Home
News

செம்ம ஆபர்.. உங்க Jio SIM-ஐ 1.5GB பிளானுக்கு ரீசார்ஜ் செஞ்சி இருக்கீங்களா? அப்போ முதல்ல இத படிங்க!

நீங்கள் ஒரு ஜியோ வாடிக்கையாளர் என்றால், உங்களுடைய ஜியோ சிம் கார்ட்டை, டெய்லி 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை கொண்டு ரீசார்ஜ் செய்துள்ளீர்கள் என்றால்.. ஜியோ அறிவித்துள்ள இந்த லேட்டஸ்ட் ஆபர் முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். இது என்ன ஆபர்? இதன்கீழ் என்னென்ன கிடைக்கும்? இதோ விவரங்கள்:

என்ன ஆஃபர்? நாம் இங்கே பேசுவது - கடந்த மாதம் ஜியோ நிறுவனம் சைலன்ட் ஆக அறிமுகம் செய்த ஜியோ ட்ரூ 5ஜி கிஃப்ட் வவுச்சர் ஆஃபரை (Jio True 5G Gift Voucher Offer 2024) பற்றித்தான். 1 ஆண்டுக்கு செல்லுபடியாகும் இந்த வவுச்சரின் விலை ரூ.601 ஆகும்.

உங்க Jio SIM-ஐ 1.5GB பிளானுக்கு ரீசார்ஜ் செஞ்சி இருக்கீங்களா?

இந்த வவுச்சரை ரீசார்ஜ் செய்யும் ஜியோ பயனர்களுக்கு ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா அணுக கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் முன்னதாக அனைவருக்கும் அணுக கிடைத்த ஜியோவின் இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் ஆனது, இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

கடந்த 2024 ஜூலை கமாதத்தில் நிகழ்ந்த கட்டண திருத்தத்தை தொடர்ந்து, ஒரு நாளைக்கு 2 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவை வழங்கும் திட்டங்களில் மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் அணுக கிடைக்கிறது. அதாவது டெய்லி 1ஜிபி அல்லது 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோ திட்டங்களின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் கிடைப்பதில்லை.

இந்த சிக்கலை சரி செய்யவே ஜியோ நிறுவனம் ரூ.601 மதிப்புள்ள 5ஜி அப்கிரேட் வவுச்சர் ஆபரை அறிவித்துள்ளது. புதிய ரூ.601 திட்டமானது ஆனது மொத்தம் 12 தனித்தனி டேட்டா வவுச்சர்களை உள்ளடக்கிய திட்டமாகும். அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 1 ஆண்டுக்கு ஒவ்வொரு மாதமும், வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்கும் ரூ.51 மதிப்புள்ள டேட்டா வவுச்சர் கிடைக்கும். இப்படி மொத்தம் 12 மாதங்களுக்கு 12 டேட்டா வவுச்சர்கள் கிடைக்கும்.

ரூ.601-ஐ ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் 12 வவுச்சர்களையும், ஒவ்வொரு மாதமும் மைஜியோ ஆப் வழியாக ரிடீம் செய்து கொள்ளலாம். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ரூ.601 டேட்டா வவுச்சரை எந்தவொரு ஜியோ பயனருக்கும் கிஃப்ட் வடிவில் டிரான்ஸ்பர் செய்யவும் முடியும்.

ஆனால் இதை செய்ய உங்கள் ஜியோ மொபைல் எண்ணின் கீழ் இந்த டேட்டா வவுச்சரை ஆக்டிவேட் செய்யாமல் இருக்க வேண்டும். ஒருமுறை ஆக்டிவேட் செய்த பின்னர், ரூ.601-ன் கீழ் கிடைக்கும் நன்மைகளை பரிமாற்றம் செய்ய முடியாது. மேலும் தனிப்பட்ட ரூ.51 மாதாந்திர வவுச்சர்களையும் டிரான்ஸ்பர் செய்ய முடியாது. கிஃப்ட் ஆக வழங்கினால் மொத்தமாக மட்டுமே வழங்க முடியும்.

தற்போது இந்த ஆபர் பிளான் ஆனது ஜியோவின் அதிகாரப்பூர்வ ஆப் ஆன மைஜியோ (MyJio) மற்றும் ஜியோ இணையதளம் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஜியோவின் இந்த சலுகை அக்டோபர் 25 முதல் செல்லுபடியாகும் என ஜியோவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் எப்போது முடிவடையும் என்கிற தேதி குறிப்பிடவில்லை.

ஜியோவின் கீழ் ரூ. 51, ரூ.101 மற்றும் ரூ.151 மதிப்புள்ள மூன்று 5ஜி டேட்டா வவுச்சர்கள் ரீசார்ஜ் செய்ய கிடைத்தாலும் கூயோட ரூ.601 திட்டமானது மிகவும் மலிவு விலையிலான பேஸிக் திட்டத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை உறுதி செய்கிறது. அதாவது ஜியோவின் 5ஜி கிடைக்கும் பகுதியில் இருந்தும் கூட, அதிக விலை நிர்ணயம் கொண்ட திட்டங்களை (2ஜிபி க்கு மேல்) ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Are You Recharge Jio Plan Which Gives Less than 2GB Daily Data Then You Must Know About This Jio Latest Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X