Home
News

கேலி கிண்டலுக்கு செருப்படி பதில்.. ZOHO Arattai ஆப் ஸ்ரீதர் வேம்பு லெப்ட் ஹேண்டில் டீல்.. அந்த ஒரு வார்த்தை!

கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் (Apple App Store) இருக்கும் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து ஜோஹோ அரட்டை ஆப் (ZOHO Arattai App) வெளியேறியதை ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) லெப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ஜோஹோ அரட்டை ஆப் ஆனது வாட்ஸ்அப் (WhatsApp) நிகராக களமிறக்கப்பட்டது. செப்டம்பர் மாத இறுதியில் மட்டும் முந்தைய சைன்-அப்களை (Sign-Ups) விட 100 மடங்கு வளர்ச்சியை எட்டியது. 1.5 லட்சம் புதிய சைன்-அப்களை கொடுத்தது. ஆனால், அடுத்த ஒரே மாதத்தில் டாப் 100 ஆப்களின் பட்டியலில் இருந்து வெளியேறியது.

கேலி கிண்டலுக்கு செருப்படி பதில்.. ZOHO Arattai ஆப் ஸ்ரீதர் வேம்பு!

நவம்பர் 4 ஆம் தேதியில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 105 ஆவது இடத்துக்கு சென்றது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து 123 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த சரிவு கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை வாய் திறக்காத ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, இப்போது லெப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளார்.

ஏஎன்ஐ (ANI) உடனான நேர்காணலில், ஸ்ரீதர் வேம்பு மனதில் இருப்பதை புட்டுப்புட்டு வைத்துள்ளார். ஒன்றும் தவறாக நடக்கவில்லை. இது ஒரு சாதாரண நிகழ்வுதான். எதுவும் நேரடியாக நிலாவுக்கு சென்றுவிடாது. இந்த ஏற்ற தாழ்வுகளை கடந்து செல்ல வேண்டும். மேலும், இதுபோன்ற நேரத்தில் தந்திரம் என்னவென்றால், எங்களுக்கு இதுகுறித்த தொலைநோக்கு பார்வை இருக்கிறது.

உண்மையில், நான் ஒருபோதும் நம்பர் ஒன் என்பதை பெரிய விஷயமாக நினைத்ததில்லை. எங்களது ஊழியர்களிடம் சொன்னேன், இதுவும் ஒரு மாதிரியான தருணம் மட்டும்தான், அது தொடர்ந்து நீடிக்காது. ஆனால், நாங்கள் இங்கேதான் இருக்கிறோம். இது எங்களுக்கு வெறும் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், அல்லது 15 ஆண்டுகள் மட்டுமேயான பாதை கிடையாது.

அதனால்தான் நான் இதில் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. இதில் கவனம் செலுத்தி கேலி செய்பவர்கள், அவர்களது நேரத்தை வீணடிக்கிறார்கள். அவ்வளவுதான் நான் சொல்வேன். நாங்கள் நேரத்தை வீணடிக்கில்லை. நாங்கள் கோட் (Code) உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் 10 ஆண்டுகளாக இதில் பணியாற்றி வருகிறோம். இந்த ஒரு மாதம் எங்களுக்கு ஒன்றுமில்லை.

எங்களிடம் மிகவும் வலுவான ஆப் (அரட்டை) இருக்கிறது. அதில் ஓரிரு நாட்களில் அப்டேட் வருகிறது. இரண்டு வாரங்களில் மற்றொரு அப்டேட் வருகிறது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை வாட்ஸ்அப் அறியும். நாங்கள் கைவிட மாட்டோம் என்பது எங்களுக்கு தெரியும். நம்பகமான போட்டி உங்களிடம் இருக்க வேண்டும், என்று சொல்லி முடித்து இருக்கிறார்.

மேலும், அரட்டை ஆப் ஆனது எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் கொண்டிருப்பது பற்றிய கேள்விக்கு, நான் ஏற்கனவே அதை பற்றிய ஸ்கிரீன் ஷாட்களை பதிவிட்டேன். எங்களுக்குக் கிடைத்த பரிந்துரைகளின் அடிப்படையில், இரண்டாவது ஆப்ஷனுக்கு நாங்கள் செல்ல இருக்கிறோம். ஓரிரு நாட்களில், ஒரு அப்டேட் கிடைக்கும், என்று தெரிவித்து இருக்கிறார்.

இதில் இரண்டாவது ஆப்ஷன் என்பது, அனைத்து ஒன்-டு-ஒன் சாட்களிலும் அரட்டை சிஸ்டம் ஆனது இ2இஇ டீபால்ட்டை (e2ee Default) கொண்டுவர இருப்பதை குறிக்கிறது. இந்த இ2இஇ மோட் (e2ee Mode) வழியாக ஒன்-டு-ஒன் சாட்களை செய்ய முடியும். குரூப் சாட்களில் மட்டும் இ2இஇ மோட் டீபால்ட்டாக இருக்காது. குரூப் சாட்டுக்கான இ2இஇ மோட் அடுத்த அப்டேட்டில் கிடைக்கும்.

அரட்டை ஆப் ஆனது எண்ட் டூ எண்ட் என்க்ரிப்டட் என்னும் தனியுரிமை பீச்சரை கொடுக்கவில்லை என்று அறியப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்படியே ஸ்ரீதர் வேம்பு, இ2இஇ டீபால்ட் மற்றும் இ2இஇ மோட் குறித்து அவரது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்திருந்தார். அடுத்து ஏஎன்ஐ உடனான நேர்காணலில் அதை குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Arattai App dropping out of top 100 List is nothing going wrong Zoho Founder Sridhar Vembu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X