Home
News

iPhone ரிப்பேர் செய்ய இனி ரூ.500 போதும்.. AppleCare One சந்தா அறிமுகம்.. ஒரே பிளானில் 3 டிவைஸ்கள்!

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கான ஒரு புதிய சந்தா சேவையை அறிவித்து உள்ளது. இது ஆப்பிள்கேர் ஒன் (AppleCare One) என்று அழைக்கப்படுகிறது. பல ஆப்பிள் டிவைஸ்களை வைத்து இருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக காப்பீடு (Coverage) வாங்க விரும்பாதவர்களுக்கு இது ஒரு நெறிப்படுத்தப்பட்ட தீர்வாக இருக்கும்!

ஆப்பிள்கேர் ஒன் மூலம், நீங்கள் ஒரே திட்டத்தில் மூன்று டிவைஸ்கள் வரை (Up to 3 Apple Devices) காப்பீடு செய்யலாம், மேலும் ஏற்கனவே உள்ள சந்தா கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் கூடுதல் டிவைஸ்களை சேர்க்கும் விருப்பமும் உள்ளது.

iPhone ரிப்பேர் செய்ய இனி ரூ.500 போதும்.. AppleCare One சந்தா அறிமுகம்

ஆப்பிள்கேர் ஒன் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் (AppleCare One Plan Benefits)? ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கவரேஜ் திட்டத்தின் விவரங்களை அதன் நியூஸ்ரூம் போஸ்ட் ஒன்றின் வழியாக பகிர்ந்து கொண்டது. அதன்படி, தற்செயலான டிராப்கள் (Accidental Drops) மற்றும் ஸ்பில்களுக்கு (Spills) அன்லிமிடெட் ரிப்பேர் (Unlimited Repair) கிடைக்கும்.

மேலும் ஆப்பிள் நிபுணர்களிடம் (Apple experts) இருந்து 24 மணி நேர ப்ரையாரிட்டி சப்போர்ட் (Priority Support), ஆப்பிள் நிறுவனகால் சான்றளிக்கப்பட்ட சேவை (Apple certified service) மற்றும் பேட்டரி கவரேஜ் (Battery Coverage) போன்ற ஆப்பிள்கேர் பிளஸ் சந்தாவின் (Apple Care Plus Subscription) அனைத்து நன்மைகளும் இதன் கீழ் கிடைக்கும்.

ஆப்பிள் கேர் ஒன் சாந்தாவின் கீழ் சில கூடுதல் நன்மைகளும் உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் டிவைஸ்களின் நிலையை பொறுத்து 4 ஆண்டுகள் வரை பழமையான மாடல்களை சேர்க்கலாம். கூடுதலாக, ஒரு வருடம் வரை பழமையானதாக இருக்கும் ஆப்பிள் ஹெட்ஃபோன்களையும் (Apple headphones) சேர்க்கலாம்.

மேலும், ஐபோனுக்கு (iPhone) மட்டுமே கிடைத்த திருட்டு மற்றும் இழப்பு பாதுகாப்பு (Theft and loss protection) இப்போது ஐபேட் (iPad) மற்றும் ஆப்பிள் வாட்ச் (Apple Watch) மாடல்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்படுகிறது. இருப்பினும், இதற்கான கட்டணம் மற்றும் விலக்குகள் பொருந்தக்கூடும். மேலும் எளிமைப்படுத்தப்பட்ட திட்ட மேலாண்மையும் (Plan management ) கூட இந்த சந்தாவின் மற்றொரு முக்கிய நன்மை ஆகும்.

அதாவது கவர் செய்யப்பட்ட ஒரு தயாரிப்பு ஆப்பிள் வழியாக வர்த்தகம் செய்யப்படும்போது, அது தானாகவே ஆப்பிள் கேர் ஒன் திட்டத்திலிருந்து அகற்றப்பட்டு புதிய டிவைஸ் உடன் மாற்றப்படும். மேலும், வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் கவரேஜிலில் புதிய தயாரிப்புகளை சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். இருப்பினும் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால் - வாடிக்கையாளரின் ஆப்பிள் அக்கவுண்ட்டில் (Apple Account) உள்ள டிவைஸ்களை மட்டுமே ஆப்பிள் கேர் ஒன் சந்தாவின் கீழ் சேர்க்க முடியும்.

ஆப்பிள் கேர் ஒன் சந்தாவின் விலை விவரங்கள் (AppleCare One Price): சந்தாவிற்கு உட்பட்ட டிவைஸ்களின் வகையைப் பொருட்படுத்தாமல், ஆப்பிள்கேர் ஒன்னின் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இதன் விலை மாதத்திற்கு $19.99 ஆகும்; அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,700) ஆகும்.

ஒரு டிவைஸ்க்கான மாதாந்திர கட்டணம் $5.99 ஆகும்; அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.500 ஆகும். கூடுதலாக கட்டணங்ங்களை செலுத்துவதன் மூலம் கூடுதல் டிவைஸ்களை இந்த கவரேஜ் திட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கும் தகவலின்படி, ஆப்பிள் கேர் ஒன சந்தாவை வாங்கும் வாடிக்கையாளர்கள் $11 வரை, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி தோராயமாக ரூ.900) வரை சேமிக்கலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
AppleCare One Subscription Plan Introduced Allows Coverage Of Multiple Devices Benefits Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X