போலீசார் பெயரில் 17 போலி பேஸ்புக் கணக்கு: அஸ்ஸாம் வாலிபர் கைது.!

சமூக வலைதளமான பேஸ்புக்கில் மில்லியன் கணக்கில் பொது மக்கள் கணக்கு வைத்துள்ளனர்.

|

சமூக வலைதளமான பேஸ்புக்கில் மில்லியன் கணக்கில் பொது மக்கள் கணக்கு வைத்துள்ளனர். சமூகத்தில் நடக்கும் அன்றாடம் நிகழ்வுகளை வீடியோவாகவும், புகைப்படமாகவும், எழுத்துரு வடிவமாகவும் பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஏராளமானோர் அடுத்தவர்களின் பெயரில் போலி கணக்குகளை வைத்து தவறான செய்திகளை பரப்பு வருகின்றனர்.

17 போலி அக்கவுண்ட்:

17 போலி அக்கவுண்ட்:

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை கொண்டு 17 போலி அக்கவுண்ட்களை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து புகார் வந்தது. இதையடுத்து அந்த நபரை தேடும் பணியில் போலீசார் இறங்கினர்.

ஒரே ஐபி முகவரி:

ஒரே ஐபி முகவரி:

அவர் பயன்படுத்திய பேஸ்புக் கணக்குள் ஒரே ஐபி முகவரியில் இருந்தது. போலீசார் அவர் யார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, தான் தெரிந்தது அந்த நபர் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் என்று..

போலீஸ்சை நண்பனாக காட்ட முடிவு:

போலீஸ்சை நண்பனாக காட்ட முடிவு:

போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, கவுகாத்தி நகரை சேர்ந்த சுலைமான் இப்ராம்ஹிம் (30) எனத் தெரியவந்தது. மேலும் விசாரிக்கையில், போலீஸ் உயர் அதிகாரிகளை படங்களை கொண்டு 17 போலி கணக்குகளை வைத்து இருந்ததும். அவர்களை தனக்கு நண்பன் போல் மற்றவர்களிடம் காட்டிக் கொள்ளவே சுலைமான் தெரிவித்துள்ளான்.

கைது நடவடிக்கை:

கைது நடவடிக்கை:

போலீசாரின் பெயரிலேயே போலி கணக்கு வைத்து இருந்ததால், அவரை வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதுபோன்று யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்துவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Assam man creates fake Facebook profiles of 17 police officers, ‘friends’ them: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X