நண்பர்கள் முக்கியமா? Netflix முக்கியமா? விஸ்வாசத்தை காட்ட வேண்டிய நேரம் இது!

|

பிரபல ஓடிடி பயன்பாடாக இருக்கும் Netflix இல் புதிய அம்சம் அறிமுகமாகி இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிய நிர்வாக அணுகல் விருப்பத்தை நிறுவனம் இணைத்திருக்கிறது. இனி உங்கள் கணக்கு உங்கள் உரிமை. நெட்ஃபிளிக்ஸ் பயனர்களுக்கு இந்த அம்சம் நிச்சயமாக பேருதவியாக இருக்கும்.

புதிய நிர்வாக அணுகல்

புதிய நிர்வாக அணுகல்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிய நிர்வாக அணுகல் விருப்பத்தை நிறுவனம் இணைத்திருக்கிறது. நீங்கள் என்றோ ஒரு நாள் எதார்த்தமாக பிறரின் சாதனங்களின் லாக் இன் செய்து நெட்ஃபிளிக்ஸ் பயன்பாட்டை பயன்படுத்தி தவறுதலாக லாக் அவுட் செய்யவும் மறந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இன்றுவரை அதே லாக் இன் மூலம் பயன்பாட்டை அணுகிக் கொண்டிருக்கலாம். இதுபோன்ற செயல்களை அறிவதற்கு இது சரியான நேரமாகும்.

இருந்த இடத்தில் இருந்தே லாக் அவுட் செய்யலாம்

இருந்த இடத்தில் இருந்தே லாக் அவுட் செய்யலாம்

பயனர்கள் தங்கள் கணக்கின் உள்நுழைவு நிலையை சரிபார்க்கலாம். மேலும் தேவையற்ற விருந்தினர்களை நீங்களே வெளியேற்றவும் செய்யலாம். ஹோட்டல் போன்ற இடங்களில் உள்ள டிவிகளில் Netflix ஐப் பயன்படுத்திய பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும். லாக் இன் செய்து பயன்படுத்திவிட்டு தவறுதலாக லாக் அவுட் செய்யாமலயே ஹோட்டலில் இருந்து செக் அவுட் செய்திருக்கலாம். திரும்பவும் அந்த ஹோட்டலுக்கு சென்று லாக் அவுட் செய்வது என்பது சிரமமான செயல். எனவே இந்த அம்சத்தின் மூலம் இருந்த இடத்தில் இருந்தே லாக் அவுட்செய்து கொள்ளலாம்.

யூஸ் செய்வது எப்படி?

யூஸ் செய்வது எப்படி?

இந்த அம்சம் தற்போது இந்தியாவில் கிடைக்கிறது. இதை செக் செய்வதற்கு சுயவிவர ஐகானை கிளிக் செய்யவும் > அதில் கணக்குகளுக்கு சென்று அணுகல் மற்றும் சாதனங்கள் நிர்வகித்தல் என்ற விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளவும். அனுமதி இல்லாமல் உங்கள் கணக்குகளை பயன்படுத்தும் அனைவரையும் நீங்கள் உங்கள் சாதனங்களில் இருந்தே நீக்கலாம். நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் உங்கள் கணக்கை பயன்படுத்தும் நபர்களை நீங்களே அகற்றலாம்.

தேவையற்ற சாதனங்களில் இருந்து வெளியேறலாம்

தேவையற்ற சாதனங்களில் இருந்து வெளியேறலாம்

இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் தெரிவிக்கையில், "மிகப் பிஸியான விடுமுறை காலம் நெருங்கி வருவதால், எங்கள் பயனர்கள் பலர் குடும்பம் மற்றும் நண்பர்களை பார்க்க செல்ல வேண்டி இருக்கும். அங்கு நெட்ஃபிளிக்ஸ் பயன்பாட்டை அவர்கள் கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். அந்த இடங்களில் இருந்து வெளியேறும் போது நெட்ஃபிளிக்ஸ் பயன்பாட்டை லாக் அவுட் செய்ய மறந்திருக்கலாம். இந்த சிக்கலை தீர்ப்பதற்கு புதிய அம்சம் அறிமுகமாகி இருக்கிறது. பயனர்கள் இருந்த இடத்திலேயே ஒரு கிளிக்கில் தேவையற்ற அனைத்து சாதனங்களில் இருந்தும் உங்கள கணக்கை லாக் அவுட் செய்யலாம்.

பிரபல ஓடிடி பயன்பாடுகள்

பிரபல ஓடிடி பயன்பாடுகள்

ஓடிடி தளங்கள் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். ஓடிடி தளங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு திரைப்படங்களையும், வெப் சீரிஸ்களையும் வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக Netflix, Amazon Prime, Disney+ Hotstar போன்ற முன்னணி ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

விளம்பர ரீசார்ஜ் திட்டங்கள்

விளம்பர ரீசார்ஜ் திட்டங்கள்

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விளம்பர ரீசார்ஜ் திட்டங்களை குறிப்பிட்ட நாடுகளில் அறிமுகம் செய்திருக்கிறது. நீண்ட நாட்களாக இந்த திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு ஓடிடி வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்த நிலையில் ஒரு வழியாக தற்போது இதுகுறித்த விவரங்கள் தெரிய வந்திருக்கிறது.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் விளம்பர ரீசார்ஜ் திட்டங்களை ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் விளம்பர திட்டங்களின் விலை $6.99 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Basic with Ads பிளான்

Basic with Ads பிளான்

Basic with Ads திட்டங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நான்கு முதல் ஐந்து விளம்பரங்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு விளம்பரங்களும் 15 முதல் 30 வினாடிகள் நீளம் இருப்பதாக கூறப்படுகிறது. உலகளாவிய விளம்பர திட்டங்களுக்கு என நெட்பிளிக்ஸ் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் 720p வீடியோ தரத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும் வரையறுக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் இந்த திட்டத்தில் அணுக முடியாது எனவும் கூறப்படுகிறது.

ஹாட்ஸ்டாரை விட குறைந்த விலை

ஹாட்ஸ்டாரை விட குறைந்த விலை

இந்த திட்டத்தில் நீங்கள் பார்க்க முடியாத நிகழ்ச்சிகள் லாக் (பூட்டு) ஐகான் உடன் காட்டப்படும். அதேபோல் ஆப்பிள் டிவி உள்ளிட்ட சில சாதனங்களில் விளம்பர அடுக்கு திட்டங்கள் வேலை செய்யாது எனவும் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டிஸ்னி ப்ளஸ் இன் விளம்பர அடுக்கு ரீசார்ஜ் திட்டம் $7.99 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ரீசார்ஜ் திட்ட விலை $6.99 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நெட்பிளிக்ஸ் திட்டத்தின் விலையை விட டிஸ்னி ப்ளஸ் விலை $1 அதிகம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Are friends important? Is Netflix important? You can remove people using your account for free!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X