முக்கிய பொறுப்பில் இருந்த ஆராய்ச்சியாளர் விலகல்.! கூகுள் சுந்தர் பிச்சை வருத்தம்.!
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதியும் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் உள்ளிட்ட அனைத்திற்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது இந்த கூகுள் நிறுவனம். குறிப்பாக மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க மிகவும் உதவியாக இருக்கிறது கூகுள் நிறுவனம்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சியாளராக பணிபரிந்த கறுப்பினத்தை சேர்ந்தடிம்னிட் கெப்ரு என்ற பெண் திடீரென பதவி விலகினார். ஆனால் அவர் கறுப்பின பெண் ஆராய்ச்சியாளர் என்பதால்
கூகுள் நிறுவனம் அவரை பழி வாங்கியது என்று மிகப் பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பின்பு இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அனுப்பியுள்ள ஒரு அறிக்கையில் கெப்ரு போன்ற திறமையான ஆராய்ச்சியாளர் மகிழ்ச்சியின்றி நிறுவனத்தில் இருந்து வெளியேறியதற்கு முழு பொறுப்பும் நிறுவனத்தை சார்ந்ததே.

எனவே இதுபோன்ற விவகாரங்களை மேலும் சிரத்தையுடன் அணுக கடைமைப்பட்டுள்ளோம் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். வெளிவந்த தகவலின் அடிப்படையில், ஒரு ஆய்வுக்கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவை வழிநடத்திய டிம்னிட் கெப்ரு என்பவர் தனது சக ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் மீது நிறம் மற்றும் பாலின ரீதியில் பாகுபாடு காட்டுவதாக விமர்சித்திருந்தார். இதையடுத்து கூகுள் நிறுவனத்தில் இருந்து கெப்ரு நீக்கப்பட்ட நிலையில், கூகுளின் ஊழியர்கள் 2000க்கும் மேற்பட்டோர் கெப்ருவின் நீக்கம் குறித்து நிறுவனத்திற்கு கடிதம் எழுதினர்.

இந்த நிலையில் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய சுந்தர் பிச்சை, நடந்தவற்றுக்கு தான் மன்னிப்பு கோருவதாகவும், ஊழியர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications