Subscribe to Gizbot

இந்தியாவை பின்தள்ளிய பாக் & இலங்கை; பதிலடி கொடுக்க களத்தில் குதித்த ஜியோ - ஏர்டெல்.!

Written By:

சமீபத்தில் வெளியான 4ஜி வேகம் சார்ந்த ஆய்வறிக்கையில் இந்தியாவின் 4ஜி சேவையானது, பிற 88 நாடுகளில் (அண்டை நாடான பாகிஸ்தான் உட்பட) கிடைக்கும் 4ஜி வேகத்தை விட மிக மெதுவாக இருப்பது வெளிப்படுத்தப்பட்டது.

இந்த முடிவின் விளைவாக உலக அரங்கில் இந்தியா ஏளனம் செய்யப்பட்டது. இத்தனைக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ சேவையினால் குதிரை வேகத்தில் இந்திய மக்கள் அனைவருமே 4ஜி சேவைக்குள் புகுந்தும் ஒரு புண்ணியமும் இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கற்பனை செய்ய முடியாதவொரு நிலைமை .!

கற்பனை செய்ய முடியாதவொரு நிலைமை .!

குறைந்தது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா பயன்படுத்தும் வேளையிலேயே இந்தியாவிற்கு 14-வது இடம் என்றால், ஒருவேளை ஜியோவின் அறிமுகம் நிகழாமல் இருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பது கற்பனை செய்ய முடியாதவொரு கேள்வி-பதிலாகும்.

தைரியமான முடிவுகளை எடுக்கும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள்.!

தைரியமான முடிவுகளை எடுக்கும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள்.!

இதையெல்லாம் மனதிற்கொண்டு, இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தங்களது எல்லைகளை தொட்டுப்பார்க்கும் முயற்சியில், அதாவது 5ஜி வேக சோதனைகளை மேற்கொள்ளும் முடிவுகளை தைரியமாக எடுத்து, அதில் வெற்றியும் கண்டுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்.!

முதல் இந்திய 5ஜி வேக சோதனை.!

முதல் இந்திய 5ஜி வேக சோதனை.!

இதுவரை 1ஜிபிபிஎஸ் அளவிலான வேகத்தையே இலக்காக கொண்டிருந்த பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்த முதல் இந்திய 5ஜி வேக சோதனையில், நிறுவனத்தின் திட்டங்களானது 3ஜிபிபிஎஸ் என்கிற வேகத்தை எட்டியுள்ளது. இந்த சோதனையில் சீனாவின் ஹூவாய் நிறுவனமானது, ஏர்டெல் உடன் இணைந்து செயல்படுத்தும் குறிப்பிடத்தக்கது.

மொபைல் நெட்வொர்க்கிற்கான மிகப்பெரிய அளவீடு.!

மொபைல் நெட்வொர்க்கிற்கான மிகப்பெரிய அளவீடு.!

டெல்லிக்கு அருகே உள்ள மானேசர் நகரில் நடத்தப்பட்ட இந்த பார்தி ஏர்டெல்-ஹூவாய் 5ஜி சோதனையில், மொபைல் நெட்வொர்க்கிற்கான மிகப்பெரிய அளவீடு - 100 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட 3.5 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் - பதிவாகியுள்ளது.

இந்திய மக்களின் மெய்யான தேவைகளை உள்வாங்கிய ஜியோ.!

இந்திய மக்களின் மெய்யான தேவைகளை உள்வாங்கிய ஜியோ.!

இந்திய மக்களின் மெய்யான தேவைகளை உள்வாங்கிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஏற்கனவே வாடிக்கையாளர்களை தன்பக்கம் மிகவேகமாக ஈர்த்துக்கொண்டிருந்தாலும் கூட, வேகமான 4ஜி நெட்வொர்க் கிடைக்கும் உலகின் 88 நாடுகளில் இந்தியாவிற்கு 14-வது இடம் தான் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான், கஜகஸ்தான், இலங்கை எல்லாம் ஆன்-டாப்.!

பாகிஸ்தான், கஜகஸ்தான், இலங்கை எல்லாம் ஆன்-டாப்.!

14-வது இடமென்பது ஒரு நிலை தானே.?! - என்று மனதை தேற்றிக்கொள்ளவே முடியவில்லை. ஏனென்னில் 4ஜி வேகத்தின் அடிப்படையில் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கும் ஓப்பன்சிக்னல் (OpenSignal) அறிக்கையில் பாகிஸ்தான், கஜகஸ்தான், சவூதி அரேபியா, இலங்கை மற்றும் அல்ஜீரியா போன்ற (அண்டை) நாடுகளானது இந்தியாவின் வேகத்தை விட அதிகமான 4ஜி வேகத்தை கொண்டுள்ளது.

ஜூன் மாத வாக்கில் 5ஜி சாலை வரைபடம் உறுதியாகிறது.!

ஜூன் மாத வாக்கில் 5ஜி சாலை வரைபடம் உறுதியாகிறது.!

மிக விரைவில், சிறந்த 4ஜி வேகம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றை பிடிக்கும் முனைப்பில் இந்தியா டெலிகாம் நிறுவனங்கள் பணியாற்ற தொடங்கியுள்ளன. குறிப்பாக பார்தி ஏர்டெல் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில், அதன் 5ஜி சேவை திட்டங்களுக்கான சாலை வரைபடத்தை உறுதி செய்யவுள்ளது.

5ஜி ஆனது முடிவில்லாத ஒன்றாகும்.!

5ஜி ஆனது முடிவில்லாத ஒன்றாகும்.!

பார்தி ஏற்டல் நிறுவனத்தின் செயலாளர் ஆன அருணா சுந்தரராஜனின்படி " 5ஜி ஆனது முடிவில்லாத ஒன்றாகும். அது ஒட்டுமொத்த டெலிகாம் விளையாட்டையே மாற்றியமைக்கும். அதன் வழியாக நமது வாழும் மற்றும் வேலை செய்யும் முறை மாறும். இந்தியாவில் ஒரு வலுவான 5ஜி சுற்றுச்சூழலை உருவாக்குவதற்காக, எங்கள் கூட்டாளிகளுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்குகிறோம்".

How to check PF Balance in online (TAMIL)
இன்னும் மலிவான விலையில் டேட்டா கிடைக்கும்.!

இன்னும் மலிவான விலையில் டேட்டா கிடைக்கும்.!

5ஜி சேவையின் அறிமுகத்தின்கீழ் அதிவேக டேட்டாவுடன் சேர்த்து இன்னும் மலிவான விலையில் டேட்டா கிடைக்கும் என்பதும் உறுதி. ஆக இனிதான் டெலிகாம் நிறுவனங்களின் (ஜியோ - ஏர்டெல் - ஐடியா - வோடாபோன் - பிஎஸ்என்ல்) உண்மையான ஆட்டம் ஆர்மபிமாகவுள்ளது என்பதும் வெளிப்படை. மேலும் பல டெலிகாம் துறை பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
As 5G trials start, India ranks last in 4G speed rank worldwide. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot