ரொம்ப தெளிவு தான்! இந்திய மக்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்த Jio, Airtel, Vi திட்டங்கள் இவை தானா?
இந்தியாவில், மக்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் சிறந்த Jio, Airtel மற்றும் Vi திட்டங்கள் எது என்று உங்களுக்கு தெரிய வேண்டுமா? ஏன் மக்கள் மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை வெறுத்துவிட்டு, 90 நாட்களுக்கு நெருக்கமான திட்டங்களை தேர்வு செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மொபைல் ரீசார்ஜ் என்று எடுத்துக்கொள்ளும் போது, ஒவ்வொரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமும் வெவ்வேறு விதமான வேலிடிட்டி உடன் வருகிறது. பயனருக்கு ஏற்ற பல்வேறு விதமான நன்மைகளுடனும், பல விதமான வேலிடிட்டியுடனும் ரீசார்ஜ் திட்டங்கள் இந்தியாவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா போன்ற நிறுவனங்கள் இதன் அடிப்படையில் பல திட்டங்களை கொண்டுள்ளது.

என்ன தான் டெலிகாம் ஆபரேட்டர்கள் வருடாந்திர ரீசார்ஜ் திட்டம், 54 நாள் வேலிடிட்டி திட்டம், 30 நாள் திட்டம், 28 நாள் செல்லுபடியாகும் திட்டம் என்று லிஸ்டில் பல திட்டங்களை வைத்திருந்தாலும், மக்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் சிறந்த திட்டங்களை ஏதுவென்று உங்களுக்குத் தெரியுமா? தெரியாதவர்களுக்கு, மக்கள் அதிகம் ரீசார்ஜ் செய்ய விரும்புவது 84 நாள் வேலிடிட்டி திட்டங்களைத் தான் என்கிறது தகவல்..
Jio, Airtel, Vi நிறுவனங்கள் வழங்கும் 84 நாட்கள் செல்லுபடியுடன் வரும் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். எந்த நிறுவனம் என்ன விலையில்? எந்தெந்த திட்டங்களை.. என்ன நன்மைகளுடன் வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க. முதலில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 84 நாள் வேலிடிட்டி உடன் என்ன நன்மையை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் ரூ. 666 திட்டமானது அதன் பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி வரம்புடன் 126 ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் அழைப்பு நன்மை, தினமும் 100 SMS, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. தகுதியுள்ள சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டாவையும் இந்தத் திட்டம் இலவசமாக வழங்குகிறது.

ஜியோவின் ரூ. 719 திட்டமானது அதன் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மை, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் இது JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud சேவையுடன், இலவச 5ஜி அணுகலுடன் 168ஜிபி மொத்த டேட்டாவைப் வழங்குகிறது.
ஜியோவின் ரூ. 1199 திட்டமானது, அதன் பயனர்களுக்குத் தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. இந்த திட்டமும் இலவச ஜியோ 5ஜி சலுகையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ. 455 திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு நன்மை, 6ஜிபி மொத்த டேட்டா, 900 எஸ்எம்எஸ் மற்றும் அப்பல்லோ சர்க்கிள், ஃபாஸ்டேக் கேஷ்பேக், ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் ஆகியவற்றின் கூடுதல் பலன்களை வழங்குகிறது. இது பட்ஜெட் விலையில் 84 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ. 719 திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச 3 மாத சந்தாவை வழங்குகிறது. இருப்பினும், நீங்கள் ஏர்டெல் 5G கவரேஜ் பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், தினசரி FUP இல்லாமல் வரம்பற்ற 5G இணையத்தை அனுபவிக்க முடியும்.
ஏர்டெல் ரூ. 839 திட்டமானது, ஏர்டெல் 5ஜி இயக்கப்பட்ட நகரங்களில் உள்ள பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி இணையத்தையும் வழங்குகிறது. இருப்பினும், மீதமுள்ள பயனர்களுக்கு, இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தா போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ. 999 திட்டமானது, ஏர்டெல் பயனர்கள் டேட்டா கேப் இல்லாமல் 5ஜி-இயக்கப்பட்ட போன்களில் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன், ஏர்டெல் தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அமேசான் பிரைம் இலவச உறுப்பினர் மற்றும் பல நன்மைகளை வழங்குகிறது.

Vi இன் ரூ. 719 திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் மற்றும் இரவு முழுக்க இலவச டேட்டா போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.
Vi ரூ. 839 திட்டமானது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மை தவிர, வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் மற்றும் இரவு முழுக்க இலவச டேட்டா போன்ற நன்மைகளையும் வழங்குகிறது. நள்ளிரவு முதல் இலவச டேட்டாவை வரம்பின்றி பயன்படுத்தலாம்.
Vi ரூ. 1066 திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் மற்றும் இரவு முழுக்க இலவச டேட்டா போன்ற நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் 84 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டங்களை ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 3 மாதங்களுக்கு எந்த கவலையும் உங்களுக்கு இல்லை என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications








