Subscribe to Gizbot

என்ஜினீயராக ரூ.24 லட்சம் ஈட்டிய சச்சின், விவசாயியாக ரூ.2 கோடி ஈட்டுகிறார்.!

Written By:

முதலில் ஒரு சின்ன கதை. சட்டீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மேத்பர் கிராமத்தில் வசிக்கும் வசந்த் ராவ் காலே அவரது காலம் முழுக்க ஒரு அரசுப் பணியாளராக இருந்தார். அவர் தனது வேலையில் இருந்து ஓய்வு பெறும் போது அவருக்குள் பொதுவான ஒரு ஆசை எழுந்தது - அதாவது நீண்ட காலமாக செய்ய வேண்டும் என்று விரும்பிய - விவசாயம். ஆசை ஒருபக்கம் ஒருபக்கம் இருப்பினும் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் வழக்கமான சவால்கல் அவரை விவசாயம் செய்ய விடாமல் பயம் கொள்ள செய்தன.

அதனால் அவர் விவசாயத்தில் களமிறங்கவே இல்லை. வசந்த்தின் பேரன் ஆன சச்சின் அடிக்கடி கிராமத்தில் அவரை பார்க்கவும், தாத்தா கூறும் வேளாண்மை சார்ந்த கதைகளை கேட்பதற்காகவுமே கவந்து இழுக்கப்பட்டுள்ளான். அங்கு தான் விவசாயம் சார்ந்த முதல் விதைகள் சச்சினின் மாதத்தில் விழுந்துள்ளன.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பெரும்பாலான இந்திய பிள்ளைகளை போலவே

பெரும்பாலான இந்திய பிள்ளைகளை போலவே

எனினும், இந்தியாவில் பல நடுத்தரக் குடும்பங்களை போலவே சச்சினின் பெற்றோர்கள் அவனை ஒரு பொறியாளராகவோ அல்லது ஒரு மருத்துவராகவோ உருவாக்க நினைத்தனர். படிப்பில் ஆர்வம் கொண்ட சச்சின் பெரும்பாலான இந்திய பிள்ளைகளை போலவே பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் நன்கு கல்வி கற்று ஒரு பொறியாளனாக உருவாகினான். அத்தோடு நில்லாது பிறகு அவரது எம்பிஏ (நிதி) பட்டமும், பின்னர் சட்டபடிப்பு பட்டமும் பெறுகிறார்.

வெற்றி கொள்ள இயலவில்லை

வெற்றி கொள்ள இயலவில்லை

2007-ஆம் ஆண்டில் சச்சின் மேலும் வளர்ச்சி பொருளாதாரம் சார்ந்த தனது பிஎச்டிபடிப்பை தொடங்குக்கிறார். அங்கு அவருக்குள் தொழில் முனைவோர் சார்ந்த தீ மனதில் பற்றவைக்கப்பட்டுள்ளது. நாம் ஏன் வேறு யாருக்காகவோ உழைக்க வேண்டும்.? நாம் என் நமக்கான நிறுவன வாழ்க்கையில் வெற்றி கொள்ள இயலவில்லை என்ற பல எண்ணங்கள் சச்சினுக்குள் எழுந்துள்ளது, அந்த எண்ணங்கள் அவரை தொந்தரவு செய்துள்ளது.

முடிவு

முடிவு

தொழில்முனைவோர்களுக்கான விருப்பங்களை பற்றி நினைக்கும் போது, உணவு தொழில்கள் தான் மிகவும் முக்கியம் என்ற முடிவுக்கு அவர் வருகிறார். குறிப்பாக பெரும்பாலானவர்களால் மிகவும் நிராகரிக்கப்படும் ஒரு தொழில் என்பதால் இதை தேர்வு செய்கிறார். இதற்கு பின்புலமாக அவரின்தாத்தா அவருக்கும் வழங்கிய வேளாண்மை பாடங்கள் நிற்கின்றன.

வளர்க்கும் கலை

வளர்க்கும் கலை

"எந்தக் கட்டத்திலும் ஒருவன் பணம் சம்பாதித்து இல்லாமல் வாழ முடியும் ஆனால் உணவு இல்லாமல் வாழவே முடியாது" என்று சச்சினின் தாத்தா அடிக்கடி கூறியது சச்சினின் மனதிரற்க்குள் நன்றாக பதிந்து விட்டிருந்தது. எனவே எனக்கான சொந்த உணவு வளர்க்கும் கலையை நான் கற்றுக்கொண்டால், எந்த நிலையில் இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் நான் சாக மாட்டேன் என்ற ஒரு முடிவுக்கு சச்சின் வருகிறார்.

24 லட்சம் சம்பளம்

24 லட்சம் சம்பளம்

ஆக சச்சின் அவரின் முன்னோர்களின் 25 ஏக்கர் நிலத்தில் ஒரு பண்ணையை என்றாவது ஒரு நாள் அமைக்க வேண்டும் அந்த முழு நிலத்தையும் மீண்டும் உயிர்ப்பிக்க வைக்க வேண்டும் என்ற கனவை தினம் தாங்குகிறார். பின்னர் 2013-ல், வருடத்திற்கு 24 லட்சம் சம்பளம் வழங்கும் புணி லாயிட் மேலாளர் வேலையையும், குர்கானில் அவர் வாழ்ந்த ஆடம்பரம வாழ்க்கையையும் துறந்துவிட்டு ஒரு விவசாயி ஆக மெத்பர் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தார்.

தாத்தா கூறிய வார்த்தைகள்

தாத்தா கூறிய வார்த்தைகள்

முதல் வேலையாக "விவசாயம் என்பது ஒரு ஆபத்தான தொழில் மற்றும் மிகப்பெரிய பிரச்சினைகளை தொழிலாளர்கள் எதிர்க்கல்ல நேரிடும். ஆக ஒரு உழைப்பாளிக்கு அவர்கள் ஏற்கனவே பெறும் பணத்தை விட அதிக பணத்தை உன்னால் வழங்க முடிய வேண்டும். அதுவரை உன்னால் தொழிலாளர்களை பெற முடியாது" என்று அவர் தாத்தா கூறிய வார்த்தைகள் நினைவு கோறுகிறார் சச்சின்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

பின்னர் சச்சின் 15 ஆண்டுகளாக சேமித்த அவரது முழு வருங்கால வைப்பு நிதியையும் விவசாயம் செய்ய முதலீடு செய்கிறார் ஒருவேளை இதில் வெற்றிகொள்ளவில்லை எனில் மீண்டும் அவரை பழைய நிறுவன வாழ்க்கைக்கு செல்ல முடியாது என்பதையும் நன்கு அறிந்திருந்தார் சச்சின், ஆக அவருக்கு பக்கபலமாக இருக்க அவர் தனது கையில் எடுத்துக்கொண்டது - தொழில்நுட்பத்தை.!

வேளாண்மையின் ஒப்பந்த விவசாயம்

வேளாண்மையின் ஒப்பந்த விவசாயம்

2014-ஆம் ஆண்டில் சச்சின், அவரின் சொந்தமான மற்றும் மிக புதுமையான அக்ரிலைஃப் சொல்யூஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்தை தொடங்கினார். அதற்கு வேளாண்மையின் ஒப்பந்த விவசாயம் மாதிரி விவசாயிகளின் உதவிகளையும் அவர் பெறுகிறார். மேலும் சச்சின் புதிய தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மையின் சரியான வழியில் கற்பிக்க பிலாஸ்பூரில் உள்ள வேளாண் கல்லூரியில் இருந்து நிபுணர்களையும் பணியமர்த்தினார். ஒப்பந்த அடிப்படையிலான வேளாண்மையானது மிகவும் எளிமையான மற்றும் இலாபகரமான ஒன்றாக இருந்துள்ளது.

இருவருக்குமே வெற்றி

இருவருக்குமே வெற்றி

இந்த ஒப்பந்த விவசாயமானது விவசாய உற்பத்தி வாங்குபவர் மற்றும் விவசாய தயாரிப்பாளர்க்ளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். வாங்குபவர் நிதிகளானது விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான எல்லா வகையிலும் உதவும். பதிலுக்கு விவசாயி பயிர் வாங்குபவர் பரிந்துரைத்த மற்றும் வாங்குபவரின் முறைமையைப் பொறுத்து தயாரிப்புகளை நிகழ்த்த வேண்டும். இதனால் வாங்குபவர்களுக்கும் விவசாயிகளுக்கும் என இருவருக்குமே வெற்றி சாத்தியமாகும்.

நெல் மற்றும் பருவகால காய்கறி

நெல் மற்றும் பருவகால காய்கறி

முக்கியமாக சூரிய சக்தி பேனல்கள் உட்பட முடிந்த அளவிலான தொழிநுட்ப ஆதரவுகளின் மூலம் சச்சின் தனக்கு சொந்தமான 24 ஏக்கர் நிலத்தில் நெல் மற்றும் பருவகால காய்கறிகளை தொடர்ந்து வளர்த்துள்ளார். காலப்போக்கில், அந்த கிராமத்தின் விவசாயிகள் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நெல் மட்டுமே பயிரிடுகிறார்கள் மற்றும் அடுத்த எட்டு மாதங்களுக்கு நிலம் வெறுமனே கிடப்பதை சச்சின் கண்டறிகிறார்.

புதிய விவசாய முறை

புதிய விவசாய முறை

பின்னர் அந்த கிராமத்து விவசாயிகளுக்கு நெல் அறுவடைக்கு பிந்தைய பருவகால காய்கறிகள் பற்றிய தெளிவினை வழங்குகிறார். பின்னர் ஆண்டு முழுவதும் வளரும் மாதிரியான ஒரு பண்ணை மாதிரியை சச்சின் அறிமுகப்படுத்துகிறார். பின்னர் சச்சினின் புதிய விவசாய முறைகளை கண்டு அதே உத்திகளை அவருடன் இணைந்து பிற விவசாயிகளும் மேற்கொள்ள தொடங்கினர்.

சுமார் ரூ.2/- கோடி வரை

சுமார் ரூ.2/- கோடி வரை

இன்று, சச்சினின் நிறுவனத்தின் கீழ, 200 ஏக்கர் நிலத்தில் 137 விவசாயிகள் மகிழ்ச்சியாக விவசாயம் செய்து ஆண்டுக்கு சுமார் ரூ.2/- கோடி வரை பணம் ஈட்டுகின்றனர். சச்சின் அவரது பண்ணைகளில் சமீபத்திய தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தவும் தவறவில்லை. தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற சச்சினின் மனைவி கல்யாணி, நிறுவனத்தின் நிதி பகுதி போன்றவைகளை கவனித்துக் கொள்கிறார்.

ஆரோக்கியமான உணவு உண்ணுகிறோம்

ஆரோக்கியமான உணவு உண்ணுகிறோம்

கல்யாணியிடம் நகர வாழ்க்கையை தவறவிடுகிறாயா என்று சச்சின் ஒருமுறை கேட்டபொழுது அவர் இபப்டி கூறுகிறார் "ஆம், சிட்டிகளில் உள்ள மால்கள் மற்றும் மெட்ரோ ஆகியவைகளையும் அதில் நாங்கள் ஒன்றாக கழித்த பொழுதுகளையும் சில நேரங்களில் நான் தவற விடுகிறேன். ஆனால், மாதத்திற்கு 20 நாட்கள் சச்சின் பயணங்களில் இருப்பார். அதுவொரு பெருநிறுவன வேலை ஆனால் இங்கோ நகரின் பறக்கும் வாழ்க்கைக்கு பதிலாக, முற்றிலும் அன்பான மற்றும் மிகவும் ஆரோக்கியமான உணவு உண்ணுகிறோம் என்பதும் எனக்கு தெரியும்" என்கிறார் கல்யாணி.!

அழிவு பாதைக்குள் நுழையாது

அழிவு பாதைக்குள் நுழையாது

இப்படியாக நமக்குள் ஆயிரம் சச்சின்கள் மற்றும் லட்சோப லட்சம் வசந்த் ராவ் காலே தாத்தாக்கள் உள்ளன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - விவசாயம். படித்தவர்களுக்கு தொழில்நுட்பங்களை எப்படி அணுக வேண்டும், எதையெல்லாம் மாற்றாய் கொண்டு வர வேண்டும் என்ற அறிவு இருக்கும். படிக்காத பேரறிவாளர்களான எம் விவசாய பெருமக்களுக்கு எப்படி விவசாயம் செய்ய வேண்டுமென்று தெரியும். இரண்டும் ஒன்றாக கலந்தால் - விவசாயமும் விவசாயிகளும் எந்த ஜென்மத்திலும் அழிவு பாதைக்குள் நுழையாது, நுழைய மாட்டார்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
As a Farmer He Earns Rs 2 Crore using latest technologies at his farms. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot