Just In
- 8 min ago
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- 16 min ago
அடேங்கப்பா.. கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள் இருக்குதா? வாங்க பார்ப்போம்.!
- 1 hr ago
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- 2 hrs ago
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
Don't Miss
- News
"சின்ன கேப்சூல் மாயம்.." அலறிய ஆஸ்திரேலியா.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்.. நிம்மதி! என்ன நடந்தது
- Movies
600 கோடி வசூல்.. அபார வெற்றி பெற்ற பதான்.. தூம் 4ல் நடிக்கப் போறாரா ஷாருக்கான்?
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மொபைல் டேட்டா கனெக்ட் ஆகவில்லையா? சிரமப்பட வேண்டாம்.! சரிசெய்ய உதவும் வழிமுறைகள் இதோ.!
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. ஆனாலும் தற்போது சில நகரங்களில் மட்டுமே இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கிவருகிறது. விரைவில் இந்நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்கும்.

4ஜி மொபைல் டேட்டா
குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தற்போது அதிவேகத்தில் இணைய சேவை வழங்கி வந்தாலும், சில நகரங்கள் மற்றும் கிராமங்களில் அவ்வப்போது 4ஜி மொபைல் டேட்டா கனெக்டிவிட்டியில் அதிகமாகச் சிக்கல் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாட்டில் 4ஜி சர்விஸ் சரியாக வேலை செய்யாத பகுதிகள் இன்னும் உள்ளன என்பது தான் உண்மை.

அடிப்படை டிப்ஸ்கள்
அதேசமயம் நீங்கள் இருக்கும் பகுதியில் உங்கள் மொபைல் போனில் நெட்வொர்க் சிக்கல்களை எதிர்கொண்டால், அந்த சமயம் ட்ரை செய்து பார்க்கக் கூடிய சில அடிப்படை டிப்ஸ்கள் இருக்கின்றன. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிப்ஸ்-1
அதாவது உங்களது மொபைல் நெட்வொர்க் கனெக்ட் ஆகவில்லை என்றால் முதலில் மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து விட்டு மீண்டும் ஒரு முறை ஆன் செய்யவும்.

டிப்ஸ்-2
ஒருவேளை நீங்கள் மொபைல் டேட்டாவை ஆஃப் செய்துவிட்டு மிண்டும் ஆன் செய்தபோது கனெக்ட் ஆகாமல் சிக்கல்களைச் சந்தித்தால். உங்களது மொபைலில் இருக்கும் airplane mode-ஐ ஆன் செய்யவும். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் airplane mode-ஐ ஆப் செய்து விட்டு மறுபடியும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து பாருங்கள். குறிப்பாக முக்கியமான நேரங்களில் இந்த ட்ரிக் மொபைல் டேட்டா நெட்வொர்க் பிரச்சனைகளை எளிமையாகச் சரி செய்துவிடும்.

டிப்ஸ்-3
அதேபோல் மொபைல் டேட்டா கனெக்ட் ஆகாமல் உங்களை சிரமப்படுத்தினால் நீங்கள் உடனே செய்ய வேண்டிய மற்றொரு ட்ரிக் என்னவென்றால், உங்களது போனில் இருக்கும் சிம் ஸ்லாட்டை ஓபன் செய்து சிம்கார்டை தனியாக எடுத்து ட்ராக் டேமேஜ் ஆகாமல் ஒரு சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பின்பு மீண்டும் உங்களது சிம்மை சிம் ஸ்லாட்டில் சரியாக ஃபிக்ஸ் செய்து இன்ஸெர்ட் செய்யவும். இந்த சிம்பிள் ட்ரிக் உங்களது சிக்கலைத் தீர்க்க கண்டிப்பாக உதவலாம்.

டிப்ஸ்-4
சிலர் அதிகமாக இண்டர்நெட் பயன்படுத்துவதால் அல்லது ஹை குவாலிட்டி வீடியோக்கை பிளே செய்து பார்ப்பதால் டெய்லி மொபைல் டேட்டா சில நிமிடங்களில் தீர்ந்துவிடுகிறது. இது தெரியாமல் நம்மில் பலர் மொபைல் டேட்டா சரியாக வேலை செய்யவில்லை, நெட் ஸ்பீட் ஸ்டோவாக இருக்கிறதா என்று யோசிப்போம். எனவே நீங்கள் பயன்படுத்தும் டெலிகாம் நிறுவனங்கள் டெய்லி மொபைல் டேட்டா லிமிட் காலியாவதற்கு முன்பு 50 சதவீதம் டேட்டா முடிந்துவிட்டது, 90 சதவீதம் டேட்டா முடிந்துவிட்டது என அலெர்ட் மெசேஜ்களை அனுப்பும். அவற்றைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ்-5
அதிகமான மக்கள் தங்களது போன்களுக்கான சாஃப்ட்வேர் அப்டேட் குறித்து பெரிதாக ஒன்றும் கண்டு கொள்வதில்லை. எனவே தான் போன்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. அதேபோல் ஒரு சில அப்டேட்கள் மொபைல் டேட்டா கனெக்டிவிட்டிக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும். எனவே போன்களுக்கான சாஃப்ட்வேர் அப்டேட்களை தவறவிடாமல் செய்வது டேட்டா கனெக்டிவிட்டியை பூஸ்ட் செய்ய உதவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470