அமெரிக்காவில் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்தும் ஆசியர்கள்

அமெரிக்காவில் 100 விழுக்காடு மக்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் அமெரிக்காவில் பெரும்பாலும் எல்லாருமே மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோரும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் வாழும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களில் 66 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
அதுபோல் 56 சதவீம் ஹிஸ்பேனிக்ஸ் மற்றும் 55 சதவீத ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இமெயில்களைப் பார்ப்பதற்கும், கேம் விளையாடுவதற்கும் மற்றும் இணைய தளத்தை தேடுவதற்கும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதாக நீல்சன் என்ற ஆய்வு கூறியிருக்கிறது.
அமெரிக்காவில் மொத்தம் 55.5 சதவீத அமெரிக்கர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் வெள்ளை இனத்து மக்கள் 45 சதவீதம் பேர் ஆவர். இதை நியூ யார்க் போஸ் தெரிவித்திருக்கிறது.
அதோடு வயதானவர்களைவிட இளைஞர்கள் தான் ஸ்மார்ட்போன்ளை அதிகம் வைத்திருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. அதாவது 18 முதல் 19 வயதிற்குட்பட்ட 66 சதவீதம் பேர் அமெரிக்காவில் ஸ்மார்போன்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் 65 வயதிற்குட்பட்டவர்களில் 11 சதவீதம் பேரே ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications
