வானத்தை பாருங்கள்: 94000 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி மிக ஆபத்தான சிறுகோள்- பூமிக்கு ஆபத்து இருக்கா?

|

மிகப்பெரிய சிறுகோள் ஆகஸ்ட் 21 (இன்று) பூமியை மிக அருகில் கடக்கும் என எர்த்ஸ்கி தெரிவித்துள்ளது. 2016 AJ193 என பெயரிடப்பட்ட சிறுகோள் பூமியை கடந்து மிக அருகில் பறக்கும் எனவும் இந்த சிறுகோள் அதன் 5.91 ஆண்டு சுற்றுப்பாதையில் சூரியனை நோக்கி விரைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு பூமியை நெருங்குவதால், 2016 AJ193 என்ற சிறுகோள் ஆபத்தானது என நாசா வகைப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி கடக்கும் சிறுகோள்

இந்த சிறுகோள் ஒரு மைல் அகலத்தில் அதாவது 1.4 கிலோமீட்டர் அகலத்துடன் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 4500 அடி விட்டம் கொண்டது. இந்த சிறுகோள் ஆனது ஒரு மணி நேரத்திற்கு 58,538 மைல்கள் அதாவது ஒரு மணி நேரத்திற்கு 94,208 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது வினாடிக்கு சுமார் 16 மைல்கள்., விநாடிக்கு 26.17 கிலோமீட்டர் வேகமாகும். ஆகஸ்ட் 21 ஆம் தேதி கடக்கும் இந்த சிறுகோள் ஆனது குறைந்தபட்சம் அடுத்த 65 ஆண்டுகளில் பூமிக்கு அருகில் இருக்கும் சிறுகோள் ஆகும்.

பூமியுடன் மோத வாய்ப்பு இல்லை

பூமியுடன் மோத வாய்ப்பு இல்லை

பூமி அதன் தோராயமான பாதையில் உள்ளது என்றாலும் அது கிரகத்தை தாக்காது என கூறப்படுகிறது. இந்த சிறுகோள் பூமியில் இருந்து 8.9 லூனார் தொலைவில் கடந்து செல்லும். சிறுகோளின் சுற்றுப்பாதையை ஆய்வு செய்வதன் மூலம் அது பூமியுடன் மோத வாய்ப்பு இல்லை என எர்த்ஸ்கை தெரிவித்துள்ளது. நாசா வானியலாளர்கள் ரேடாரைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 20 மற்றும் ஆகஸ்ட் 24 முதல் சிறுகோளை கண்காணிப்பார்கள்.

மிக நெருக்குமான அணுகுமுறை

பூமிக்கு மிக நெருக்குமான அணுகுமுறையானது ஆகஸ்ட் 21,2021 காலை 11:30 மணி முதல் இரவு 8:40 வரை நெருக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது. எர்த்ஸ்கை தகவல்படி சூரிய உதயத்திற்கு சில மணிநேரத்துக்கு முன்பு இந்த சிறுகோளை காணலாம் என தெரிவித்தது.

2063 இல் பூமிக்கு அருகில் வரும்

2063 இல் பூமிக்கு அருகில் வரும்

இந்த சிறுகோள் ஆனது வெறும் கண்களுக்கு தெரியாது எனவும் இருப்பினும் வானியலாளர்கள் சிறப்பு கருவி மூலம் இதை நெருக்கமாக பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அபாயகரமானதாக வகைப்படுத்தப்பட்ட இந்த பொருள் அடுத்தது 2063 இல் பூமிக்கு அருகில் வரும் எனவும் நாசா அதன் சுற்றுப் பாதையை கணித்து வருவதாகவும் இந்த முறை கிரகத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

விண்கலன் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

நினைத்து பார்க்கமுடியாத பள்ளங்கள்

நினைத்து பார்க்கமுடியாத பள்ளங்கள்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிர்ந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியாத பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்

சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Asteroid Closely Approach to Earth on August 21 at 94000 Kmph Speed

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X