மேகமாய் வந்து போகிறேன்: மேகக்கூட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்ட விண்வெளி வீராங்கணை.!
நாசா தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் நாசாவின் விண்வெளி வீராங்கணை கெய்லா பரோன் பூமியின் அழகிய புகைப்படங்களையும், மேகக்கூட்டங்களின் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார், தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.

அதாவது கடந்த நவம்பர் மாதம் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் நாசா விண்வெளி வீராங்கணை கெய்லா பரோன். தற்போது இவர் விண்ணில் இருந்து கொண்டே பூமியின் அழகிய புகைப்படங்களையும், மேகக்கூட்டங்களின் புகைப்படங்களையும் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கெய்லா பரோன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அதில் விண்வெளியில் இருந்து மேகங்களின் புகைப்படங்களைப் பார்ப்பதில் நீங்கள் சோர்வடையவில்லை என்று நம்புகிறேன், ஏனெனில் அவற்றை எடுப்பதில் நான் இன்னும் சோர்வடையவில்லை என்று எழுதி இருந்தார்.
இப்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி வருகிறது. பின்பு இந்த படங்களை வெளியிட்டதற்கு நன்றி எனக்கூறி இணையவசிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் சில நாடுகள் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தை வடிவமைத்தன. குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இதுவரை அமெரிக்கா, ரஷ்யா உட்பட 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகளை நடத்தி விட்டு திரும்பி வந்துள்ளனர். துவக்கத்தில் இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 15 ஆண்டுகள் வரை மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதன்பின்பு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுகப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்பாடு வரும் 2031 ஆண்டுடன் நிறைவு பெறும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாதெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையமான ISS இல் தொடர்ந்து பல விதமான கோளாறுகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக காலாவதியான உபகரணங்கள் மற்றும் வன்பொருள் போன்றவற்றின் மூலம் விண்வெளி நிலையத்தில் பல கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இன்னும் சில காலத்தில் "சரிசெய்ய முடியாத" அளவிற்குத் பிரச்சனைகளைசந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்தனர். எனவே இதை தொடர்ந்து தான் சர்வதேச விண்வெளி நிலையத்தை பூமிக்கு திரும்ப பெறும் நடவடிக்கை குறித்து நாசா ஆய்வு செய்து வருகிறது.

வரும் 2031 ஜனவரியில் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவது குறித்து விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர். அதாவது பூமிக்கு திரும்பும் சர்வதேச விண்வெளி நிலையம், பாயிண்ட் நெமோ எனப்படும் தெற்கு பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியில் கடலில் மூழ்கடிக்கப்படும் என நாசா சார்பில் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாயிண்ட் நெமோ என்பது பசிபிக் கடலில் உள்ள புள்ளியாகும். இது நிலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதுமற்றம் பல விண்கலங்களுக்கு இது நீர் கல்லறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications