Home
News

ChatGPT, Gemini சோலி முடிஞ்சு.. Google, OpenAI வயிற்றில் புளியை கரைத்த Apple அறிவிப்பு.. WWDC 2026-ல் மாஸ்?

ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது அடுத்த உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டிற்கான (WWDC 2026) தேதியை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளை போலவே இம்முறையும் ஆப்பிளின் வேர்ல்ட் வைட் டெவலப்பர்ஸ் கான்பிரென்ஸ் (Worldwide Developers Conference) ஆனது 5 நாட்கள் நடைபெறும் நிகழ்வாக இருக்கும். எப்போது தொடங்கும்? என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

ஆப்பிள் தனது 2026 ஆம் ஆண்டுக்கான டபுள்யூடபுள்யூடிசி மாநாடு ஆனது ஜூன் 8 முதல் ஜூன் 12 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக் வழங்கும் சிறப்பு முக்கிய உரையுடன் இந்நிகழ்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google, OpenAI வயிற்றில் புளியை கரைத்த Apple அறிவிப்பு.. WWDC 2026-ல்?

இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவனமானது, சாஃப்ட்வேரில் உள்ள சமீபத்திய முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தும். இதில் ஐஓஎஸ் 27 (iOS 27) முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டபுள்யூடபுள்யூடிசி 2026-ன் போது, ​​ஆப்பிள் நிறுவனம் ஐபேட்ஓஎஸ் (iPadOS), மேக்ஓஎஸ் (macOS), வாட்ஸ்ஓஎஸ் (watchOS) மற்றும் டிவிஓஎஸ் (tvOS) ஆகியவற்றின் லேட்டஸ்ட் வெர்ஷன்களை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வமுள்ளவர்கள் இந்த நிகழ்வை ஆப்பிள் டெவலப்பர் ஆப், ஆப்பிள் டெவலப்பர் இணையதளம் மற்றும் யூட்யூப் சேனல் வழியாக ஆன்லைனில் அபார்க்கலாம். நிகழ்வு நடக்கும் 5 நாட்களுமே, ஆப்பிள் நிறுவனமானது 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அமர்வுகளையும், குழு ஆய்வகங்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளையும் நடத்தும். இது டெவலப்பர்களை, ஆப்பிள் பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுடன் நேரடியாக இணைக்க அனுமதிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

OPINION: ஆப்பிளின் இந்நிகழ்வில் "வழக்கமான" ஓஎஸ் வெர்ஷன்கள் குறித்த அறிவிப்புகள் முக்கியமானவைகளாக இருக்கும். ஆனாலும் அதைவிட ஏஐ (AI) தொடர்பான ஒரு அறிவிப்பு தான் - பேசுபொருளாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) அல்லது கூகிள் (Google) நிறுவனத்தின் ஜெமினியின் (Gemini) தன்மையை ஒத்த, ஒரு சாட்பாட் பாணியிலான சிரி (Siri) பற்றிய பேச்சு அதிகரித்து வருகிறது.

மேலும் அட்வான்ஸ் லாங்குவேஜ் மாடல்களுக்காக (Advanced language models) ஆப்பிள் நிறுவனம் அதன் கூட்டாண்மைகளை நம்பியிருப்பதாகவும் சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் ஆப்பிள் இன்னும் இதை உறுதிப்படுத்தவில்லை. முந்தைய அப்டேட்களில் விடுபட்ட அம்சங்கள் இதில் இடம்பெறக்கூடும். அதாவது ரைட்டிங், இமேஜ் ட்வீக்ஸ் அல்லது லைவ் டிரான்ஸ்லேஷன் போன்றவற்றில் உதவும் வகையில், டெவலப்பர்கள் தங்கள் ஆப்களில் செயற்கை நுண்ணறிவை இணைக்க புதிய ஏபிஐக்களை (API) பெறக்கூடும்.

கடந்த ஆண்டு ஆப்பிளின் போட்டியாளர்கள் வேகமாக செயல்பட்டனர். கூகுளின் ஜெமினி ஏஐ (Gemini AI) ஆனது ஆண்ட்ராய்டில் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் டிவைஸ்கள் முழுவதும் கேலக்ஸி ஏஐ-ஐ (Galaxy AI) முன்னெடுத்து வருகிறது. மைக்ரோசாஃப்டின் கோபைலட் (Microsoft Copilot) ஆனது விண்டோஸ் மற்றும் அதன் ப்ரொடெக்டிவிட்டி ஸ்டாக் முழுவதும் உட்பொதிக்கப்பட்டுள்ளது.

ஒப்பிடுகையில் "இந்த விஷயத்தில்" ஆப்பிள் நிறுவனம் மிகவும் நிதானமான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த "மெதுவான வேகம்" ஆப்பிள் நிறுவனம் அதன் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டின் விளைவாக கூட இருக்கலாம். இதனால் தான் புதிய ஏ-சீரிஸ் மற்றும் எம்-சீரிஸ் சிப்களுடன், ஆப்பிளுக்கு அதிக திறன் கொண்ட ஏஐ அம்சங்களை லோக்கல் ஆகவே இயக்குவதற்கான வன்பொருள் திறன் கிடைத்துள்ளது.

ஆப்பிளின் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்கள், குறிப்பாக ஐபோன் 16 சீரிஸ் (Apple iPhone 16 Series) முதல் வரும் ப்ரோ வேரியண்ட்கள் ஆனது புதிய ஏஐ அம்சங்களில் பெரும்பாலானவற்றை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இது எல்லாமே வெறும் எதிர்பார்ப்புகள் தான். உண்மையான நிலவரம் 2026 ஜூன் மாதத்தில் தெரிய வரும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple WWDC 2026 from June 8 to June 12 iOS 27 Expected But Major Siri AI Upgrades Could be Highlight
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X