Home
News

குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!

வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card) தொடர்பான ஒரு முக்கிய வேலையை செய்ய.. குறைந்தது 4 - 5 நாட்கள் ஆகும் என்பதால்.. 2024 மக்களவை தேர்தல் தொடங்குவதற்குள் (ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள்) குறிப்பிட்ட வேலையை செய்து முடித்துவிடவும்!

அதென்ன வேலை? உங்கள் வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card) கிழிந்து போய் இருந்தாலோ அல்லது தொலைந்து போய் விட்டாலோ அல்லது திருடப்பட்டு இருந்தாலோ.. அதனுடைய டூப்ளிகேட் காப்பியை (Duplicate Copy) ஆன்லைன் அல்லது ஆப்லைன் வழியாக விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும்!

குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. Voter ID-க்கான முக்கிய வேலை!

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் (Online and Offline) ஆகிய இரண்டுமே எளிமையான செயல்முறைகள் தான் என்றாலும் கூட.. வாக்காளர் அடையாள அட்டைக்கான டூப்ளிகேட் காப்பியை (Duplicate Copy of Voter ID Card) மிகவும் எளிமையாக பெற உதவுவது ஆப்லைன் செயல்முறைதான்.

ஆப்லைன் செயல்முறை வழியாக ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் ஒரு டூப்ளிகேட் வோட்டர் ஐடிக்கான விண்ணப்பத்தை அளித்து, அதை பெற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால் எல்லாம் சரியாக நடக்குமா? சரியான நேரத்திற்குள் உங்களுக்கான டூப்ளிகேட் வோட்டர் ஐடி கார்டு உங்களிடம் வந்து சேருமா என்பது.. நீங்கள் எவ்வளவு விரைவாக நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.

குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. Voter ID-க்கான முக்கிய வேலை!

ஆப்லைன் செயல்முறை வழியாக டூப்ளிகேட் வோட்டர் ஐடி கார்டை பெறுவது எப்படி?
1. தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று, டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டைக்கு தேவையான படிவத்தை கோரவும்.
2. பின்னர் உங்கள் பெயர், முகவரி மற்றும் பழைய வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து குறிப்பிட்ட படிவத்தை நிரப்பவும்.

3. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், கோரப்பட்ட ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்கவும்.
4. நீங்கள் கொடுத்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், தேர்தல் அதிகாரி உங்களுக்கான டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவார்.
இந்த ஆப்லைன் செயல்முறையின் வழியாக சில நாட்களுக்குள் கூட உங்களுக்கான டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கலாம்.

குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. Voter ID-க்கான முக்கிய வேலை!

இதையே ஆன்லைன் வழியாக செய்வது எப்படி?
1. மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்திற்கு சென்று EPIC-002 படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
2. ரெஃப்ரென்ஸ் நம்பரை பெற, உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட படிவத்தை எடுத்து செல்லவும்.

3. பின்னர் படிவத்தை பூர்த்தி செய்து, எப்ஐஆர் நகல், முகவரிக்கான சான்று மற்றும் அடையாள சான்று போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
4. நீங்கள் படிவத்தை சமர்ப்பித்த பிறகு, தேர்தல் அலுவலகம் அதை சரிபார்க்கும். வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பிறகு, டூப்ளிகேட் வோட்டர் ஐடி பெறுவதற்கான அறிவிப்பை பெறுவீர்கள், பின்னர் நீங்கள் தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அதை வாங்கிக்கொள்ளலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Apply Duplicate Voter ID Card If Your Original Voter ID Card Torned or Lost or Stolen How
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X