ஆப்பிள் WWDC: மிகவும் எதிர்பார்த்த புதிய ஒஎஸ் அம்சங்களை அறிவித்த ஆப்பிள் நிறுவனம்.!

|

நேற்று நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்ச்சியில் புதிய ஒஎஸ் அப்டேட்களை பொறியாளர்கள் அறிவித்தனர். கண்டிப்பாக இந்த புதிய ஒஎஸ் அப்டேட் ஆனது பல்வேறு ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

ஐஒஎஸ் 15

ஐஒஎஸ் 15

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஒஎஸ் 15 தளத்தில் பேஸ்டைம் சேவை ஆனது புதிய அப்டேட்களை பெற்றுள்ளது. அதாவது இந்தமுறைபேஸ்டைம் சேவையில் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் ஆடியோ அனுபவம் முன்புஇருந்ததை விட மேம்பட்டு இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் பேஸ்டைம் செயலியில் மிகவும் எதிர்பார்த்த போர்ட்ரெயிட்மோட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு பேஸ்டைம் அழைப்புகளை லின்க்குகளாக மாற்றும் வசதி கூட வழங்கப்பட்டுள்ளது.

சேஜஸ் தளத்தில் பல சிறப்

குறிப்பாக ஐஒஎஸ் மேசேஜஸ் தளத்தில் பல சிறப்பான வசதிகள் அடங்கிய (DND-Do Not Disturb) அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. போக்கஸ் என்று அழைக்கப்படும் புது அம்சம் எதுபோன்ற முக்கிய குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன் வரவேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்ய வழி வகுக்கிறது.

கைக்கொடுக்கும் இஸ்ரோ: குறைந்த விலையில் உயர்தர வெண்டிலேட்டர்கள் கண்டுபிடித்து சாதனை!கைக்கொடுக்கும் இஸ்ரோ: குறைந்த விலையில் உயர்தர வெண்டிலேட்டர்கள் கண்டுபிடித்து சாதனை!

 ஆப்பிள் மேப், வெதர் செயலி போன்ற

மேலும் ஆப்பிள் மேப், வெதர் செயலி போன்ற பல்வேறு வசதகளில் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆப்பிள் மேப் வசதியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பின்பு இந்த செயலியில் முகவரிகள் புது முறையில் அதிக தெளிவாக காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக ஐஓஎஸ் 15 தளத்தில் வந்துள்ள புதிய வசதிகள் பல்வேறு பயனர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

ரூ.10,999 விலை முதல் அட்டகாசமான இன்பினிக்ஸ் நோட் 10 ஸ்மார்ட்போன்.. ப்ரோ மாடலின் விலை கூட மலிவு தான்..ரூ.10,999 விலை முதல் அட்டகாசமான இன்பினிக்ஸ் நோட் 10 ஸ்மார்ட்போன்.. ப்ரோ மாடலின் விலை கூட மலிவு தான்..

ஐபேட் ஒஎஸ் 15

ஐபேட் ஒஎஸ் 15

ஐபேட் ஒஎஸ் 15 விட்ஜெட்களில் நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ன. அதாவது விட்ஜெட்களை விளையாட்டு, பொழுதுபோக்கு என பல விதங்களில் பிரித்து அவற்றை நமக்கு ஏற்ற முறையில் அடுக்கி வைத்துக்கொள்ளலாம். பின்பு
ஆப் லைப்ரரி அம்சத்தில் அனைத்து செயலிகளையும் விட்ஜெட் மூலம் பார்க்கலாம்.

பிரமிக்க வைக்கும் அரிய வகை டைனோசர் எலும்புகள்: எந்த இனத்தின் டைனோசர் என்று தெரியுமா? எங்கு கிடைத்தது தெரியுமா?பிரமிக்க வைக்கும் அரிய வகை டைனோசர் எலும்புகள்: எந்த இனத்தின் டைனோசர் என்று தெரியுமா? எங்கு கிடைத்தது தெரியுமா?

பேட் ஒஎஸ் 15 தளத்தில்

அதேபோல் ஐபேட் ஒஎஸ் 15 தளத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சம் என்னவென்றால், ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை
பயன்படுத்த முடியும். குறிப்பாக செயலியின் அளவை திரையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மேலும்டிரான்ஸ்லேட் வசதியிலும் பல்வேறு முக்கிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இன்று அறிமுகமான புதிய வருமான வரி இணையதளம்.! முழு விவரம்.!இன்று அறிமுகமான புதிய வருமான வரி இணையதளம்.! முழு விவரம்.!

பிரைவசி வசதி

பிரைவசி வசதி

ஆப்பிள் நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த பிரைவசி சார்ந்த அம்சங்களையும் அறிவித்துள்ளது. அதாவது மெயில் பிரைவசி ப்ரோடெக்ஷன் அறிமுகமாகிறது, இது ஐபி முகவரிகளை மறைக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு ஆப்பிள் பயனர்கள் பயன்படுத்தம் சபாரி பிரவுசரில் டிராக் செய்வோரிடம்இருந்தும் ஐபி முகவரிகளை மறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் செயலிகள் எவ்வாறு பிரைவசி செட்டிங்ஸ்களை பயன்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வசதி கூட வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple WWDC Event 2021 Top Announcements: Apple Announces New OS Features: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X