Home
News

ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு: டிம் குக்-ன் முக்கிய சிறப்பு அறவிப்புகள் என்னென்ன?

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள், 2019 டெவலப்பர்கள் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது.

 டிம் குக்

டிம் குக்

குறிப்பாக ஆப்பிய் நியூஸ் பிளஸ், ஆப்பிள் டிவி பிளஸ் போன்ற சேவைகள் குறித்த அறிவிப்போடு கீநோட உரையை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அவர்கள் தொடர்ங்கினார்.

ஆப்பிள் டிவி

ஆப்பிள் டிவி

மேலும் ஆப்பிள் டிவியில் உள்ள இயங்குதளம் வீட்டில் உள்ள ஒவ்வொறுவருக்கும் பிரத்தியேக சேனல்களை பரிந்துரை செய்யும். பின்பு எக்ஸ் பாக்ஸ் ஒன் மற்றும் பிளே ஸ்டேஷன் 4 போன்ற விளையாட்டு சாதனங்களுடன் ஒன்றிணைந்து
செயல் ஆற்றும் வகையில் ஆப்பிள் டிவி மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச்

இந்த ஆப்பிள் வாட்ச் இயங்குதளத்தில் புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, பின்பு வாட்ச்-க்கு வண்ணம் சேர்க்கும் வகையில் தீம்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் மேம்படுத்தப்பட்ட புதிய ஆப்பிள் செயலி முந்தைய பதிப்பை விட 30சதவீதம் வேகமாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சில மாற்றங்கள்

சில மாற்றங்கள்

ஆப்பிள் பயனாளரின் தகவல்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள எதுவாக சில மாற்றங்கள் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ளது என்றும், பின்பு பேஸ்புக் வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் ஒரு முறை மட்டும் லொகேஷனை பகிர்வது போல் அமைப்பை மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ

சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ

பின்பு கேமரா சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சிரி மேலும் சிறப்பான அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது..

ஐஒஎஸ் 13

ஐஒஎஸ் 13

குறிப்பாக ஐஒஎஸ் 13பதிப்பில் டார்க் மோட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் புதிய ஐஒஎஸ் 13 இயங்குதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனுடன் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் ஒஎஸ். 6 நேற்று துவங்கிய 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வாட்ச் ஒ.எஸ். தளத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாமல், புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இயங்குதளத்தின் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தை ஐபோனுக்கான கூடுதல் உபகரணமாக இல்லாமல்இ தனித்துவம் வாய்ந்த சாதனமாக மாற்ற ஆப்பிள் முடிவு செய்திருக்கிறது.

Best Mobiles in India

English summary
apple-wwdc-2019-ios-13-dark-mode-everything-apple-just-announced : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X