Home
News

2018 ஆப்பிள் டெவலப்பர் மாநாடு: க்ரூப் கால்: 32 நபர்களுடன் பேச முடியும்.!

ஆப்பிள் நிறுவனம் இப்போது மீமோஜி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த புதிய அம்சம் உங்களின் முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஜிமெசேஜில் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

By Prakash S

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, குறிப்பாக உலக நாடுகள் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்நிறுவனம் 2018 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மென்பொருள் சார்ந்த அம்சங்களை அறிவித்துள்ளது.

2018 ஆப்பிள் டெவலப்பர் மாநாடு: க்ரூப் கால்: 32 நபர்களுடன் பேச முடியும்

குறிப்பாக டிவி ஒஎஸ், வாட்ச் ஒஎஸ், மேக் ஒஎஸ் போன்ற சாதனங்களுக்கு புதிய இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹார்டுவேர் சாரந்த புதிய அம்சங்கள் எதுவும் அறிவிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இப்போது அறிவிக்கப்பட்டு இயங்குதளங்களில் புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐஓஎஸ் 12:

ஐஓஎஸ் 12:

ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஏஆர்கிட் போன்றவற்றை சேரத்துள்ளது ஆப்பிள் நிறுவனம், மேலும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை எளிமையா இயக்கும் புதிய வழியை அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கிரீன்டைம் ஆப்:

ஸ்கிரீன்டைம் ஆப்:

ஐஓஎஸ் 12 தளத்தில் டூ நாட் டிஸ்டர்ப் மற்றும் ஸ்கிரீன்டைம் ஆப் போன்ற அம்சங்கள் உங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை டிராக் செய்து தகவல்களை மிக துல்லியமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மீமோஜி:

மீமோஜி:

ஆப்பிள் நிறுவனம் இப்போது மீமோஜி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த புதிய அம்சம் உங்களின் முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஜிமெசேஜில் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. மேலும் மேசேஜஸ் கேமராவில் புதிய வசதிகள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்டைம்:

ஃபேஸ்டைம்:

ஃபேஸ்டைம் அம்சத்தில் இப்போது வந்துள்ள புதிய வசதி என்னவென்றால் க்ரூப் கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும், பின்பு ஒரே சமயத்தில் 32 நபர்களுடன் பேச முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இந்த ஃபேஸ்டைம் புதிய அம்சம் ஐபோன், ஐபேட், ஐமேக் போன்ற சாதனங்களில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரி ஷார்ட்கட்:

சிரி ஷார்ட்கட்:

ஆப்பிள் நிறுவனம் இந்த மாநாட்டில் சிரி ஷார்ட்கட்களை அறிமுகம் செய்துள்ளது, இது செயலிகளில் குறிப்பிட்ட கமான்டுகளை
உருவாக்க முடியும். பின்பு இந்த அம்சம் பல்வேறு மாணவர்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி:

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி:

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தளத்தில் ருளுனுணு என்ற புதிய ஃபார்மேட் வசதியை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். ஃபார்மேட் வசதி என்னவென்றால் பல புதிய வசதிகளை வழங்க பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது
ஆப்பிள் நிறுவனம். அதன்படி மெஷர் மற்றும் அடோப் உனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple WWDC 2018 Highlights from the keynote: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X