யார் யார் பேச்சு எடுபடுமோ, அவங்க சொன்னா தான் சிலர் கேப்பாங்க, எடுத்துக்காட்டுக்கு நம்ம பாலசந்தர் சார் சொல்லி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிகெரட் பழக்கத்தை கைவிட்டது மாதிரி..!
சிகெரட்டை நீங்க விட வேணாம், இது 'விட' வைக்கும்..!
சரி நீங்க எப்போ புகைப்பழக்கத்தை கைவிட போறீங்க ? விட முடியலயா..! ஏதாவது உதவி வேணுமா..? சரி, இந்த ஆண்ராய்டு ஆப்ஸ்கள் உதவும். அது எப்படி என்று பின்வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம் வாங்க...

சேமிப்பு :
அமெரிக்காவின் கேன்சர் சோசைட்டியின் வெளியீடான க்விட் ஃபார் லைஃப் (QUIT FOR LIFE) ஆப். இது நீங்கள் புகையை விட்ட நாள் முதல் உங்கள் சேமிப்பை கணக்கிடும்..! இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..!

நேரம் :
ஜஸ்ட் க்விட் ஸ்மோக்கிங் ஹைப்பர்ஆக்டிவ் (JUST QUIT SMOKING HYPERACTIVE) ஆப். இது புகைக்க நீங்கள் பயன்படுத்தும் நேரம் மற்றும் பணத்தை கணக்கிட்டு உங்களுக்கு அதிர்ச்சி தருமாம்..! இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..!
தினசரி கோட்டா :
க்விட் ஸ்மோக்கிங் ஸ்லோலி (QUIT SMOKING SLOWLY) ஆப். இது தினசரி கோட்டா முறையில் உங்கள் புகைப்பழக்கத்தை கணக்கு செய்து, தேவையான தகவல்கள் மற்றும் வீடியோக்களை வழங்கி புகையை கைவிட உங்களை ஊக்குவித்துக் கொண்டே இருக்கும்..! இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..!
உடல் நல தகவல் :
க்விட் ஸ்மோக்கிங் - க்விட் நௌவ் (QUIT SMOKING - QUIT NOW) ஆப், நீங்கள் புகைப்பழக்கத்தை கைவிட்ட நாள் முதல் அல்லது குறைத்துக் கொண்ட நாள் முதல் ஆய்வு செய்து உங்களுக்கே உரிய உடல்நல தகவல்களை வழங்குமாம்..! இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..!

உயிர் வாழ்வீர்கள் :
ஸ்மோக் ஃப்ரீ (SMOKE FREE) ஆப், புகை பிடிக்காமல் இருக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் கணக்கு செய்து, நீங்கள் இன்னும் எவ்வளவு அதிகம் உயிர் வாழ்வீர்கள் என்பதை இது தெரிவிக்குமாம்..! இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..!