Home
News

உங்க போனுக்கு Airtel 5G கிடைச்சதும்.. நீங்க முதல்ல ரீசார்ஜ் செய்ய வேண்டிய 5 திட்டங்கள்!

உங்கள் ஊரில் ஏற்கனவே ஏர்டெல் 5ஜி (Airtel 5G) சேவைகள் அறிமுகமாகி இருந்தாலும் சரி, அல்லது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றாலும் சரி.. "நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பெற ஸ்பெஷலாக எந்த திட்டத்தையும் ரீசார்ஜையும் செய்ய வேண்டிய அவசியமில்லை" என்று கூறுவார்கள்.

அது உண்மை தான்.. ஆனால் ஒரு சின்ன சிக்கல்!

உங்களிடம் ஒரு ஆக்டிவ் பிளான் இருந்தால் மட்டுமே போதும், உங்களால் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கை பெற முடியும் / பயன்படுத்த முடியும் என்பது உண்மை தான்.

ஆனால் டெய்லி 1ஜிபி அல்லது டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துக்கொண்டு உங்களால் எப்படி உண்மையான 5ஜி ஸ்பீடை அனுபவிக்கவோ அல்லது பரிசோதிக்கவோ முடியும்?

Airtel 5G கிடைச்சதும் முதல்ல ரீசார்ஜ் செய்ய வேண்டிய 5 திட்டங்கள்!

இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கின் கீழ் கிடைக்கும் உண்மையான இன்டர்நெட் ஸ்பீடை அனுபவிக்க விரும்பினால்.. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஏர்டெல்லின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 5 டேட்டா திட்டங்களில் (Data Packs) ஏதேனும் ஒன்றை ரீசராஜ் செய்வதே ஆகும்!

இது வீண் செலவு அல்ல.. ஒரு முடிவுக்கு வர உதவும் செலவாகும்!

ஏர்டெல் டேட்டா-ஒன்லி பேக்குகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் ஊரில் அல்லது உங்கள் 5ஜி போனில் அணுக கிடைக்கும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கை முழுமையாக முயற்சி செய்து பார்க்கலாம்.

அதன் பின்னர் ஏர்டெல் 5ஜி-க்கு அப்கிரேட் ஆகலாமா? இதற்காக நம்பி செலவு செய்யலாமா? அல்லது 4ஜி சேவையிலேயே இருந்து விடலாமா? என்கிற முடிவுக்கு உங்களால் வர முடியும். எனவே கண்டிப்பாக இதுவொரு வீண் செலவாக இருக்காது!

Airtel 5G கிடைச்சதும் முதல்ல ரீசார்ஜ் செய்ய வேண்டிய 5 திட்டங்கள்!

மொத்தம் 5 திட்டங்கள்.. 1 நாள் முதல் 30 நாட்கள் வரை!

முன்னரே குறிப்பிட்டபடி, ஏர்டெல்லின் கீழ் மொத்தம் 5 டேட்டா-ஒன்லி திட்டங்கள் உள்ளன. அவைகள் ஒரு நாள் முதல் முப்பது நாட்கள் வரையிலான வேலிடிட்டியை வழங்குகின்றன; கூடவே ஆக்டிவ் ரீசார்ஜ்ஜின் வேலிடிட்டி உடன் ஒற்று போகும் திட்டங்களும் உள்ளன!

ஆகையால் கீழ்வரும் 5 திட்டடங்களில் - உங்கள் தேவைக்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்ற - ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்து ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கை "பறக்க விடுங்க!".

01. ஏர்டெல் ரூ.19 டேட்டா பேக்

விலை: ரூ.19
வேலிடிட்டி: ஒரு நாள்
மொத்த டேட்டா: 1 ஜிபி

02. ஏர்டெல் ரூ 98 டேட்டா பேக்

விலை: ரூ.98
வேலிடிட்டி: உங்களுடைய ஆக்டிவ் ரீசார்ஜிஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்
மொத்த டேட்டா: 5 ஜிபி
கூடுதல் நன்மை: வின்க் ம்யூசிக் பிரீமியம்

Airtel 5G கிடைச்சதும் முதல்ல ரீசார்ஜ் செய்ய வேண்டிய 5 திட்டங்கள்!

03. ஏர்டெல் ரூ.148 டேட்டா பேக்

விலை: ரூ.148
வேலிடிட்டி: உங்களுடைய ஆக்டிவ் ரீசார்ஜிஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்
மொத்த டேட்டா: 15 ஜிபி
கூடுதல் நன்மை: ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் வழியாக ஷார்க் டேங்க் 2 -வை பார்த்து மகிழலாம்.

04. ஏர்டெல் ரூ 181 டேட்டா பேக்

விலை: ரூ.181
வேலிடிட்டி: 30 நாட்கள்
மொத்த டேட்டா: தினமும் 1ஜிபி டேட்டா; மொத்தம் 30 ஜிபி

05. ஏர்டெல் ரூ.301 டேட்டா பேக்

விலை: ரூ.301
வேலிடிட்டி: உங்களுடைய ஆக்டிவ் ரீசார்ஜிஜின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்.
மொத்த டேட்டா: 50 ஜிபி
கூடுதல் நன்மை: வின்க் ம்யூசிக் பிரீமியம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Are you in the cities where Airtel 5G is available Then you need to know about these 5 data packs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X