Home
News

புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! Samsung Galaxy F14 வருது! விலை என்ன?

புதிய ஸ்மார்ட்போன் வாங்குகிறோம் என்றால், அதில் உள்ள கேமரா, பெர்பார்மென்ஸ், பேட்டரி, சாப்ட்வேர் என்று எல்லாமே சிறப்பாக அமையவேண்டும் என்பதே எல்லோருக்கும் ஆசை. போனில் பெஸ்ட் என்றால் அது சாம்சங் (Samsung) தான். Samsung இப்போது புதிய போனை அறிமுகம் செய்யவுள்ளது.

முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான சாம்சங் இந்தியாவில் Samsung Galaxy F14 சாதனத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. 91மொபைல்ஸ் வெளியிட்ட பிரத்தியேகமாகத் தகவலின் படி, இந்த புதிய Samsung Galaxy F14 மொபைலின் முதல் தோற்றம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவலில் போனின் முழுமையான பின்புற வடிவமைப்பு மற்றும் நிறம் காண்பிக்கப்பட்டுள்ளது.

புது போன் வாங்க போறீங்களா? வெயிட் பண்ணுங்க! Samsung Galaxy F14 வருது!

Samsung Galaxy F14 அடுத்த வார தொடக்கத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய Samsung Galaxy F14 ஸ்மார்ட் போன் சாதனம் Flipkart ஆன்லைன் ஷாப்பிங் தளம், Samsung ஆன்லைன் ஸ்டோர் மற்றும் முன்னணி ரீடெய்ல் ஸ்டோர்கள் வழியாக வாங்க கிடைக்கும். இந்த சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது இந்தியாவில் ரூ.15,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் என்று ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஃப் 13 சாதனத்தைத் தொடர்ந்து இந்த புதிய Samsung Galaxy F14 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, Samsung Galaxy F14 போன் வழக்கமான ஒரு வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இரண்டு தனித்தனி வட்ட ரிங் இல் டூயல் கேமரா சென்சார்களை நாம் காண முடிகிறது. இத்துடன் அருகில் LED ஃபிளாஷ் லைட்களும் உள்ளது.

இந்த புதிய Samsung Galaxy F14 ஸ்மார்ட் போன் சாதனம் பர்பிள் மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் வரும் என்பதை புகைப்பட விபரம் தெளிவாகக் காண்பிக்கிறது. Samsung Galaxy F14 போனின் சிறந்த கிரிப்பிற்காக ஃபோனின் பக்கவாட்டில் சற்று வளைந்த விளிம்புகள் உள்ளன. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் வலது விளிம்பில் உள்ளன. பின் பேனலில் சாம்சங் லோகோ உள்ளது.

புது போன் வாங்க போறீங்களா? வெயிட் பண்ணுங்க! Samsung Galaxy F14 வருது!

துரதிர்ஷ்டவசமாக, Samsung Galaxy F14 சாதனத்தின் முன் பகுதியை அறிக்கை காண்பிக்கவில்லை. இருப்பினும், முன்பக்கத்தைப் பொறுத்த வரை, இந்த சாதனம் கணிசமான பெசல்களை கொண்ட ஒரு வாட்டர் டிராப் நாட்ச் உடைய டிஸ்பிளேவை ஆதரிக்கும் என்று யூகிக்கப்படுகிறது. இது வடிவமைப்பு பகுதியைப் பற்றியது. Samsung Galaxy F14 போனின் சிறப்பம்சம் பற்றி பார்க்கையில், என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பது இங்கே.

Samsung Galaxy F14 போனின் டிஸ்பிளே அளவு தெளிவாக இல்லை, ஆனால் இது FHD+ திறன் மற்றும் நிலையான 60Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட 6.6' இன்ச் உடைய டிஸ்பிளேவை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் 5nm சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று ஆதாரங்கள் கூறுகின்றன. இது Exynos 1330 சிப்செட் ஆக இருக்கலாம். இந்த டிவைஸ் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வெளிவரும்.

வரவிருக்கும் எஃப்-சீரிஸ் Samsung Galaxy F14 ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 13 OS உடன் இயங்க அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக Samsung Galaxy F14 மொபைல் ஒரு பட்ஜெட் சாதனம் என்பதால் இதற்கு இந்தியாவில் அதிக மவுசு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் புது சாதனம் வாங்கும் ஐடியா இருந்தால், கொஞ்சம் வெயிட் செய்யுங்கள். Samsung Galaxy F14 வரட்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Are you going to buy a new phone Wait a little Samsung Galaxy F14 is coming to India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X