பயப்பட வேண்டாம்.. பதற வேண்டாம்.. Paytm ஆப் யூசர்களுக்கு பேடிஎம் நிறுவனமே விடுத்துள்ள எச்சரிக்கை!
அடிக்கடி பேடிஎம் (Paytm) ஆப்பை அப்டேட் செய்தால் மட்டும் போதாது. உங்களுக்கு வரும் பணம் அல்லது நீங்கள் அனுப்பும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால். ஒருபொழுதும் "இதையெல்லாம்" மறக்க கூடாது என்று கூறுவது போல.. பேடிஎம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஆன்லைன் வழியிலான பண மோசடிகள் (Money Fraud / Scams) நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. போலி (Fake) ஆன போன் கால், எஸ்எம்எஸ், ஒடிபி, லிங்க், க்யூஆர் ஸ்கேன் என பல வழிகளில் உங்களை குறி வைக்கும் ஆன்லைன் பண மோசடிகளில் சிக்கிக்கொள்வோமோ என்கிற பயமும், பதற்றமும் உங்களிடம் உள்ளதா?

"ஆம்" என்றால், பேடிஎம் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். மக்களை ஏமாற்றுவதற்காக பண மோசடி செய்பவர்கள் பின்பற்றும் / கையாளும் சில பொதுவான விஷயங்களை / வழிமுறைகளை (Common Ways and Things) பட்டியலிட்டு "உஷாராக இருக்கும்படி" பேடிஎம் நிறுவனம் தனது பயனர்களை எச்சரித்துள்ளது.
பண மோசடி செய்பவர்கள் கையாளும் மிகவும் பொதுவான விஷயங்களில், முதல் இடத்தில் இருப்பது - பேடிஎம் நிறுவனத்தில் இருந்து அழைப்பது போல் நடித்து வாடிக்கையாளர் ஒருவரின் தனிப்பட்ட தகவல் (Personal Information) மற்றும் பிற வங்கி விவரங்களை (Bank Details) கேட்பது தான். பேடிஎம் நிறுவனம் ஒருபோதும் பெர்சனல் தகவல்களை கேட்காது; அவைகளை யாருடனும் பகிர வேண்டாம் என்று பேடிஎம் அறிவுறுத்தியுள்ளது.
அடுத்ததாக - கேஒய்சி செயல்முறையை (KYC Process) முடிக்கும்படி அல்லது அதை முடிக்க உதவுகிறோம் என்று கூறி தெரியாத எண்களில் (Unknown Numbers) இருந்து வரும் மோசடி அழைப்புகள், போலியான எஸ்எம்எஸ்கள் உள்ளன. இதுவும் கூட ஒரு மோசடிதான் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பேடிஎம் நிறுவனமானது, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஸை (Screen Sharing Apps) நிறுவ வேண்டாம் என்றும், தெரியாதவர்களுடன் உங்களுடைய மொபைல் ஸ்கிரீனை ஷேர் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பணத்தைப் பெறுவதற்கு ஒருபோதும் யுபிஐ பின்னை (UPI PIN) உள்ளிடாதீர்கள் அல்லது க்யூஆர் கோட்-ஐ (QR Code) ஸ்கேன் செய்யாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பேடிஎம் ஆப்பின் பாஸ்வேர்ட்-ஐ (Password) யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்; லாபகரமான சலுகைகள் அல்லது டீல்கள் (Offers and Deals) என்று கூறி வரும் மெசேஜ்களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம்; கடைசியாக தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்க்களை (Links) ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் பேடிஎம் தன் பயனர்களை எச்சரித்துள்ளது.
மேற்கண்ட விஷயங்களை பின்பற்றினால், எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டால், ஆன்லைன் வழியிலான பணபரிமாற்றமானது மிகவும் பாதுக்காப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒருவேளை, நீங்கள் ஏதேனும் ஒரு வழியில் உங்கள் பணத்தை இழந்திருந்தால், அது தொடர்பான புகாரை (Complaint) உடனே பேடிஎம் நிறுவனத்திடம் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








