Google I/O 2025 முடிந்த வேகத்தில் Apple WWDC 2025 நிகழ்வின் தேதிகள் அறிவிப்பு.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர ஐ/ஓ 2025 மாநாடு (Google I/O 2025) முடிந்த வேகத்தில் ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (Worldwide Developers Conference) ஆன டபுள்யூடபுள்யூடிசி 2025 (WWDC 2025) ஆனது ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முந்தைய ஆண்டுகளை போலவே, 2025 வருடாந்திர டெவலப்பர் மாநாடு கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் நடைபெறும், அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ளவர்கள் இந்நிகழ்வை ஆன்லைன் வழியாக நேரலையில் பார்க்கலாம். டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வின் தேதிகள், நேரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் குறித்த விவரங்கள் இதோ:

டபுள்யூடபுள்யூடிசி 2025 ஆனது ஜூன் 9 முதல் ஜூன் 13 வரை கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் நடைபெறும் என்று ஆப்பிள் அறிவித்து உள்ளது. ஜூன் 9 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக் நடத்தும் ஒரு நேரடி முக்கிய அமர்வுடன் இந்நிகழ்வு தொடங்கும்.
இது இந்த ஆண்டு முழுவதும் iOS, iPadOS, visionOS, watchOS மற்றும் tvOS போன்ற பல்வேறு ஆப்பிள் தளங்களில் வரும் அனைத்து புதிய அப்டேட்கள் மற்றும் மாற்றங்கள் குறித்த முக்கிய உரையாக இருக்கும். கூகுள் நிறுவனம் அதன் வருடாந்திர ஐ/ஓ 2025 மாநாட்டில் ஜெமினி மற்றும் ஏஐ குறித்த பல முக்கிய அப்டேட்களை அறிவித்து உள்ளதால், அதற்கு போட்டியாக டபுள்யூடபுள்யூடிசி 2025 மாநாட்டில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் குறித்த சில சுவாரசியமான அறிவிப்புகள் வெளியாகலாம்.
டிம் குக்குன் முக்கிய உரைக்குப் பிறகு, மென்பொருள் மற்றும் தளங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஆழமாக ஆராய ஆப்பிள் ஒரு பிளாட்ஃபார்ம்ஸ் ஸ்டேட் ஆஃப் தி யூனியன் மாநாட்டை நடத்தும். இப்படியா டபுள்யூடபுள்யூடிசி 2025 ஆனது ஆப்பிள் நிபுணர்களுடன் 100க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தும். இதனால் டெவலப்பர்கள் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகள் பற்றிய தகவல்களை பெற முடியும்.
டபுள்யூடபுள்யூடிசி 2025 மாநாட்டின் மிகப்பெரிய அறிவிப்புகள் மற்றும் சிறப்பம்சங்களை விவரிக்கும் வழிகாட்டிகள் மற்றும் ஆவணங்களையும் அவர்கள் அணுக முடியும். ஆப்பிள் நிறுவனம் அதன் டபுள்யூடபுள்யூடிசி 2025 மாநாட்டின் முக்கிய அறிவிப்புகள் குறித்து வாய் திறக்காமல் இருந்தாலும், முந்தைய மாநாடுகள் வழியாக இந்த ஆண்டு என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய ஒரு யோசனையை எங்களுக்கு உள்ளது
ஆப்பிள் அதன் அடுத்த முக்கிய ஆப்ரேடிங் சிஸ்டம் அப்டேட்களின் விவரங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - iஅதாவது OS 19, iPadOS 19, macOS 16, watchOS 12, மற்றும் tvOS 19. iOS 19 மற்றும் iPadOS 19 ஆகியவைகள் ரீடிசைன் செய்யப்பட்ட இன்டர்பேஸ் உடன் பெரிய வடிவமைப்பு மேம்படுத்தல்களை பெறும் என்று ஊகிக்கப்படுகிறது. இவைகள ஆப்பிள் விஷன் ப்ரோவிற்கு இணையான அனுபவத்தை கொண்டுவரக்கூடும்.
கூகுள் வருடாந்திர ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டின் சுவாரஸ்யமான அறிவிப்புகளை பொறுத்தவரை கூகுள் மீட் லைவ் டிரான்ஸ்லேஷன் (Google Meet Live Translation) அம்சத்தை கூறலாம். இந்த புதிய ஜெமினி அடிப்படையிலான ஏஐ அம்சத்துடன், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் மீட்டிற்கான "லைவ் ஸ்பீச்" மொழிபெயர்ப்பை கொண்டுவருகிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம், உங்கள் பார்ட்னர் விரும்பும் மொழியில் நீங்கள் சொல்வதை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்க முடியும்.
கூடுதலாக, உரையாடலை மொழிபெயர்க்கும்போது, குரலின் இயல்பான வெளிப்பாடுகளை அப்படியே வைத்திருக்க ஏஐ முயற்சிக்கும் என்றும், இதனால் தொனி மற்றும் வெளிப்பாடு சரியாக இருக்கும் என்றும் கூகுள் உறுதியளிக்கிறது. இதுகுறித்த விளக்கக்காட்சியின் போது, ஆங்கில பேச்சாளர் ஒருவர் ஸ்பானிஷ் பேச்சாளருடன் அழைப்பில் இருப்பது போன்ற ஒரு டெமோவை கூகுள் காட்டியது.
லைவ் ஸ்பீச் மொழிபெயர்ப்பு அம்சம் இயக்கப்பட்டதும், கூகுள் மீட் அவர்கள் சொல்வதை ஆங்கிலத்தில் டப்பிங் செய்தது. முதற்கட்டமாக கூகுளின் ஏஐ ப்ரோ திட்டம் அல்லது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஏஐ அல்ட்ரா திட்டத்தில் இணைந்த பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் அனைத்து பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








