கயிறுடன் கட்டி போடப்பட்ட 1000 ஆண்டு பழமையான மம்மி.. என்ன காரணம்? இந்த மம்மி யாராக இருக்கும்?

|

உலகம் முழுக்க பல விசித்திரமான நிகழ்வுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் மனிதர்களால் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தை நோக்கி தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நமது பண்டைய வாழ்க்கை முறையின் நெறிகள் மற்றும் உண்மைகளைப் பற்றி அறிந்துகொள்ளச் சவாலான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை இப்போது பெருவில் உள்ள ஒரு புதிய மம்மி உடல் ஈர்த்துள்ளது.

800 முதல் 1,200 ஆண்டுகள் பழமையான மம்மி

800 முதல் 1,200 ஆண்டுகள் பழமையான மம்மி

பெரு நாட்டில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், 800 முதல் 1,200 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்ட மிகவும் பக்குவமாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு மம்மி உடல் நாட்டின் தலைநகரான லிமாவிற்கு அருகில் உள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மம்மி பற்றி இன்னும் ஏராளமான பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தகவலை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்ட மம்மி உடல்

கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்ட மம்மி உடல்

சான் மார்கோஸின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் லிமாவிலிருந்து உள்நாட்டில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காஜாமார்குவிலா தொல்பொருள் தளத்தில் உள்ள நகர சதுக்கத்தின் நடுவில் இருக்கும் நிலத்தடியில் இருந்து ஒரு புதிய பதப்படுத்தப்பட்ட மம்மி உடலைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் வினோதம் என்னவென்றால், இந்த மம்மி இன் உடல் முழுவதும் கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்டுள்ளது. அதன் முகத்தை அந்த மம்மி அதன் கைகளால் மூடியுள்ளது. இது தெற்கு பெருவியன் இறுதிச் சடங்கு முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..

எந்த காலத்தை சேர்ந்த மம்மி இது?

எந்த காலத்தை சேர்ந்த மம்மி இது?

இந்த மம்மியின் வயது பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், இது 'ஹிஸ்பானிக்' காலத்திற்கு முந்தையது என்பதை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இது 15 ஆம் நூற்றாண்டில் பெருவின் சிறந்த அறியப்பட்ட மச்சு பிச்சு கோட்டையை நிறுவிய இன்கா நாகரிகத்திற்கு முந்தையது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். "இந்த கண்டுபிடிப்பு ஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய காலங்களில் தொடர்புகள் மற்றும் உறவுகளில் ஒரு புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது" என்று அகழ்வாராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய பீட்டர் வான் டேலன் லூனா கூறினார்.

இந்த மம்மியின் உடல் யாருடையதாக இருக்கும்?

இந்த மம்மியின் உடல் யாருடையதாக இருக்கும்?

சமீபத்தில் வெளியான ஒரு பத்திரிகையில் இந்த மம்மி இன் உடல் பெரும்பாலும் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ஒரு இளைஞராக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இளைஞர் அருகில் இருக்கும் மலைகளில் இருந்து காஜாமார்குல்லாவுக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு முன்பு கொலம்பியனுக்கு முந்தைய காலத்தில் பரபரப்பான வணிக மையமாக இந்த இடம் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் சிறந்த பிராட்பேண்ட் திட்டம் வேண்டுமா? அப்போ 'இந்த' திட்டங்களை பாருங்க..குறைந்த விலையில் சிறந்த பிராட்பேண்ட் திட்டம் வேண்டுமா? அப்போ 'இந்த' திட்டங்களை பாருங்க..

 40 பேர் கொண்ட குழு நடத்திய ஆராய்ச்சியில் எதிர்பாராமல் சிக்கிய மம்மி

40 பேர் கொண்ட குழு நடத்திய ஆராய்ச்சியில் எதிர்பாராமல் சிக்கிய மம்மி

வான் டேலன் லூனா மற்றும் சக தொல்பொருள் ஆய்வாளர் யோமிரா ஹுமான் சாண்டிலன் தலைமையிலான 40 பேர் கொண்ட குழு அக்டோபர் நடுப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியைத் தொடங்கியது. குறிப்பாக இந்த குழுவினர், அந்த பகுதியில் ஒரு மம்மி கிடைக்கும் என்பதைத் தெரியாமல் தேடியாக கூறப்படுகிறது. இந்த திடீர் கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த குழுவினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. "இது நடக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை, ஏனெனில் முழு குழுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது," என்று ஹுமான் கூறினார்.

ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்திய மற்றொரு எதிர்பாராத கண்டுபிடிப்பு

ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்திய மற்றொரு எதிர்பாராத கண்டுபிடிப்பு

இதுபோன்ற முக்கியமான கண்டுபிடிப்பை நாங்கள் இந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை, அதேபோல், மற்றொரு எதிர்பாராத கண்டுபிடிப்பு, மம்மியின் கல்லறைக்கு வெளியே பல கடல் மொல்லஸ்க்கள் கிடைத்துள்ளது. இது கஜாமார்குல்லா கடற்கரையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், இது மிகவும் அசாதாரணமானது என்று வான் டேலன் லூனா கூறினார். "உடல் கல்லறையில் வைக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து இந்த மம்மியின் உறவினர்கள் இதைப் பார்வையிட்டு சென்றதற்கான சான்றும் கிடைத்துள்ளது.

2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!

கல்லறைக்கு வெளியே லாமாவின் எலும்புளா?

கல்லறைக்கு வெளியே லாமாவின் எலும்புளா?

குறிப்பாக ஆண்டு தோறும் இந்த கல்லறையில் சில நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் நடந்தேறியுள்ளது என்று வான் டேலன் லூனா கூறியுள்ளார். அதாவது, மம்மி உடலுக்குச் சொந்தமானவர்களின் சந்ததியினர் பல ஆண்டுகளாகத் திரும்பி வந்து, மொல்லஸ்கள் உட்பட உணவு மற்றும் பிரசாதங்களை அங்கு வைத்து வழிபட்டிருக்க வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கல்லறைக்கு வெளியே லாமாவின் எலும்புகளும் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வான் டேலன் லூனா கூறுகையில், இது அந்தக் காலத்து மக்களால் பொதுவாக உண்ணப்பட்ட உணவாகும்.

லாமா இறைச்சித் துண்டுகளுக்கு கல்லறையில் என்ன வேலை? படையலா?

லாமா இறைச்சித் துண்டுகளுக்கு கல்லறையில் என்ன வேலை? படையலா?

இதனால், இறந்தவருக்கு அந்த காலகட்டத்தில் லாமா இறைச்சித் துண்டுகள் வழங்கப்பட்டது என்பதும் தெளிவாகியுள்ளது. கண்டுபிடிப்பின் சூழ்நிலைகள் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கையில், இது சாதாரண குடிமகனின் உடல் அல்ல என்பதை விளக்குகிறது. ஆனால், சமகால சமுதாயத்தில் ஒரு முக்கியமான நபராக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது முடிவு செய்துள்ளனர். பிளாசாவின் நடுவில் இந்த குணாதிசயங்களைக் கொண்ட மம்மியைக் கண்டறிவது, இது உயர்ந்த அந்தஸ்துள்ள ஒருவர் என்பதைத் தெளிவாக்குகிறது.

800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?

கார்பன் டேட்டிங் இன்னும் என்ன தகவலை கட்டவிழ்க்கும்?

கார்பன் டேட்டிங் இன்னும் என்ன தகவலை கட்டவிழ்க்கும்?

மற்ற விருப்பங்களில், கேள்விக்குரிய நபர் ஒரு முன்னணி வர்த்தகராகக் கூட இந்த மம்மியின் உடல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குழு இப்போது கார்பன் டேட்டிங் உட்பட மேலும் சிறப்புப் பகுப்பாய்வை மேற்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அந்த நபர் வாழ்ந்த காலத்தைச் சுருக்கவும் மற்றும் அவரது அடையாளத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களை அணுகவும் அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பல மம்மிகள் முன்பு பெரு மற்றும் அண்டை நாடான சிலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, பல மம்மிகள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Archaeologists Find 800 Year Old Tied Up Mummy In Peru : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X