அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் சாட்டிங் விவகாரம்: ராணுவ ரகசியத்தை முன்கூட்டியே விவாதித்த அர்னாப்!

|

ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த் தாஸ்குப்தா ஆகியோரின் மீது டிஆர்பி மோசடி வழக்கில் மும்பை காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

அர்னாப் கோஸ்வாமி மற்றும் தாஸ்குப்தா

இந்த குற்றப்பத்திரிக்கையுடன் அர்னாப் கோஸ்வாமி மற்றும் தாஸ்குப்தா இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் இணைக்கப்பட்டன.

500 பக்கங்கள் கொண்ட இவர்களது வாட்ஸ்அப் உரையாடல்கள் இந்தியாவையே உலுக்கும் விதமாக இருக்கிறது. இவர்களது

உரையாடல்களில் மத்திய அரசு தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

 புல்வாமா தாக்குதல் நடப்பதற்கு 20

அதில், புல்வாமா தாக்குதல் நடப்பதற்கு 20 நிமிடத்திற்கு முன்னதாக காஷ்மீரில் இந்தாண்டின் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது எனவும் ஒரே ஒரு சேனல்தான் களத்தில் இருந்தது எனவும் அர்னாப் கோஸ்வாமி தாஸ்குப்தாவிடம் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் வெற்றிப்பெற்றுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். அர்னாப் கோஸ்வாமி இந்த மெசேஜில் தனது சேனலின் டிஆர்பி குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அசுஸ் ROG போன் 3 மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழுவிவரம்.!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக

அதேபோல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலக்கோட்டில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழிக்கும் முயற்சியாக 26 பிப்ரவரி 2019 அன்று இந்திய விமானப்படை தாக்குதலை நடத்தியது. ஆனால் இது நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே பெரிய சம்பவம் ஒன்று நடக்கப்போகிறது என அர்னாப் கோஸ்வாமி தாஸ்குப்தாவிடம் தெரிவித்துள்ளார்.

தாஸ்குப்தா தாவூத் பற்றிய

அதற்கு பதிலளித்த தாஸ்குப்தா தாவூத் பற்றிய சம்பவமா என கேள்வி எழுப்பியுள்ளார். இல்லை பாகிஸ்தான், இந்த நேரத்தில் ஏதாவது பெரிய சம்பவம் நடக்க இருக்கிறது என அர்னாப் கோஸ்வாமி பதிலளித்துள்ளார். மேலும் இது நல்லது பெரிய மனிதருக்கு இந்த நேரத்தில் நல்லது எனவும் இதன்மூலம் அவர் தேர்தலில் ஜெயிப்பார் எனவும் அர்னாப் கோஸ்வாமி பதிலளித்துள்ளார். நார்மல் ஸ்டிரைக்கா அல்லது பெரிய சம்பவமா என தாஸ்குப்தா கேள்வி எழுப்ப நார்மல் ஸ்ட்ரைக்கைவிட பெரியது என அர்ணாப் பதிலளித்துள்ளார்.

 என ஸ்க்ரீன் ஷாட்டுடன் பகிர்ந்துள்ளார்

2019 ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி 370 பிரிவு ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தாஸ்குப்தாவிடம் 370-வது பிரிவு ரத்து

செய்யப்படும் உண்மையா என அர்னாப் கேள்வி எழுப்பியுள்ளார். ஆகஸ்ட் 4 2019 அன்று தனது சேனல் மூலம் ஜம்மூ காஷ்மீர் நிலைமை

குறித்த தகவல்களை பிரேக்கிங் செய்திகளாக கொடுத்ததாக அர்னாப் தாஸ்குப்தாவிடம் தெரிவித்துள்ளார். அதோடு பாஸ் நாங்கள்

12:19 மணிக்கு, ஆஜ் தக் 12:57 மணிக்கு பிரேக்கிங் கொடுத்தோம் என ஸ்க்ரீன் ஷாட்டுடன் பகிர்ந்துள்ளார். காஷ்மீர் 144 தடை

போடப்படபோகும் தகவல்களை முன்கூட்டியே தங்கள் சேனல் பிரேக் செய்தது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

500 பக்க உரையாடல்கள் வெளிப்படுத்துகிறது.

மத்திய அரசு தரப்பில் இருந்து அனைத்து நடவடிக்கைகளும் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த 500 பக்க உரையாடல்கள் வெளிப்படுத்துகிறது.

நிலையில் இதை விரிவாக விசாரிக்க

இந்த நிலையில் இதை விரிவாக விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோஷங்கள் எழுப்ப தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தகவலை அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்தவர்கள் யார் என தெரியவேண்டும் எனவும் அது பிரதமர் மோடியா அல்லது உள்துறை அமைச்சரா எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Arnab Goswami WhatsApp Chatting discusses military secrets affairs in advance: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X