செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா? ஆதாரம் இதோ! ரகசியத்தை உடைத்த NASA விஞ்ஞானி..

|

செவ்வாய் கிரகத்தின் ரகசியங்களை தேடும் முயற்சியில் மூன்று ரோவர்கள் அங்கு உலா வந்துக் கொண்டிருக்கிறது. இதில் பெர்சவரன்ஸ் ரோவர் பண்டைய நுண்ணியிர் வாழ்வுக்கான அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. சமீபகாலமாக மார்ஸ் கிரகம் குறித்த பல்வேறு ரகசியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா?

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா?

நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் உயரினங்கள் வாழ்வதற்கான ஆதாரத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அங்கு உயிரினங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களையும் கண்டுபிடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பல ஆண்டுகளாக மார்ஸ் கிரகம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தாலும் அது மிகப்பெரியது என்பதால் முழுமையாக ஆய்வு செய்ய டைம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்

இதெல்லாம் ஒருபுறம் இருக்க செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் காலடி பதிப்பதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அனைவருக்கும் நன்கு அறிந்தவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் இன் கனவுத் திட்டம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது ஆகும்.

உயிரினங்களுக்கான ஆதாரங்கள்..

உயிரினங்களுக்கான ஆதாரங்கள்..

நாசா வானியல் நிபுணர் ஹீதர் கிரஹாம் மார்ஸ் கிரகம் ஆய்வு குறித்து கூறுகையில், பெர்சவரன்ஸ் ரோவர் பண்டைய நுண்ணியிர் வாழ்வுக்கான அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. அதன்படி நாங்கள் நீண்ட காலமாக செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களை தேடுகிறோம், தற்போது வரை நாசாவில் உயிரினங்கள் வாழ்வதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றாலும் அதன் பண்டைய காலத்தில் உயிருக்கு ஆதரவான கிரகமாக இருந்திருக்கும் என்பதற்கான நிறைய சான்றுகள் கிடைத்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரகசியத்தை உடைத்த விஞ்ஞானி

ரகசியத்தை உடைத்த விஞ்ஞானி

அதேபோல் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் ஒரு பெரிய பெருங்கடல் இருந்ததாகவும், உயிர் வாழக்கூடிய வளிமண்டலம் இருந்ததாகவும் சொல்வதற்கு நிறைய சான்றுகள் இருக்கிறது.

ஆனால் கிரகத்தில் ஆராய வேண்டிய பகுதிகள் நிறைய எஞ்சி இருக்கிறது. ஆழமான நிலத்தடி, நிலத்தடி திரவங்கள் மற்றும் உயிரினங்கள் வாழக்கூடிய இடங்கள் உள்ளதற்கான நிறைய ஆதாரங்கள் உள்ளன.

மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கிரகத்தில் மேற்பரப்பு தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கப்படுகிறது என கிரஹாம் குறிப்பிட்டார்.

செவ்வாய் கிரகத்தில் ரோவர்கள்

செவ்வாய் கிரகத்தில் ரோவர்கள்

செவ்வாய் கிரகத்தில் மூன்று ரோவர்கள் உலா வந்துக் கொண்டிருக்கிறது. அது நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர், க்யூரியாசிட்டி ரோவர் மற்றும் சீனாவின் ஜுராங் ரோவர் ஆகும். ஒவ்வொரு ரோவரும் பல்வேறு நோக்கங்களோடு செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தின் நேரடி புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

ரோவர் சேகரித்த மாதிரிகள்

ரோவர் சேகரித்த மாதிரிகள்

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் Mars இல் முதல் மாதிரிகளை சேகரித்து சேமித்து வைத்தது. ரோவர் மண் மாதிரிகளை சேகரித்ததன் ஆதாரமாக அங்கு தரையில் இரண்டு துளைகளை விட்டு சென்றது. இந்த புகைப்படத்தை நாசா பகிர்ந்தது. இதன்மூலம் பல உண்மைகள் கட்டவிழ்த்துவிடப்படும் என தகவல்கள் வெளியானது.

பாறை மையத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள்

பாறை மையத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள்

ஏஜென்சியின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) இன் கூற்றுப்படி, நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் இரண்டு மாதிரிகளை டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 6 ஆம் தேதிகளில் சேகரித்தது. இந்த மாதிரிகள் ஆனது முந்தைய மாதிரிகள் போல் இல்லாமல், பாறை மையத்தில் இருந்து எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

சவால்களை எதிர்கொள்ள உதவும்

சவால்களை எதிர்கொள்ள உதவும்

புராதன நுண்ணியர் வாழ்வின் அறிகுறிகளை கண்டறிய சக்திவாய்ந்த விஞ்ஞான உபகரணங்கள் உடன் செவ்வாய் கிரக மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. விஞ்ஞானிகள் இதை பூமியில் ஆய்வு செய்ய இருக்கின்றனர். தற்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலான பகுதிகள் பாறைகளாக இருக்கும் என கூறப்படுகிறது.

சேகரிக்கப்படும் மாதிரிகள் ஆனது விண்வெளி வீரர்களை நாம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் போது எதிர்கொள்ள இருக்கும் சவால்களை அறிந்து கொள்ளவும் உதவும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Are there signs of life on Mars? NASA scientist broke the secret

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X