Home
News

முடிவுக்கு வரும் ஆப்பிள் மற்றும் சாம்சங் காப்புரிமை வழக்கு!

By Super

முடிவுக்கு வரும் ஆப்பிள் மற்றும் சாம்சங் காப்புரிமை வழக்கு!
காப்புரிமை சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் சாம்சங் நிறுவனம் 5826.9 கோடி, ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையே, காப்புரிமை சம்மந்தமான வழக்கு நடந்து வந்தது. ஐபோன் மற்றும் ஐபேட் எலக்ட்ரானிக் சாதனத்தின் அதே வடிவமைப்பினை, சாம்சங் நிறுவனம் தனது டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தியதாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

பல மாதங்களுக்கு பிறகு சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கான காப்புரிமை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு, சாம்சங் நிறுவனம் 5826.9 கோடி வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிக விற்பனையை குவித்து வந்த சாம்சங் நிறுவனத்திற்கு இது பெரும் இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஆப்பிள் நிறுவனத்திற்கும் மற்ற நிறுவனங்களுக்கும் இடையே இது போல் காப்புரிமை வழக்கு நிறைய நடந்து வருகிறது. இன்னும் அதன் தீர்ப்புகள் வெளியாக இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டியுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X