Home
News

iPhone 16e லாம் எம்மாத்திரம்.. WWDC 2025 இல் உண்மையான கச்சேரி.. Apple-ன் 4 முக்கிய அறிவிப்புகள்!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் மிகவும் முக்கியமான வருடாந்திர நிகழ்வான - டபுள்யூடபுள்யூடிசி 2025 (WWDC 2025) எப்போது நடக்கும் என்கிற தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் 2025 ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட்வைட் டெவெலப்பர்ஸ் கான்ஃபிரென்ஸ் (Worldwide Developers Conference 2025) நிகழ்வானது ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 13 வரை நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது

இந்த நிகழ்வில் என்னென்ன அறிவிப்புகள் நடக்கும்? என்னென்ன அறிமுகங்கள் நடக்கும்? என்பதை, ஆப்பிள் நிறுவனம வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் கூட.. டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் நான்கு முக்கியமான அறிவிப்புகளை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அதென்ன அறிவிப்புகள்? இதோ விவரங்கள்:

WWDC 2025 இல் உண்மையான கச்சேரி.. Apple-ன் 4 முக்கிய அறிவிப்புகள்!

01. ஐஓஎஸ் 19 (iOS 19): ஆப்பிளின் டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வின் முதல் மற்றும் முக்கிய அறிவிப்பாக ஐஓஎஸ் 19 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் மேக்புக்கள் உள்ளிட்ட ஆப்பிளின் சுற்றுச்சூழல் அமைப்பு முழுவதும் ஒருங்கிணைந்த தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் ஐஓஎஸ் 19 புதுப்பிக்கப்பட்ட இன்டர்பேஸ்-ஐ அறிமுகப்படுத்தும் என்று ஆரம்பகால தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிளின் ஐஓஎஸ் 19 அப்டேட் ஆனது அப்டேட் கஸ்டமைஷேஷன் விருப்பங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக கண்ட்ரோல் சென்டரில் ஃபோகஸ் மோகளை இன்னும் ஆழமாக ஒருங்கிணைப்பதன் மூலம். பயனர்கள் விட்ஜெட்டுகளின் விரிவாக்கம், சிறந்த பரிந்துரைகள் மற்றும் மேம்பட்ட சிஸ்டம் ஆகியவற்றின் விரிவாக்கத்தையும், சிஸ்டம் முழுவதும் சூழல்-விழிப்புணர்வு வடிவமைப்பையும் காணலாம்

ஐஓஎஸ் 19 அப்டேட்டின் முக்கிய சிறப்பம்சம் - கேமரா ஆப்பின் குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்பு ஆகஇருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் போட்டோ மற்றும் வீடியோ மோட்களுக்கான புதிய டாகில்களை செயல்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இத்துடன் ரெசல்யூஷன், பிரேம் ரேட் மற்றும் எக்ஸ்போஷர் செட்டிங்ஸ்களுக்கான விரைவான அணுகலையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, போட்டோ லைப்ரரியை உடனடியாக அணுகுவதற்கான பிரத்யேக பட்டனை கொண்ட, வ்யூஃபைண்டர் மேலும் நெறிப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

02. ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence): கடந்த ஆண்டு டபுள்யூடபுள்யூடிசி 2024 இல் விவாதிக்கப்பட்ட ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் டபுள்யூடபுள்யூடிசி 2025 இல் அறிவிக்கப்படும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள் முக்கிய அறிவிப்புக்கயில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03. சாஃப்ட்வேர் அப்டேட்கள்: ஐபோன் மற்றும் ஐபேட்-க்கு வரும் இன்டர்பேஸ் அப்டேட்கள் மேக்ஓஎஸ் 16 வெளியீட்டுடன் மேக்-க்கும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வடிவமைப்பு மாற்றங்களின் நோக்கத்தை வெளிப்படுத்துவதோடு,மேக்ஸ் ஓஎஸ் சீக்குவாவை (MacOS Sequoia) தொடர்ந்து, மேக்ஓஎஸ்-கானா அடுத்த கலிபோர்னியா-தீம்டு பெயரை ஆப்பிள் அறிவிக்க வாய்ப்புள்ளது. டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வில் மற்ற ஆப்பிள் சாஃப்ட்வேர்களும் அப்டேட்களை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

04. ஹார்ட்வேர்: டபுள்யூடபுள்யூடிசி ஆனது "பாரம்பரியமாக" சாஃப்ட்வேர்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், ஆப்பிள் இந்த நிகழ்வை புதிய ஹார்ட்வேர்களை வெளியிடவும் பயன்படுத்தி வருகிறது. உதாரணமாக, டபுள்யூடபுள்யூடிசி 2023 இல், ஆப்பிள் நிறுவனம் அதன் மேக்புக் ஏர் (MacBook Air), மேக் ஸ்டூடியோ (Mac Studio) மற்றும் மேக் ப்ரோவிற்கான (Mac Pro) அப்டேட்களுடன் விஷன் ப்ரோ (Vision Pro) ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியது.

Take a Poll

2025 தொடங்கியதில் இருந்தே ஆப்பிள் நிறுவனம் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து விட்டது: மேக்புக் ஏர் 14 (MacBook Air M4), புதுப்பிக்கப்பட்ட மேக் ஸ்டூடியோ (Mac Studio), ஐபேட் ஏர் எம்3 (iPad Air M3) மற்றும் ஐபோன் 16இ (iPhone 16e). எனவே டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வில் புதிய ஹார்ட்வேர் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஒருவேளை ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air) பற்றிய சில அதிகாரப்பூர்வ பேச்சுக்கள் அடிபடலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple WWDC 2025 Event on June 9 iOS 19 New AI Features Software Updates iPhone 17 Air
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X