Home
News

Apple WWDC 2024: அடிச்சு தூக்கும் iOS 18 அப்டேட்.. மொத்த Android யூசர்களையும் வாய்பிளக்க வைக்கும் அம்சங்கள்!

ஆப்பிள் (Apple) நிறுவனமானது டபுள்யூடபுள்யூடிசி 2024 (WWDC 2024) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அதன் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐஓஎஸ் 18 உடன் சேர்த்து ஐபாட்ஓஎஸ்18 மற்றும் வாட்ச்ஓஎஸ் 11 அப்டேட்ஸ் வழியிலான புதிய அம்சங்கள் மற்றும் முக்கிய மாற்றங்களையும் அறிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டபடியே ஆப்பிளின் டபுள்யூடபுள்யூடிசி 2024 நிகழ்வானது ஹார்ட்வேர் அறிவிப்புகள் மற்றும் அறிமுகங்களை அப்படியே ஓரங்கட்டிவிட்டு, முழுக்க முழுக்க சாஃப்ட்வேர் மேம்படுத்தல்களில் கவனம் செலுத்தியுள்ளது. அப்படி ஆப்பிள் என்னென்ன அப்கிரேட்களை செய்துள்ளது. இதோ விவரங்கள்:

ஐஓஎஸ் 18 (iOS 18) அப்டேட்டின் கீழ் வரும் புதிய அம்சங்கள்: ஐஓஎஸ் 18 ஆனது சில விரிவான கஸ்டமைசேஷன்களுடன் வருகிறது. இப்போது, ​​பயனர்கள் தங்கள் ஐபோன்களை புதிய வால்பேப்பர்கள், ஐகான்கள் மற்றும் விட்ஜெட்கள் (Widgets) மூலம் கஸ்டமைஸ் (Customize) செய்யலாம்.

Apple WWDC 2024: அடிச்சு தூக்கும் iOS 18 அப்டேட்!

இதில் சைட் மற்றும் டாக் பிளேஸ்மென்ட்ஸும் அடங்கும். ஆப்பிளின் கூற்றுப்படி, இந்த மாற்றம் பயனர்களுக்கான அணுகல்தன்மையை மேம்படுத்தும். இந்த மாற்றத்தில், வால்பேப்பர் ஸ்கீம்களால் பரிந்துரைக்கப்பட்ட புதிய டார்க் மோட் லுக் மற்றும் ஆப்ஸ் ஐகான் டின்ட் நிறங்களுக்கான கஸ்டமைசேஷன் ஷீட் ஆகியவைகளும் அடங்கும்.

இது தவிர ஐஓஎஸ் 18 வழியாக கண்ட்ரோல் சென்டரலும் கூட சில முக்கிய மேம்படுத்தல்களை பெறுகிறது. மீடியா பிளேபேக் மற்றும் ஹோம் கன்ட்ரோல்கள் உட்பட பல கண்ட்ரோல் க்ரூப்களுக்கு இடையேயான ஸ்வைப்களையும் இனி அனுமதிக்கும். இந்த அப்டேட் ஒரு விதத்தில் ஆண்ட்ராய்டின் மெட்டீரியல் யூ டிசைன் லேங்குவேஜை நினைவூட்டுகிறது. எது எப்படியோ, ஐஓஎஸ் 18 வழியாக ஐபோனின் கஸ்டமைசேஷன் மற்றும் திறன்கள் கணிசமாக அதிகரிக்கபட்டுள்ளது.

Apple WWDC 2024: அடிச்சு தூக்கும் iOS 18 அப்டேட்!

இதுதவிர்த்து ஐஓஎஸ் 18-ல் சில மேம்படுத்தப்பட்ட ப்ரைவசி அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது. முக்கியமான ஒருவர் பின் அல்லது ஃபேஸ்ஐடி மூலம் ஆப்களை லாக் செய்யும் அம்சத்தை கூறலாம். இதன்மூலம் அங்கீகரிக்கப்படாத அணுகல்களை தடுக்கலாம் மற்றும் ஆப்களில் உள்ள தரவுகளை பாத்துக்கலாம் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் ஐஓஎஸ்18-ல் லாக்டு போல்டரில் ஆப்களை ஹேட் செய்து வைக்கும் திறனும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்களுடன் டேட்டா எவ்வாறு பகிரப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்தும் திறனும் சேர்க்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 18 உடன், பயனர்கள் தங்கள் முழு காண்டாக்ட் லிஸ்ட்டிற்குமான அணுகலை (Access to Full Contact List) வழங்குவதற்கு பதிலாக குறிப்பிட்ட காண்டாகட்களை மட்டும் ஆப்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

Apple WWDC 2024: அடிச்சு தூக்கும் iOS 18 அப்டேட்!

ஐஓஎஸ் 18 வழியாக மெசேஜஸ் ஆப் ஆனது ஆர்சிஎஸ் மெசேஜிங்ற்கான ஆதரவு, டெக்ஸ்ட் பார்மெட்டிங் மற்றும் டேப்பேக் ரெஸ்பான்ஸ்களில் ஈமோஜியை பயன்படுத்துதல் உள்ளிட்ட புதிய அம்சங்களுக்கான ஆதரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆர்சிஸ் மெசேஜிங் என்பது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இடையே மெசேஜ்களை அனுப்புவதை ஐமெசேஜஸ்-க்கு (iMessages) இணையாக கொண்டுவரும் அப்டேட் ஆகும்.

ஐஓஎஸ் 18 வழியாக புதிய இன்டர்பேஸ் மற்றும் ஆப் ஐகானை மட்டுமின்றி, ஆப்பிளின் அசிஸ்டென்ட் ஆன சிரி மேலதிக கான்வேர்ஷேஷனல் ஆகவும் அப்கிரேட்செய்யப்பட்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, இந்த விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் ஆனது பயனர்கள் இருக்கும் இடத்தை பொறுத்து வாய்ஸ் கண்ட்ரோல்களை பயன்படுத்தி சிரி என டைப் செய்யவும் அனுமதிக்கும்.

Apple WWDC 2024: அடிச்சு தூக்கும் iOS 18 அப்டேட்!

இதுதவிர்த்து ஆப்பிள் இன்டெலிஜென்ஸால் (Apple Intelligence) இயக்கப்படும் ஆன்-ஸ்கிரீன் அவேர்னெஸ் அம்சங்களையும் (On-Screen Awareness Features) சிரி பெறவுள்ளது அறியதோர்களுக்கு ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் தனியுரிமையை மையமாக கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்பாகும், இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.

ஐபாட்ஓஎஸ்18 (iPadOS 18) அப்டேட்டின் கீழ் வரும் புதிய அம்சங்கள்: இது டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) மற்றும் கால்குலேட்டரை கொண்டு வருகிறது: ஐபாட்ஓஎஸ் 18 வழியாக டைனமிக் ஐலேண்ட் போன்ற மேம்படுத்தப்பட்ட டேப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஐஓஎஸ் 18-ல் இருந்து கஸ்டமைசேஷன் விருப்பங்களையும் கொண்டு வருகிறது இதன்கீழ் பயனர்கள் ஹோம் லாக் மற்றும் கண்ட்ரோல் சென்டரை கஸ்டமைஸ் செய்ய முடியும்.

வாட்ச்ஓஎஸ் 11 (WatchOS 11) அப்டேட்டின் கீழ் வரும் புதிய அம்சங்கள்: இது ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பை மேம்படுத்த பல புதிய அம்சங்களை கொண்டு வருகிறது. புதிய வைட்டல்ஸ் ஆப் ஆனது இதயத்துடிப்பு போன்ற அத்தியாவசிய சுகாதார அளவீடுகளைச் சரிபார்க்க பயனர்களை அனுமதிக்கிறது. மேலும் கர்ப்பகால வயது மற்றும் அதிக இதயத் துடிப்பு வரம்பு போன்ற கர்ப்பிணி பயனர்களுக்கான கூடுதல் தகவல்களும் இந்த அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ரீடிசைன் செய்யப்பட்ட ஆப்பிள் பிட்னஸ் பிளஸ் (Apple Fitness+) எக்ஸ் பீரியன்ஸும் விரைவில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple WWDC 2024 Major Upgrades New Features Added Via iOS 18 WatchOS 11 iPadOS 18 Updates
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X