமதிக்கிறது. இதனால், ஒளிரும் அரோரா விளக்குகள் பூமியின் வானத்தில் உருவாகிறது.

​​​​ஒரு பில்லியன் அயனைஸ்ட் துகள்களின் மோதல்

​​​​ஒரு பில்லியன் அயனைஸ்ட் துகள்களின் மோதல்

நாசா மேலும் கூறுகையில், "ஒளிரும் அரோராவைப் பார்க்கும்போது, ​​​​ஒரு பில்லியன் துகள்களின் மோதல்களை நாம் பார்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுவும், இவை பூமியின் காந்தப்புலக் கோடுகளைத் தாக்கும் போது, வண்ண நிறங்களில் தீப்பிழம்பு போல் ஒளிரச் செய்கிறது." என்று நாசா கூறியுள்ளது. இந்த அற்புதமான நிகழ்வை இந்தியர்கள் நேரில் காண வாய்ப்பில்லை என்பதனால், இப்போது இந்த புகைப்படத்தில் பார்த்துக்கொள்ளலாம். விண்வெளி இன்னும் ஏராளமான பல சுவாரசியமான தகவலை வெளிப்படுத்தக் காத்திருக்கிறது.

பால்வெளி மண்டலத்திற்கு வெளியே NASA புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதா? என்ன சொல்கிறது நாசா?பால்வெளி மண்டலத்திற்கு வெளியே NASA புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளதா? என்ன சொல்கிறது நாசா?

பூமியில் சூரியன் அஸ்தமனம் ஆகாத 6 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பூமியில் சூரியன் அஸ்தமனம் ஆகாத 6 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, உங்களுக்கு மற்றொரு சுவாரசியமான தகவலைக் கூறுகிறோம் கேளுங்கள். பூமியில் சூரியன் அஸ்தமனம் ஆகாத 6 முக்கிய இடங்கள் உண்மையிலேயே இருக்கிறது, அது பற்றி உங்களுக்குத் தெரியுமா? தெரியாதென்றால், இப்போது தெரிந்துகொள்ளுங்கள். சூரியன் மறையாத 6 இடங்கள் பூமியில் உள்ளது. இதை மிட்நைட் சன் ஏரியா என்று அழைக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் தொடர்ச்சியாக 70 நாட்களுக்கும் மேலாக வெறும் பகல் பொழுதை மட்டும் கழிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவுப் பொழுதே இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?

இரவுப் பொழுதே இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?

இரவுப் பொழுதே இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.இரவே இல்லாத பகல் பொழுதை மட்டும் நீங்கள் அனுபவிக்க முடிந்தால், இந்த இடங்களுக்கு நீங்கள் நேரில் சென்று புதிய அனுபவத்தைப் பெறலாம். இது உண்மை தானா? சும்மா சொல்லாதீங்கப்பா என்று நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால், நீங்கள் சந்தேகிக்க வேண்டிய அவசியமே தேவையில்லை. ஏனெனில், இந்த செய்தி முழுமையாக உண்மையானது தான்.

பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..

இந்த இடங்களுக்கு நேரில் சென்றால் வெறும் பகல் பொழுதை மட்டும் அனுபவிக்கலாமா?

இந்த இடங்களுக்கு நேரில் சென்றால் வெறும் பகல் பொழுதை மட்டும் அனுபவிக்கலாமா?

நாங்கள் சொல்லும் குறிப்பிட்ட காலத்தில், நீங்கள் இந்த 6 இடங்களுக்கு நேரில் சென்றால் வெறும் பகல் பொழுதை மட்டுமே உங்கள் வாழ்நாளில் அனுபவிக்க முடியும். இந்த தகவல் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள மேலே இணைக்கப்பட்டுள்ள பதிவைப் படியுங்கள். இது போன்ற சுவாரசியமான தகவல்கள், அறிவியல் தொடர்பான செய்திகள், புதிய தொழில்நுட்பம் பற்றிய தகவலை உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Astronaut Shares Amazing Fiery Green Earth Aurora Pic From ISS Space Station : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X