AI ரோபோட்கள் மனிதர்களை தற்கொலை செய்ய தூண்டுகிறதா? நடந்தது முதல் தற்கொலை! திகிலூட்டும் நிகழ்வால் பீதி!
AI ரோபோட் உடன் 6 வாரம் பேசிய நபர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி இப்போது உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AI ரோபோட்கள், மனித இனத்தை அழிக்கும் என்ற கருத்துக்கள் இப்போது உண்மையாகிவிட்டதா? உண்மையில் என்ன நடந்தது?
பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர், செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட் உடன் நீண்ட உரையாடலைக் கொண்ட பிறகுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பெல்ஜிய செய்தி நிறுவனமான La Libre இன் அறிக்கையின்படி, (பெல்கா செய்தி நிறுவனம் வழியாக), பியேர் (Pierre) என்ற நபர் ஏஐ பாட் ஆன எலிஸா (AI bot ELIZA) உடன் ஆறு வாரங்கள் காலநிலை மாற்றம் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

பியேரின் உரையாடல் காலநிலையைப் பற்றித் தான் இருந்தது என்றாலும், ஒரு குறிப்பிட்ட தருணத்திற்குப் பிறகு, இவருக்கும் AI ரோபோட்டிற்கும் இடையிலான உரையாடல் பெருகிய முறையில் குழப்பமாகவும் தீங்கு விளைவிப்பதாகவும் மாறியதாகக் கூறப்படுகிறது. இறுதியில், அவர் குழப்பத்தில் இருந்ததாகவும், அவர் மனதில் தற்கொலை எண்ணங்களை AI தூண்டியதாகக் கூறப்படுகிறது.
சாட்போட் உடனான இந்த உரையாடல்கள் இல்லாவிட்டால் என் கணவர் இன்னும் உயிருடன் இருந்திருப்பார் என்று பியேரின் மனைவி கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் தான் அந்த நபர் ELIZA என்ற ஏஐ உடன் பேசத் தொடங்கியுள்ளார். ஏஐ உடன் தொடங்கிய பேச்சு வார்த்தைக்கு பிறகு, எலிசா தான் அவரது நம்பிக்கைக்குரியவராக மாறிவிட்டார் என்றும், அவர் காலையிலும் இரவிலும் எலிஸாவுடன் பேசுவதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொண்டார் என்றும், எலிஸாவுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம் ஒரு போதை போல மாறிவிட்டது என்றும், அவருடைய மனைவி வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

ELIZA, AI போட் உடன் அவர் மேற்கொண்ட ஆறு வார தீவிரமான மற்றும் நீண்ட அரட்டைகளுக்குப் பிறகு, அந்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ELIZA, AI போட் மனிதக்குலத்தையும், இந்த கிரகத்தையும் காப்பாற்றிக் கவனித்துக் கொண்டால் போதும், அதற்காகத் தன்னை தானே கொல்லும் யோசனையை பியேர் முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, பியேர் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், தன்னைக் கொல்லும் முன் அவர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த நபர் இறந்ததற்கு உண்மையிலேயே ஒரு ஏஐ ரோபோட் தான் காரணமா? உண்மையில் என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என்ன நடந்தது என்பது ஒரு தீவிரமான முன்னுதாரணமாகும். இது மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் "பொறுப்புகளைத் தெளிவாக வரையறுப்பதன்" முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. ChatGPT இன் எழுச்சியுடன், பொது மக்கள் முன்னெப்போதையும் விட, அதிகம் இணையத் துவங்கியுள்ளனர். இத்தகைய நிகழ்வுக்குப் பங்களிக்கும் பொறுப்புகளின் தன்மையை ஆராய்ந்து அதை சரி செய்வது மிகவும் முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
நிச்சயமாக, அல்காரிதம்களுடன் வாழ மனிதர்கள் இன்னும் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் ஏஐ-யின் தலையீடு இல்லாத வேலைகளை மக்கள் சந்திப்பது சந்தேகமே. பெரும்பாலான விஷயங்களில் இனி மனிதர்களுடன் மனிதர்கள் கலந்துரையாடல் செய்வதற்குப் பதிலாக ஏஐ-களுடன் மக்கள் உரையாட வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது. ஏஐ இன் உதவி மனிதர்களுக்குத் தேவை தானா? உங்களுடைய கருத்து என்ன?


Click it and Unblock the Notifications








