கொட்டும் மழை.. மொபைல் சிக்னல் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ்களை ட்ரை பண்ணுங்க..
இந்தியாவில் தற்போது உள்ள 4ஜி சேவை மற்றும் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக 5ஜி சேவை மூலம் அதிவேக இணையத்தைப் பயன்படுத்த முடிகிறது. ஆனால் தற்போது காற்று மற்றும் மழை அதிகமாக உள்ளதால் மொபைல் சிக்னல் (mobile signal) அல்லது டேட்டா இணைப்பு துண்டிக்கப்படுவது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் நமக்குத் தேவையான கோப்புகள் அல்லது நமக்குப் பிடித்ததை போனில் டவுன்லோட் செய்யவே முடியாது. அதேபோல் இன்டர்நெட் மெதுவாக இருந்தால் நமக்குப் பிடித்த கேம்கள் விளையாட முடியாது மற்றும் ஓடிடி தளங்களில் வீடியோ பார்ப்பது சிரமம் என்பது தான் உண்மை. ஆனாலும் இதை விரைவாகச் சரி செய்யக்கூடிய எளிய வழிமுறைகள் உள்ளன. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது மழையின் போது, மேகங்களும் நீர் துகள்களும் சிக்கலை சிதறடிக்கலாம். இதனால், கோபுரத்திலிருந்து வரும் சிக்னல் உங்கள் மொபைலை சரியாக அடையாமல் போக வாய்ப்பு உள்ளது.
நெட்வொர்க் செட்டிங்ஸ்: முதலில் உங்கள் போனின் நெட்வொர்க் செட்டிங்ஸ்-ஐ சரிபார்க்கவும், சில நேரங்களில் உங்கள் போன் தானாகவே 4ஜி அல்லது 5ஜிக்கு மாறுவதற்கு பதிலாக 2ஜி அல்லது 3ஜிக்கு மாறி இருக்கலாம். எனவே போனில் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று மொபைல் நெட்வொர்க் விருப்பத்தில் 4ஜி அல்லது 5ஜி என்பதைத் தேர்வு செய்யவும்.
குறிப்பாக இது சிக்னல் வலிமையை மேம்படுத்தும். ஒருவேளை போனில் சிக்னல் பலவீனமாக இருந்தால், உங்கள் போனில் நெட்வொர்க் மோட்-ஐ Automatic ஆப்ஷனுக்கு மாற்றலாம். இந்த ஆப்ஷன் சிக்னல் மிகவும் பலவீனமாக இருக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும்.
அதேபோல் உங்கள் போனில் செட்டிங்ஸ் > மொபைல் நெட்வொர்க் > நெட்வொர்க் ஆபரேட்டர்கள் என்ற பகுதிக்கு சென்று சர்ச் நெட்வொர்க் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் நீங்கள் வலுவான நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் மொபைல் போனின் சிக்னல் மிகவும் பலவீனமாக இருந்தால், Airplane Mode-ஐ இயக்கவும். இதை 10-15 வினாடிகளுக்குப் பின்பு ஆஃப் செய்யவும். குறிப்பாக இது உங்கள் போனின் நெட்வொர்க் இணைப்பை மீட்டமைத்து, டவர் (tower) உடன் இணைக்க உதவும். இது உடனடி சிக்னல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மழைக்காலத்தில் நீங்கள் அடிக்கடி சிக்னல் பிரச்சனையை சந்தித்தால், சிக்னல் பூஸ்டரை வாங்குவது நல்லது. இது உங்கள் வீட்டின் சிக்னல் வலிமையை அதிகரிக்கும் ஒரு சிறிய சாதனம் ஆகும். இதை உங்கள் வீட்டில் ஒரு ஜன்னலுக்கு அருகில் வைக்கவும். இது பலவீனமான சிக்னல்களை பிடித்து அவற்றை வலுவான சிக்னலாக மாற்றுகிறது. குறிப்பாக கிராமப்புற அல்லது தொலைதூரப் பகுதிகளில் இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஒருவேளை அனைத்து வழிகளையும் முயற்சித்த பிறகு சிக்னல் சிக்கல் தொடர்ந்தால் உங்கள் நெட்வொர்க் சேவை வழங்குநரின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள். அதுவும் உங்கள் பகுதியில் இருக்கும் டவரில் சிக்கல் இருக்கலாம். அதை அவர்களுக்குத் தெரியப்படுத்திச் சரிசெய்யலாம்.
சில சமயங்களில் சிம் கார்டின் உள்ளே இருக்கும் தூசி அல்லது குறைபாடுகளாலும் சிக்னல் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே சிம் கார்டை அகற்றி மென்மையான துணியால் சுத்தம் செய்து, அதை மீண்டும் சரியாகப் பொருத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








