WWDC 2025: சாப்ட்வேர், யுஐ அப்டேட்கள் மீது கவனம்.. AI பெரிதாக இருக்காது.. இந்த வருடம் என்ன எதிர்பார்க்கலாம்?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு 2025 (Worldwide Developers Conference 2025) ஆனது சாப்ட்வேர், யூசர் எக்ஸ்பிரீயன்ஸ் அடிப்படையாக கொண்ட அறிவிப்புகளையே பிரதானமாக கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏஐ தொடர்பான அறிவிப்புகள் பெரியளவில் இருக்காது என்றும் கூறப்படுகிறது. கலிபோர்னியாவின் குபெர்டினோவில் இருக்கும் ஆப்பிள் பார்க்கில் நடைபெறும் இந்த ஆப்பிள் டபுள்யூடபுள்யூடிசி 2025 (Apple WWDC 2025) மாநாட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
டபுள்யூடபுள்யூடிசி 2025 என்ன எதிர்பார்க்கலாம்? ஜூன் 9 முதல் ஜூன் 13 வரையில் இந்த உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு 2025 நடக்கிறது. இந்த மாநாட்டில் ஐஓஎஸ் 26 (iOS 26) தொடர்பான மேஜர் அப்டேட்கள் இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால், ஐஓஎஸ் 19 ஆனது, ஐஎஸ் 26 ஆக மாற இருக்கிறது. இதை ப்ளூம்பெர்ககின் மார்க் குர்மான் (Mark Gurman) உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அதே நேரத்தில் ஐபாட்ஓஎஸ் 26 (iPadOS 26), மேக்ஓஎஸ் 26 (macOS 26), டிவிஓஎஸ் 26 (tvOS 26) மற்றும் வாட்ச்ஓஎஸ் 26 (watchOS 26) ஆகியவை களமிறங்க இருப்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். இதுபோக ஆப்பிள் விஷன் ப்ரோ மாடல்களுக்கான விஷன் ஓஎஸ் (visionOS) வர இருக்கிறது. இந்த ஓஎஸ் அறிவிப்புகள் மட்டுமல்லாமல், கேமிங் ஆப் (Gaming App) வர இருக்கிறது.
டபுள்யூடபுள்யூடிசி 2025 என்ன எதிர்பார்க்க முடியாது? இந்த உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் (Apple Intelligence) தொடர்பான அறிவிப்புகளை பிரதானமாக எதிர்பார்க்க முடியாது என்பதை மார்க் குர்மான் குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும், ஏஐ என்ஹான்ஸ்மெண்ட் பீச்சர்களை கனிசமாக எதிர்பார்க்க முடியும்.
ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே, ஆன்-டிவைஸ் ஏஐ மாடல்களில் (On-Device AI Models) கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல பேட்டரி மேலாண்மை, சாபாரி, போட்டோஸ் ஆகியவற்றிலும் ஏஐ பீச்சர்களை என்ஹான்ஸ் செய்ய இருக்கிறது. ஆகவே, இதுதொடர்பான ஏஐ அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். ஆப்பிள் இன்டலிஜென்ஸ் பீச்சர்களில் சிலவற்றில் அடுத்த வெர்ஷன்களை எதிர்பார்க்கலாம்.
ஆனால், கடந்த டபுள்யூடபுள்யூடிசி 2024 இவென்ட்டில் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் அறிவிப்புகள் மேஜர் ரோல் செய்ததை போல, இந்த டபுள்யூடபுள்யூடிசி 2025 இவென்ட்டில் எதிர்பார்க்க முடியாது. உண்மையில், ஆப்பின் நிறுவனத்தின் டபுள்யூடபுள்யூடிடி இவென்ட் தொடங்கும் முன்பே அதில் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் கசிய தொடங்கிவிடும்.

அதேபோல இந்த முறையும் கசிந்திருக்கின்றன. ஆனால், சாப்ட்வேர் மற்றும் ஓஎஸ் தொடர்பான அப்டேட்களே கிடைத்துள்ளன. ஏஐ அறிவிப்புகள் தொடர்பான லீக்குகள் குறைவாகவே இருக்கின்றன. இதையும், மார்க் குர்மான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததையும் வைத்து பார்க்கும்போது, இந்த டபுள்யூடபுள்யூடிசி 2025 இவென்ட்டானது ஏஐ பிரியர்களுக்கானது கிடையாது என்பது தெரிகிறது.
ஆகவே, 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் மட்டுமே ஏஐ அறிவிப்புகள் மேஜர் ரோல் செய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும், ஆப்பிள் நிறுவனமானது, ஓஎஸ் 26 அறிவிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் ஐஓஎஸ், ஐபாட்ஓஎஸ், மேக்ஓஎஸ், விஷன்ஓஎஸ், வாட்ச்ஓஎஸ், டிவிஓஎஸ் போன்ற ஒட்டுமொத்தத்தையும் ஒருகிணைக்க முடிவு செய்துள்ளதை பார்க்க முடிகிறது.
இது ஒட்டுமொத்த ஆப்பிள் டிவைஸ்களிலும் ஒருகிணைப்பு மற்றும் யூசர் இன்டர்பேஸை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும், அதேபோல விஷன் ஓஎஸ் பீச்சர்களும் மற்ற ஆப்பிள் டிவைஸ்களுடன் ஒருகிணைக்கும்படி அப்கிரேட்களை கொடுக்க வாய்ப்புள்ளது. ஆப்பிள் நிறுவனம், அடுத்த ஜெனரேஷன் சிரி (Siri) பேஸ்டு லார்ஜக் லேங்குவேஜ் மாடல்களில் கவனம் செலுத்தி வருகிறது.
அதேபோல சாட்ஜிபிடியை போல ப்ராஜெக்ட் மல்பெர்ரி (Project Mulberry) திட்டத்தையும் செயல்படுத்தி வருவதாக ரூமர்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் முழுமையாகவில்லை என்பதை அனுமானிக்க முடிகிறது. இதனாலேயே மேஜர் ஏஐ அறிவிப்புகள் தொடர்பான எந்த லீக்குகளும் இல்லை. ஆகவே, ஆப்பிள் பிரியர்களுக்கு ஏஐ எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் இருக்காது என்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications