Home
News

அடுத்த 5 நாட்களுக்கு iPhone யூசர்களை கையில் பிடிக்க முடியாது.. Apple WWDC 2025.. LIVE ஆக பார்ப்பது எப்படி?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் டபுள்யூடபுள்யூடிசி 2025 (WWDC 2025) நிகழ்வானது, அதாவது 2025 ஆம் ஆண்டிற்கான ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு (Apple annual developer conference 2025) ஆனது இன்று (அதாவது ஜூன் 9 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.

மொத்தம் 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 26 (iOS 26), ஐபேட் ஓஎஸ் 16 (iPadOS 26), மேக் ஓஎஸ் 26 (MacOS 26) மற்றும் வாட்ச் ஓஎஸ் 26 (WatchOS 26) மற்றும் பல புதிய அறிமுகங்களை / அறிவிப்புகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Apple WWDC 2025 நிகழ்வு.. LIVE ஆக பார்ப்பது எப்படி?

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 18 (iOS 18), ஐபேட் ஓஎஸ் 18 (iPadOS 18), டிவி ஓஎஸ் 18 (tvOS 18) மற்றும் பலவற்றை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த ஆண்டு நடக்கும் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ முன்னிலைப்படுத்தும் என்றும், ஆப்பிள் டிவைஸ்களுக்கான புதிய ஏஐ அம்சங்களை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை எங்கே, எப்போது பார்ப்பது (Apple WWDC 2025 Live Streaming Timing Details)? இந்த ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டிற்கான முக்கிய உரை (Keynote) இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கும். இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல், ஆப்பிள் நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் ஆப்பிள் டிவியில் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

முன்னரே குறிப்பிட்டபடி ஆப்பிளின் இந்த வருடாந்திர டெவலப்பர் மாநாடு ஆனது மொத்தம் 5 நாட்கள் நடக்கும். அதாவது ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெறும். இந்நிகழ்வின் முக்கிய அறிவிப்பாக ஐஓஎஸ் 26 இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ஆப்பிள் அதன் ஓஎஸ்-க்கு பெயரிடுவதில் இருக்கும் குழப்பத்திற்கு தீர்வு கொண்டுவர உள்ளது.

அறியாதோர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அதன் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர்களுக்கு குழப்பமான முறையில் தான் பெயரிடும். எடுத்துக்காட்டிற்கு ஐபோன் 15 மாடல் ஆனது ஐஓஎஸ் 15 உடன் அறிமுகமாகி இருந்தால், ஐபோன் 16 மாடல் ஆனது ஐஓஎஸ் 16 உடன் அறிமுகமாகி இருந்தால்.. ஆப்பிளின் பெயரிடும் மரபுகளில் எந்த குழப்பமும் இருக்காது. ஆனால் ஐபோன் 16 மாடல் ஆனது ஐஓஎஸ் 18 கொண்டு இயங்குகிறது. இது குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு பெயர் அமைப்பாகும்.

இந்த குழப்பம் ஐபோன்களில் மட்டுமில்லை மேக் ஓஎஸ் 16 மற்றும் வாட்ச் ஓஎஸ் 12 போன்ற பொருந்தாத எண்களை கொண்டுள்ள மற்ற ஆப்பிள் தயாரிப்புகளிலும் கூட உள்ளது. எனவே தான் இந்தாண்டு, ஆப்பிள் நிறுவனம் காலண்டர் அடிப்படையிலான பெயரிடும் அமைப்பை தேர்வு செய்துள்ளது. இது கார் மாடல்களை போல் செயல்படும். அதாவது 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் 2026 மாடலை வாங்குவது போன்ற லாஜிக்கில் செயல்படும்.

முன்னரே குறிப்பிட்டபடி ஆப்பிளின் இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் மறுபெயரிடல் திட்டமானது ஐஓஎஸ் 26 க்கு மட்டும் வராது. காலப்போக்கில் ஆப்பிள் நிறுவனம் அதன் மற்ற டிவைஸ்களுக்கான ஓஎஸ்-க்கும் இந்த புதிய பெயரிடும் முறையை கொண்டு வரலாம் அல்லது இன்று தொடங்கும் நிகழ்விலேயே ஐஓஎஸ் 26-ஐ தொடர்ந்து ஐபேட் ஐஓஎஸ் 26 (iPadOS 26), மேக் ஓஎஸ் 26 (macOS 26), டிவி ஓஎஸ் 26 (tvOS 26), வாட்ச் ஓஎஸ் 26 (watchOS 26) மற்றும் விஷன் ஓஎஸ் 26 (visionOS 26) ஆகியவற்றை அறிவிக்கலாம்.

Best Mobiles in India

English summary
Apple WWDC 2025 iOS 26 Event Live Streaming Timing Starts Today June 9 Ends June 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X