பாக். எல்லையில் இந்தியாவின் நிலைப்பாடு! கேட்டால் கடுப்பாகி விடுவீர்கள்!
இந்த இடத்தில் பாக். எல்லையில் இந்திய ராணுவம் தனது பலத்தை கூட்டுகிறது என்று நீங்கள் நினைத்தால், அது சுத்த முட்டாள்தனமாகும்.
இந்திய ராணுவம் ஆனது ரஷ்யாவிடம் இருந்து மொத்தம் 464 ரஷ்ய போர் டாங்கிகளை கூடுதலாக கேட்டுள்ளது. சுமார் 13,448 கோடி ரூபாய் செலவின் கீழ் நடக்கும் இந்த ஒப்பந்தம் ஆனது வருகிற 2022 - 2026 என்கிற காலப்பகுதிக்குள் நிகழ்வுள்ளது.

இந்த இடத்தில் பாக். எல்லையில் இந்திய ராணுவம் தனது பலத்தை கூட்டுகிறது என்று நீங்கள் நினைத்தால், அது சுத்த முட்டாள்தனமாகும். ஏனெனில் பாகிஸ்தானும் ரஷ்யாவுடன் சுமார் 360 (இதே) டாங்கிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு உடன்பாட்டை விவாதித்து வருகிறது.

பீஷ்மா
ஆக பாகிஸ்தானிடம் இதே டாங்கிகள் இருக்கும். அப்போது இரு நாடுகளுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இருக்காதா? என்று கேட்டால் - இருக்கும், இரண்டு வித்தியாசம் இருக்கும். ஒன்று, வாங்கும் டாங்கிகளின் எண்ணிக்கை. மற்றொன்று ரஷ்யாவின் டாங்கிக்கு இந்தியா வைக்கும் பெயர் - பீஷ்மா.

ஆவடி எச்விஎப்-ல் உற்பத்தி செய்யப்படுகிறது
இந்திய இராணுவத்திடம் ஏற்கனவே மொத்தம் 1,070 டி-90 வகை டாங்கிகள் உள்ளன. அதில் 124 அர்ஜூன் டாங்கிகள் மற்றும் 2,400 பழைய டி-72 வகை டாங்கிகள் (அதில் 67 கவச துருப்பு) உள்ளன. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் இருந்து மொத்தம் 657 டி-90 டாங்கிகளை இந்தியா (ரூ. 8,525 கோடி செலவில்) இறக்குமதி செய்து உள்ளது. கூடுதலாக 1,000 டாங்கிகள் படிப்படியாக உரிமம் வழங்கப்பட்டு ரஷ்ய கருவிகளுடன் ஆவடி எச்விஎப்-ல் உற்பத்தி செய்யப்படுகிறது.

464 டாங்கிகள்
மீதமுள்ள 464 டாங்கிகள் ஆனது இரவு நேரங்களில் யுத்தம் செய்யும் திறனையும் கொண்டுள்ளதால் அவைகளை உற்பத்தி செய்வதில் சில தாமதம் ஏற்பட்டு உள்ளது. முதல் கட்டமாக அடுத்த 20 அல்லது 41 மாதங்களுக்குள் 64 டாங்கிகள் வழங்கப்படும் என்று நம்பத்தகுந்த ஆதாரம் ஒன்று அறிவிக்கிறது.

சக்தி கூடும்
இந்தியாவின் இந்த நடவடிக்கை ஆனது நிச்சயமாக இந்திய ராணுவத்தின் போர் மற்றும் சண்டையிடும் இயந்திரங்களை வலுவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். குறிப்பாக இந்தியாவின் "கோல்ட் ஸ்டார்ட்" அல்லது "ப்ரோ-ஆக்டிவ்" போன்ற வியூகத்திற்கு இவைகள் கைகொடுக்கும். அதன் விளைவாக இந்திய ராணுவத்தின் விரைவான அணிதிரளல் மற்றும் சக்திவாய்ந்த தாக்குதலின் உந்துதல்கள் உறுதி செய்யப்படும் தான். ஆனால் இதே போர் இயந்திரங்கள் பாகிஸ்தானிடம் இருக்கும் பட்சத்தில் எப்படி இந்திய ராணுவத்தின் சக்தி கூடும்?

ரஷ்யா
இது தவிர்த்து பாகிஸ்தான் ஆனது 50 க்கும் மேற்பட்ட கவச துருப்புகளை உள்ளடக்கியிருக்கும் தற்போதுள்ள இயந்திரமயமாக்கப்பட்ட படைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை கொண்டுள்ளது. அந்த திட்டத்தில் உக்ரைன் டி-80யூடி வகை டாங்கிகள் மற்றும் சீன வம்சாவளியைச் சேர்ந்த டாங்கிகளும் அடங்கும். இந்நிலைப்பாட்டில் தான் பாகிஸ்தான் ரஷ்யாவின் புதிய டி-90 டாங்கிகளை வாங்க விரும்புகிறது. பற்றாக்குறைக்கு சீனாவின் உதவியுடன் உள்நாட்டிலேயே சில உற்பத்திகளை செய்ய விரும்புகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி-90எஸ்
இந்தியாவின் இந்த சமீபத்திய பாதுகாப்பு நகர்வானது டி-90எஸ் டாங்கிகளை மையமாகக் கொண்ட மீளமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த போர் குழுக்கள், காலாட்படை, பீரங்கி, வான் பாதுகாப்பு, சிக்னல்கள் மற்றும் பொறியியலாளர்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்களின் பலத்தை அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

புல்வாமா
இதை ஒரு அதிரடி நடவடிக்கையாகவோ அல்லது பாகிஸ்தானின் புல்வாமா தாக்குதலுக்கு எதிரான ஒன்றாகவோ எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இது சார்ந்த அறிவிப்பை இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவட் எப்போதோ அறிவித்து இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மையில் சொல்லப்போனால் திட்டமிடப்பட்ட ஆயுத பயிற்சி ஆனது பாகிஸ்தானுடனான தற்போதைய அழுத்தங்கள் காரணமாக திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications