Home
News

ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் பயன்படுத்தி ஆங்கிலம் அறிந்து கொள்ளுங்கள்

உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் ஆங்கில மொழி உங்களுக்கு பிரச்சனையாக இருக்கின்றதா. இனி கவலையை விட்டு சிறிய செயலியை பயன்படுத்தி ஆங்கில மொழியில் புலமை பெறுங்கள்.

அடங்கப்பா இப்படியும் தொழல்நுட்பமா, என்னமா இப்படி பன்றீங்களே மா?

இந்தியாவில் மொழிகளை கற்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பல மாற்றங்களை கண்டு வருகின்றது. புத்தகங்களில் துவங்கி ட்யூஷன் சென்று வந்த காலம் முடிந்து இன்று ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது சில பல க்ளிக் மற்றும் கூகுள் தேடல்களில் அடங்கி விடுகின்றது.

சிறுவர்களிடம் தமிழ் மொழியை வளர்க்கும் செயலியை வெளியிட்டது சிங்கப்பூர் அரசு

இதை நன்கு அறிந்த தனியார் நிறுவனம் ஒன்று மக்கள் ஆங்கிலம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் செயலி ஒன்றை இலவசமாக வெளியிட்டிருக்கின்றது. தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் செயலி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்..

கல்ச்சர்ஆலி

கல்ச்சர்ஆலி

இந்த நிறுவனம் தனது பணியினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. செயலிகளை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

இலவசம்

இலவசம்

தற்சமயம் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி சுமார் 2.2 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்து விட்டது. இதற்கான வருமானத்தினை இந்த செயலி விளம்பரங்களின் மூலம் ஈட்டுகின்றது.

வரவேற்பு

வரவேற்பு

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமாராக 15% பேர் மட்டுமே ஆங்கிலத்தில் புலமை கொண்டிருப்பதால் இந்த செயலி பல லட்சம் பேருக்கும் உதவியாக இருக்கும் என இந்த செயலியின் துணை நிறுவனர் ப்ரன்ஷூ பட்னி தெரிவிக்கின்றார்.

கருத்து

கருத்து

அவுரங்காபாத் நகரை சேர்ந்த பணியாளர் ஒருவர் இந்த செயலியின் முக்கியத்துவம் அறிந்து இதனினை தன்னுடன் பணியாற்றும் 40 ஊழியர்களுக்கு ப்ளூடூத் மூலம் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார்.

செயல்பாடு

செயல்பாடு

இந்த செயலி அதி நவீன வாய்ஸ் ரெகக்னீஷன் மென்பொருள் மற்றும் எழுதுதல், படித்தல், பேசுதல் மற்றும் கேட்பது போன்ற ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றது.

மேக்ஸ் இங்லீஷ்

மேக்ஸ் இங்லீஷ்

கல்ச்சர் ஆலி போன்றே மேக்ஸ் இங்லீஷ் ஆன்லைன் மூலம் ஆங்கில வகுப்புகளை நடத்தி வருகின்றது.

பயன்

பயன்

வாடிக்கையாளர்கள் இந்த செயலியை தினமும் 15 நிமிடங்கள் வரை இலவசமாக பயன்படுத்த முடியும் என்றும் அதன் பின் பணம் செலுத்த வேண்டும் என்று மேக்ஸ் இங்லீஷ் இணை நிறுவனர் ரானு கவாத்ரா தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
Now you can learn English with the help of apps. There are plenty of apps available for the purpose and this will be really useful to learn the language.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X