'நண்பேன்டா"னு சொல்லிசொல்லி ஆப்பு வைக்கும் ஸ்மார்ட்வில்லன்கள்.!

By Prakash
|

தற்போது மனிதன் காலை எழுந்து தேநீர் குடிக்கும் முதல் இரவு நண்பனுக்கு குட்நைட் சொல்லும் வரை ஸ்மார்ட்போன்களின் பங்கு அதிகமாக உள்ளது, இப்போது அனைத்து வேலைகளையும் ஸ்மார்ட்போன் மூலம் மிக எளிமையாக செய்யமுடியம். ஆனால் அதிக வேலை செய்ய வேண்டிய மனிதன் இதை நம்பி சோம்பேரி நிலைக்கு தள்ளப்படுகிறான். மேலும் உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

ஸ்மார்ட்போனில் பொதுவாக அதிக நண்மைகள் மற்றும் மிகஅதிக தீமைகளும் உள்ளது, எனவே இவற்றை உபோயகம் செய்யும்போது கவனமாக இருத்தல் வேண்டும். பல விபத்துகள், துன்பங்கள் மற்றும் துயரங்கள் ஸ்மார்ட்போன் மூலம் அதிகம் ஏற்ப்பட்டுள்ளதை நாம் அறிவோம். எனவே இந்த ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

இன்றைய காலத்தில் சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்கின்றனர், இன்றைய
சிறுவர்கள் அதிகமாக ஸ்மார்ட்போனில் விளையாட்டு மற்றும் வீடியோ போன்றவற்றை அதிகம் விரும்புகின்றனர், இதனால் சிறுவர்கள் வெளியே சென்று விளையாட விரும்புவதில்லை, சரியான ஆரோக்கியமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை.

ஸ்மார்ட்போன் உரையாடல்:

ஸ்மார்ட்போன் உரையாடல்:

தற்போது அருகில் மற்றும் எதிரில் இருக்கும் நண்பனுக்கு கூட ஸ்மார்ட்போன் மூலம் தான் அதிகம் பேசுகிறார்கள்,சரியாக முகம் பார்த்துபேசும் பழக்கம் கூட தற்போது இதனால் கானமால் போனது.

சமூகவலைதளம்:

சமூகவலைதளம்:

இப்போது உள்ள அனைத்து மக்களும் ஸ்மார்ட்போனில் சமூகவலைதளத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இதனால் பல செய்திகள் மற்றும் தகவலைப் பெறமுடியும். மேலும் கல்வி மற்றும் அனைத்து தேவைகளுக்கும் இவற்றின் உதவி அதிகமாக உள்ளது.

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

பெண்கள் மற்றும் குழந்தைகள் ஸ்மார்ட்போனில் அதிகமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பயன்படுத்துவதால் பல்வேறு துயரம் மற்றும் தீமைகள் வந்துசேரும் ஆபாயம் உள்ளது, எனவே சமூகவலைதளங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சாலைவிபத்து:

சாலைவிபத்து:

இந்தியாவில் தற்போது அதிக விபத்துகளுக்கு காரணமாக உள்ளவை இந்த ஸ்மார்ட்போன்தான். வாகனம் இயக்கும் போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் அதிக விபத்துகள் ஏற்ப்படுகின்றன, மேலும் பொது சாலைகளில் நின்று செல்பீ எடுக்கும்போதும் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.

கருவிழி:

கருவிழி:

நாம் தினசரி அதிகநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கண் எரிச்சல் மற்றும் கருவிழி பிரச்சனைகள் மிக அதிமாக உள்ளது, இன்றையகால இளைஞர்கள் இரவு முழுவதும் ஸ்மார்ட்போன் அதிகமாக பயன்படுத்துகின்றனர் இதன் விளைவு சிறிய வயதிலேயே கண்கண்ணாடி போடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் பல்வேறு தீமைகள் இவற்றில் உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Are smartphones making our children mentally ill: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X