Airtel Plans 400-க்குள் கிடைக்கும் இந்த சிறந்த அன்லிமிடெட் Prepaid திட்டம் பற்றி தெரியுமா?
பாரதி ஏர்டெல் பயனர்கள் ரூ.300 முதல் ரூ.400க்குள் சிறந்த திட்டத்தை தேர்வு செய்ய விரும்பும் பயனர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள நான்கு அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்களையும் அதன் பயன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

ரூ.400-க்குள் கிடைக்கும் பாரதி ஏர்டெல் அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரூ.400-க்குள் கிடைக்கும் பாரதி ஏர்டெல் அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரூ.349, ரூ.379, ரூ.398 மற்றும் ரூ.399 சிறந்த பலனை அளிக்கிறது. அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் சேவையுடன் உங்களுக்கு அன்லிமிடெட் ப்ரீபெய்ட் சேவை வேண்டுமென்றால் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யுங்கள். ஹெவி டேட்டா பயனர்களுக்கான ஏற்ற திட்டம் ரூ.398 திட்டம் தான்.

ஏர்டெலின் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெலின் ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், ரூ.129 மதிப்புள்ள அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தாவை கூடுதல் செலவின்றி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் FUP வரம்பு இல்லாத வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

ஏர்டெலின் ரூ.379 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் செல்லுபடியாகும் வரம்பற்ற குரல் அழைப்புகள், 6 ஜிபி அளவிலான டேட்டா, 900 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கூடுதல் நன்மைகளாய் இலவச ஷா அகாடமியில் கோர்ஸ், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் சந்தா, விங்க் மியூசிக் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.150 கேஷ்பேக் போன்றவை வழங்கப்படுகிறது.

ஏர்டெலின் ரூ.398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் தனது முந்தைய திட்டமான ரூ.349 திட்டத்தை தற்பொழுது ரூ.398 என்கிற அதிகரித்த விலையின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. ஹெவி டேட்டா பயனர்களுக்கான ஏற்ற திட்டம் ரூ.398 திட்டம் கூறப்படுகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. வேலிடிட்டி காலத்தில் மொத்தமாக 84 ஜிபி அளவிலான டேட்டா, FUP வரம்பு இல்லாத வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை சேர்த்து வழங்குகிறது.

ஏர்டெலின் ரூ.399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்
ரூ.400-க்குள் கிடைக்கும் சிறந்த திட்டங்களில் இந்த ரூ.399 திட்டம் பட்டியலில் கடைசியாக உள்ளது. இந்த திட்டத்தை தான் பெரும்பாலான ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்கள் சந்தேகம் இல்லாமல் தேர்வு செய்கின்றனர். அதற்கான காரணம் என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications