ஃபேஸ்புக் பதிவால் நடந்த கைது நடவடிக்கைகள்.!

ஒரு வலிமை வாய்ந்த அரசியல்வாதி அல்லது செல்வந்தரை ஃபேஸ்புக் பதிவு மூலம் டார்கெட் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

|

ஒரு வலிமை வாய்ந்த அரசியல்வாதி அல்லது செல்வந்தரை ஃபேஸ்புக் பதிவு மூலம் டார்கெட் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சமூக வலைத்தளங்கள் மூலம் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக இந்த வாரம் மட்டும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் பதிவால் நடந்த கைது நடவடிக்கைகள்.!

கடந்த வியாழன் அன்று ரஹத் கான் என்ற 22 வயது இளைஞர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவு செய்த ஒரு கருத்துக்காக நொய்டா போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல் உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு பதவியேற்ற ஒருசில மணி நேரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததாக நான்கு பேர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர், யோகி ஆதித்யநாத் பதவியேற்ற சில நிமிடங்களில் 'பூவர் லைட்' என்ற இரண்டே வார்த்தைகள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதால் கைது செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் பல நிகழ்வுகள் நடந்துள்ளது. அவற்றில் பேஸ்புக்கில் பதிவு செய்ததால் கைது செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 7 சம்பவங்களை தற்போது பார்ப்போம்

11ஆம் வகுப்பு மாணவர்

11ஆம் வகுப்பு மாணவர்

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராம்பூர் என்ற பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் செய்த குற்றம் ஃபேஸ்புக்கில் உத்தரபிரதேச அமைச்சர் ஆசம் கான் என்பவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார் என்று கூறப்பட்டது. அதன் பின்னர் இந்த இளைஞர் ஜாமீனில் வெளிவந்தார். இவரது கைதுக்கு சரியான விளக்கம் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட், ராம்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

 ராஜேஷ் குமார்

ராஜேஷ் குமார்

கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சிபிஐ எம் கட்சியை சேர்ந்த இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாரத பிரதமர் நரேந்திரமோடி குறித்து சர்ச்சைக்குரிய கமெண்டுக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் பதிவு செய்த புகைப்படம் ஒன்றில் காலணி ஒன்று பிரதமர் மோடியின் முகத்தில் இருப்பது போன்று இருந்தது. மேலும் அவருடைய பதிவில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருந்ததாகவும், அவரது கருத்து இரு பிரிவினர்களிடையே மோதலை ஏ'ற்படுத்தும் வகையில் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

 எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் கோவாவை சேர்ந்த தேவு சோடான்கர் என்பவர் கைது செய்யபப்ட்டார். கப்பல் துறையில் பணிபுரியும் இவரும் தனது ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்ததாக கைது செய்யப்பட்டார். இவர் மீது போலீசார் இந்தியன் பீனல் கோட் 153(A) மற்றும் 295(A) ஆகிய பிரிவுகளிலும் பின்னர் 66(A) என்ற பிரிவிலும் வழக்குப்பதிவு செய்தனர். மாநில ஒற்றுமைக்கு எதிராகவும், இரு பிரிவினர்களிடையே மோதலை தூண்டும் வகையிலும் இவரது ஃபேஸ்புக் பதிவு இருந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பெண்கள்

இரண்டு பெண்கள்

கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் உள்ள பால்கார் என்ற பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். சிவசேனா தலைவர் பால்தாக்கரே அவர்கள் காலமானதால் எதற்காக நகரம் முழுவதிலும் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் என்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பியதால் ஷாதின் தாடா மற்றும் ரேனு சீனிவாசன் ஆகிய இரண்டு இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கடைகளை அடைப்பதால் பால்தாக்கரே மீது மரியாதை வந்துவிடாது என்று இவர்களில் ஒருவர் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொருவர் இந்த கருத்தை லைக் செய்ததற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பெண்கள் மீது மத செண்டிமெண்ட்டுக்களை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்டு செக்சன் 295 ஏ என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்

 ரவி ஸ்ரீனிவாசன்

ரவி ஸ்ரீனிவாசன்

கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரியை ரவி ஸ்ரீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபரான ரவி ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கதில் பதிவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்

மாயன்க் மோஹன் சர்மா

மாயன்க் மோஹன் சர்மா

கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் மும்பையை சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சில அரசியல்வாதிகள் குறித்தும் அருவருக்கத்தக்க ஜோக்குகளை தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்ததாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்த மாயன்க் மோஹன் சர்மா மற்றும் கே.வி.ஜே ராவ் ஆகியோர்களை மும்பையை சேர்ந்த சைபர் க்ரைம் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இவர்கள் இருவரும் தேசிய கொடியை அவமதித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இருவரும் 12 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு, இருவரும் ஒருசில மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்பிகெஷ் மகாபத்ரா

அம்பிகெஷ் மகாபத்ரா

கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாதவ்பூர் என்ற பகுதியை சேர்ந்த அம்பிகெஷ் மகாபத்ரா மற்றும் சுப்ரதா செங்குப்தா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அம்பிகெஷ் மகாபத்ரா என்பவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்பதும் சுப்ரதா செங்குப்தா என்பவர் அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர்கள் இருவரும் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குறித்த சர்ச்சைக்குரிய கார்ட்டூன் ஒன்றை பலருக்கு ஷேர் செய்தனர் என்பதுதான் இவர்கள் மீதான குற்றச்சாட்டு.; இவர்கள் இருவர் மீதும் போலிசார் 93 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

ரூ.50 ஆயிரம்

ரூ.50 ஆயிரம்

இந்த கார்டூன் முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்யும் நோக்கத்தில் பரவி விடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்த வழக்கு கொல்கத்தா நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இருவருக்கும் ரூ.50 ஆயிரம் மேற்குவங்க மாநில அரசு தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

Best Mobiles in India

English summary
Arrest over a Facebook status: 7 times people landed in jail for posts against politicians : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X