மாடுகள் வாங்க-விற்க உதவும் அற்புதமான செயலிகள்.!

ரைஸ் எக்ஸ்பெர்ட் செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஒவ்வொரு நிலத்திற்க தகுந்தபடி நெல் வகைகள் பிரித்துத்தரப்பட்டுள்ளன.

|

இந்தியாவில் உள்ள அதிக மக்கள் ஸ்மார்ட்போன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வங்கி பணிகள் முதல் மிண்கட்டணம் செலுத்துவது முதல் இப்போது பல்வேறு செயலிகள் (ஆப்) அதிகமாகத் தேவைப்படுகிறது என்று தான்
சொல்ல வேண்டும்.

மாடுகள் வாங்க-விற்க  உதவும் அற்புதமான செயலிகள்.!

மேலும் இதுபோன்ற செயலிகள் நமது வேலைகளை மிகவும் எளிமையாக்குகிறது. அதேபோல் விவசாயத்திற்கும் பயன்தரும் வகையில் ஆன்லைனில் பல்வேறு செயலிகள் கிடைக்கிறது, இந்த ஆப் வசதிகள் கண்டிப்பாக அனைத்து விவசாயிகளுக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன்

ஆன்லைன்

கால்நடை, வானிலை, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை வழங்கும் செயலிகள் ஆன்லைன் நிறைய உள்ளன. இது போன்ற தகவல்கள் விவசாயிகளுக்கு கண்டிப்பாக பயன்படும்.

ரைஸ் எக்ஸ்பெர்ட்:

ரைஸ் எக்ஸ்பெர்ட்:

கூகுள் பிளே ஸ்டோரில் இந்த ரைஸ் எக்ஸ்பெர்ட் செயலியை மிக எளிமையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இந்த செயலியை தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனம் உறுவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரைஸ் எக்ஸ்பெர்ட் சிறப்பம்சங்கள்:

ரைஸ் எக்ஸ்பெர்ட் சிறப்பம்சங்கள்:

ரைஸ் எக்ஸ்பெர்ட் செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஒவ்வொரு நிலத்திற்க தகுந்தபடி நெல் வகைகள் பிரித்துத்
தரப்பட்டுள்ளன. குறிப்பாக நெல் பயிரை தாக்கும் பூச்சிகள் பின்பு அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், ஊட்டச்சத்துக் குறைவால் தோன்றும் பிரச்சனைகள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

 நாற்று நடவு

நாற்று நடவு

ரைஸ் எக்ஸ்பெர்ட் செயலியில் நாற்று நடவு முதல் அறுவடை வரை பயன்படுத்தப்படும் தகவல்களுக்கான பகுதியும் தனித்தனியாக உள்ளது.

உழவன் மாடு :

உழவன் மாடு :

கண்டிப்பாக மாடு வளர்க்கும் அனைத்து மக்களுக்கு இந்த உழவன் மாடு செயலி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து எளிமையாக பயன்படுத்த முடியும்.

உழவன் மாடு சிறப்பம்சங்கள்:

உழவன் மாடு சிறப்பம்சங்கள்:

உழவன் மாடு செயலியைப் பொறுத்தவரை மாடு வளரப்பு பற்றி அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும், பின்பு பசு மாட்டின் வகைகள் என்ற பகுதியில் உள்நாட்டு மாட்டினங்கள் அயல் நாட்டு மாட்டினங்கள் என இரு பகுதிகள் உள்ளன. குறிப்பாக உழவு மற்றும் இதர வேலைகளுக்கு பயன்படும் மாட்டினங்கள் என மூன்ற வகைகளில் தகவல்களை பெறமுடியும்.

வாங்க-விற்க:

வாங்க-விற்க:

இந்த உழவன் மாடு செயலியில் சந்தை வாய்ப்பு குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது, வாங்க-விற்க எனும் விருப்பத்தில் கால்நடைகள், தீவனங்கள், கருவிகள்,மற்றும் பால் போன்றவற்றை வாங்கவும் விற்கவும் முடியும். கன்று பராமரிப்பு, கறவை
மாடு வளர்ப்பு, தீவன மேலாண்மை, இயந்திரங்கள் பயன்பாடு, வங்கிக்கடன், மானியம் கால்நடைக் காப்பீடு போன்ற தகல்களும்
கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி-பதில்

கேள்வி-பதில்

இந்த செயலி மூலம் பால் உற்பத்தியாளர்கள் தினசரி வரவு-செலவுக் கணக்கை குறித்து வைத்துக்கொள்ள வசதி செய்துதரப்பட்டுள்ளது. பின்பு கேள்வி-பதில் மூலம் நமது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

Best Mobiles in India

English summary
apps revolutionizing indian agriculture: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X