கேபிள் டிவி: அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.! அமைச்சர் எச்சரிக்கை.!

|

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்,தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவருமான உடுமலை கோ. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்ட தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால்,தமிழ்நாடு அரசுகேபிள்
டிவி நிறுவனம் சிறந்த கேபிள் டிவி சேவையை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குகிறது.

 35லட்சத்து 64ஆயிரத்து

இதுவரை16ஆயிரத்து 712உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 35லட்சத்து 64ஆயிரத்து 589விலையில்லா எஸ்டி செட்டாப் பாக்ஸ்களையும் 3,728 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக ரூ.500 என்ற குறைந்த விலையில் 38ஆயிரத்து 200எச்டி செட்டாப் பாக்ஸ்களையும் வழங்கியுள்ளது.

 18சதவிகித வரி என்ற

இப்போது தமிழ்நாடு அரசு கேபிளஸ் டிவி நிறுவனத்தால் ரூ.140 மற்றும் 18சதவிகித வரி என்ற மாதக்கட்டணத்தில் 61கட்டணச்சேனல்கள் மற்றும் 137கட்டணமில்லா சேனல்களும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NASA எச்சரிக்கை: ஜூலை 24 பூமியை கடக்கும் சிறுகோள் ஏன் ஆபத்தானது? தெளிவான விளக்கம்!NASA எச்சரிக்கை: ஜூலை 24 பூமியை கடக்கும் சிறுகோள் ஏன் ஆபத்தானது? தெளிவான விளக்கம்!

சந்தாதாரர்களுக்கு எஸ்டி செட்டாப்

குறிப்பாக சந்தாதாரர்களுக்கு எஸ்டி செட்டாப் பாக்ஸ்கள் விலையில்லாமலும் எச்டி செட்டாப் பாக்ஸ்கள் ரூ.500 என்ற விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சந்தாதாரர்கள் மாத சந்தா கட்டணமாக ரூ.140 மற்றும் 18சதவிகித வரி மட்டும் செலுத்தினால், போதும் என்றும் கூடுதலாக அதிக கட்டணம் செல்லுத்த தேவையில்லை.

கீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம்! தமிழர்கள் போராடியது இதற்கு தானே!கீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம்! தமிழர்கள் போராடியது இதற்கு தானே!

தொகை வசூல் செய்வதாக

ஒருவேளை கூடுதல் தொகை வசூல் செய்வதாக புகார் தெரிவிக்க வேண்டுமென்றால், இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி
எண் 18004252911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மலிவு விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!மலிவு விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!

சு கேபிள் டிவி சேவை வழங்கும்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், இந்நிறுவனத்திடம் இருந்து இலவசமாக பெறும் எஸ்டி செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களுக்கு தொகை ஏதும் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

ருந்து அரசு நிர்ணயம் செய்த

பின்பு சந்தாதார்களிடமிருந்து அரசு நிர்ணயம் செய்த சந்தா தொகைக்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது என்றும், ஒருவேளை அதிக தொகை வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் உடனே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

News Source: newindianexpress.com

Best Mobiles in India

English summary
Arasu Cable TV Subscribers Don't Pay Extra Amount: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X