முக்கிய அறிவுப்பு- மத்திய அரசு அதிரடி: கொரோனாவை டிராக் செய்வோம்: நம்ம சுத்தி எத்தன பேருக்கு கொரோனா?

|

உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

21 நாட்களுக்கு ஊரடங்கு

21 நாட்களுக்கு ஊரடங்கு

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.

ஆரோக்கிய சேது என்ற ஆப் அறிமுகம்

ஆரோக்கிய சேது என்ற ஆப் அறிமுகம்

இதையடுத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக ஆரோக்கிய சேது என்ற ஆப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சபாஷ்: ரயில், விமான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்., ஆனா ஒரு நிபந்தனை!சபாஷ்: ரயில், விமான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்., ஆனா ஒரு நிபந்தனை!

அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலி

அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலி

அரசு அறமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் தங்கள் இருப்பிடம்( ஜிபிஎஸ்) மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்கள் நமது அருகில் யாரேனும் உள்ளார்களா என்பதை காட்டும்.

அதிக ஆபத்து என எச்சரிக்கும்

அதிக ஆபத்து என எச்சரிக்கும்

இந்த செயலியின் பிரத்யேகம் என்னவென்றால் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து 6 தூரத்தில் நாம் இருந்தோம் என்றால் அது அதிக ஆபத்து என எச்சரிக்கும், இதையடுத்து உரிய எண்ணுக்கோ அல்லது 1075 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்து உதவியை பெற வேண்டும்.

கொரோனா தொற்று இருப்பவர்களிடம் தொடர்பு உள்ளதா

கொரோனா தொற்று இருப்பவர்களிடம் தொடர்பு உள்ளதா

அதேபோல் இந்த செயலியில் கொரோனா ஆப் தற்காப்பு முறை குறித்த விழிப்புணர்வு, மேலும் நமக்கு கொரோனா தொற்றோ அல்லது கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்பு இருந்தாலோ உடனடியாக அவர்களது தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும். இந்த தகவல்கள் வெளிநபர்களுக்கு பகிரப்படாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தலைதூக்கும் கொரோனா

தமிழகத்தில் தலைதூக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவாமல் இருக்க தமிழக அரசு, மாநகராட்சி, மருத்துவர்கள், ஊடகத்தினர்கள் சார்பில் பெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு செயலி

சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு செயலி

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் செல்போனை உபயோகிக்கும்படி ஒரு செயலியை உருவாக்கி இருக்கின்றனர். மேலும் இந்த செயலி குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந்த செயலி குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதை பார்க்கலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சி வலைதளத்தில் இருக்கும்

பெருநகர சென்னை மாநகராட்சி வலைதளத்தில் இருக்கும்

இந்த செயலியானது பெருநகர சென்னை மாநகராட்சி வலைதளத்தில் இருக்கும். அதில் சென்று கொரோனா மானிட்டரிங் என்பதை கிளிக் செய்து செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரவிக்கப்படுகிறது. மேலும் இந்த செயலியானது சென்னை மாநகராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அச்சம் இருந்தாலோ, அறிகுறி இருந்தாலோ இந்த செயலி மூலம் செல்பி

அச்சம் இருந்தாலோ, அறிகுறி இருந்தாலோ இந்த செயலி மூலம் செல்பி

சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரோனா இருக்கிறதா என அச்சம் இருந்தாலோ, அறிகுறி இருந்தாலோ இந்த செயலி மூலம் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். பின் வீடு தேடி மருத்துவத் துறை சேர்ந்த ஒருவர் வந்து சோதிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியருக்கு வந்த கொரோனா., செல்போன் தான் காரணம்- எப்படி தெரியுமா?செவிலியருக்கு வந்த கொரோனா., செல்போன் தான் காரணம்- எப்படி தெரியுமா?

ரத்த மாதிரியை சோதனை

ரத்த மாதிரியை சோதனை

வீட்டிற்கு வரும் மருத்துவத் துறையை சேர்ந்தவர் ரத்த மாதிரியை சோதனை செய்து கொரோனா காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா என தெரிவிப்பார். இந்த செயலியானது கொரோனா தொற்று பரவாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு கொரோனா அச்சத்தை போக்கவும் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Arogya setu: Covid19 tracker app introduced by central government!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X