ஒரு கிரகமே உருவாக்கிட்டாங்க- செவ்வாய் கிரகத்தில் வாழ பயிற்சி- விண்ணப்பங்கள் வரவேற்பு!

|

நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ்ந்ததா இல்லை உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்து வருகிறது. அப்படி உயிரினங்கள் வாழ முடியும் என சாத்தியக்கூறுகள் கண்டறியும் நிலையில் அங்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டிருக்கிறது.

செவ்வாய் கிரக உருவகப்படுத்தல் இடம்

செவ்வாய் கிரக உருவகப்படுத்தல் இடம்

செவ்வாய் கிரக உருவகப்படுத்தல் இடம், அதாவது செவ்வாய் கிரக மாதிரி சூழல் ஹூஸ்டனின் அருகே பானைவனப் பகுதியில் மணற்குன்றின் மீது உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரக உருவகப்படுத்தல் ஆனது மிகக்கடினமான சூழல் அமைக்கப்பட்டு இந்த இடத்தில் மனிதர்களை ஓராண்டு தங்கியிருந்து பயிற்சி அளிக்க இருக்கிறது.

ஆட்சேர்ப்பு நடவடிக்கை

செவ்வாய் கிரகத்தில் ஒரு வருட பணிக்கு ஆள்சேர்ப்பதாக நாசா அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது செவ்வாய் கிரக ஆய்வு வாழ்விடத்தில் வாழ பயிற்சி அளிக்கப்படுகிறது. நாசா நான்கு விண்ணப்பதாரர்களை தேடுகிறது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான ஒரு வருட கால பணிக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய் ஆய்வு வாழ்விடம்

உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் ஆய்வு வாழ்விடத்தில் வாழ நான்கு விண்ணப்பதாரர்களை நாசா தேடுகிறது. உருவாக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்களை அனுப்புவதும், இதனால் அந்த கிரகத்திற்கான எதிர்கால பயணங்களின் நிஜ வாழ்க்கையில் எதிர்கொள்ளப்படும் சவால்களுக்கு அவர்களை தயார்படுத்துவது இதன் நோக்கமாகும்.

1700 சதுர அடியில் அமைப்பு

செவ்வாய் வாழ்விட மாதிரி இடமானது, ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் உள்ள ஒரு 3டி பிரிண்டரால் 1700 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. மார்ஸ் டியூன் ஆல்பாவில் பங்கேற்பாளர்களுக்கான விண்ணப்பங்களை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாசா வரவேற்கத் தொடங்கியுள்ளது.

நிஜ வாழ்க்கையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள்

செவ்வாய் கிரகத்திற்கான எதிர்கால பயணங்களின்போது நிஜ வாழ்க்கையில் எதிர்கொள்ளப்படும் சவால்களுக்கு தயார்படுத்தப்படும் நடவடிக்கையாகும். நீண்ட கால பயணம், நில அடிப்படையிலான வாழ்க்கைமுறையில் நபர்களின் ஒத்துழைப்பு குறித்து நாசா ஆய்வு செய்ய இருக்கிறது.

பயணத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள்

செவ்வாய் கிரகத்தில் மேற்கொள்ளப்படும் பயணத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்களை உருவகப்படுத்தப்படுகிறது. இதில் விண்வெளி நடைப்பயணங்கள், அறிவியல் ஆராய்ச்சி, மெய்நிகர் யதார்த்தம் ரோபோ கட்டுப்பாடுகள் மற்றும் தகவல் தொடர்புகளை பரிமாறிக் கொள்ள பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பூமியில் அமைக்கப்பட்டுள்ள உருவகப்படுத்தல்கள் விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் உடல்நிலை மற்றும் மன சவால்களை புரிந்து கொள்ள உதவும் என கூறப்படுகிறது.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதி

விண்ணப்பதாரர்களுக்கான தகுதி

இந்த விண்ணப்பமானது அமெரிக்க குடிமக்கள் மற்றும் 30-55 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். மேலும் தேர்வுக்கான மற்ற அளவுகோல்கள் குறித்து பார்க்கையில், ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி, நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

நாசா தரப்பு தகவல்

நாசா தரப்பு தகவல்

அதோடு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து பொறியியல், கணிதம் அல்லது உயிரியல், இயற்பியல் அல்லது கணினி அறிவியல் போன்ற துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கூடுதலாக ஸ்டெம்-ல் முனைவர் பட்டப்படிப்பில் இரண்டு வருட வேலை முடித்தவர்களாக இருக்க வேண்டும். அதோடு நான்கு வருட தொழில்முறை அனுபவத்துடன் ஸ்டெம் துறையில் இராணுவ அதிகார பயிற்சி அல்லது இளங்கலை அறிவியல் முடித்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படலாம் என நாசா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Application Open: Nasa Recruiting Crew Members for Mars Mission

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X