iPhone-ல் யூஸ் பண்ண Chip-ஐ பயன்படுத்தி பட்ஜெட் விலையில் புதிய Macbook.. Apple-ன் அடேங்கப்பா ஐடியா!
ஐபோன் 16 சீரீஸின் (iPhone 16 Series) பட்ஜெட் விலை மாடல் ஆன ஐபோன் 16இ (iPhone 16e) அறிமுகத்தை தொடர்ந்து, ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் கவனம் மீண்டும் ஒரு "பட்ஜெட் விலை டிவைஸ்" (Budget Segment) மீது திரும்பி உள்ளது போல் தெரிகிறது.
ஆப்பிள் அப்படி என்ன செய்கிறது? ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடல்களில் பயன்படுத்தப்படும் அதே சிப் மூலம் இயங்கக்கூடிய புதிய மற்றும் மலிவு விலை மேக்புக் மாடல் (Cheap Macbook Model) ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங்-சி குவோவின் (Apple Analyst Ming-Chi Kuo) கூற்றுப்படி, ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய 13-இன்ச் மேக்புக் மாடல் ஆனது ஏ18 ப்ரோ சிப் கொண்டு இயங்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த சிப் ஐபோன் 16 ப்ரோ மாடல்களின் வழியாக அறிமுகமானது.
மிங்-சி குவோவின் கூற்று உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக ஐபோன்-கிளாஸ் ப்ராசஸரை ஒரு மேக்புக்கில் பயன்படுத்தும். ஆப்பிளின் இந்த சீப் மேக்புக் எப்போது அறிமுகமாகும்? "சீப்" என்றால்.. என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும்? வாருங்கள் விரிவாக பார்க்க்கலாம்.

ஆப்பிளின் "சீப் மேக்புக்" எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? மிங்-சி குவோவின் கூற்றுபடி, பெரும்பாலும் 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கும், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கும் இடையில் ஆப்பிள் நிறுவனம் ஆனது இந்த புதிய மேக்புக் மாடலின் உற்பத்தியை தொடங்கலாம்.
மேலும் ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் 5 முதல் 7 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி அளவை இலக்காக கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக ஏ18 ப்ரோ சிப்பால் இயக்கப்படும் 13-இன்ச் மேக்புகே மாடல் ஆனது 2026 ஆம் ஆண்டுக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
என்ன மாதிரியான விலை நிர்ணயத்தை பெறும்? தற்போது வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான ஆப்பிள் மேக்புக் மாடல் என்றால் அது 13-இன்ச் மேக்புக் ஏர் (13-inch Macbook Air) மாடல் ஆகும். இது எம்4 சிப்பால் இயக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.99,999 ஆகும். ஆக எதிர்பார்க்கப்படும் பட்ஜெட் விலை மேக்புக் மாடல் ஆனது தற்போதைய மேக்புக் ஏர் மடலை விட கணிசமாக விலை குறைவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆப்பிள் நிறுவனம் இந்த மாடலை அமெரிக்காவில் $999 முதல் தொடங்கும் தற்போதைய மேக்புக் ஏர் வரம்பிற்கு கீழே நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதன் விலை $700-800 வரம்பில் இருக்கலாம். இருப்பினும் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் இந்த புதிய மேக்புக் மாடல் ஆனது சில்வர், ப்ளூ, பிங்க் மற்றும் யெல்லோ என பல வகையான கலர்களில் வரக்கூடும் என்றும் சில அறிக்கைகள் மற்றும் கசிவுகள் தெரிவிக்கின்றன. இது ஐமேக் மற்றும் ஐபேட் சீரீஸில் ஆப்பிள் நிறுவனம் பின்பற்றும் அணுகுமுறை ஆகும்.
பெர்பார்மென்ஸ் அடிப்படையில் ஆப்பிளின் ஏ18 ப்ரோ சிப் ஆனது போட்டித்தன்மை வாய்ந்த செயலாக்க சக்தியை (Processing power) வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9டூ5மேக்கின் (9to5Mac) சில மதிப்பீடுகள் ஆனது ஏ18 ப்ரோ சிப் அணை சில பணிகளில், குறிப்பாக சிங்கிள்-கோர் பெர்பார்மென்ஸில் எம்1 சிப்பிறகு ஈடாக செயல்படலாம் அல்லது அதை விஞ்சலாம் என்று கூறுகின்றன.
இருப்பினும், கிராபிக்ஸ்-ஹெவி வொர்க்ஃப்ளோ அல்லது தொழில்முறை பயன்பாடுகளில் இது ஒப்பீட்டளவில் குறைவான பெர்பார்மென்ஸை வழங்கலாம். ஒட்டுமொத்தமாக - ஆப்பிளின் புதிய பட்ஜெட் விலை மேக்புக் மாடல் ஆனது - அன்றாட பணிகளை செய்ய விரும்பும் பயனர்களுக்கு மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








