இந்தியாவில் ஐபோன் 7 வெளியானதும் இந்த ஐபோன்கள் நிறுத்தப்படுகின்றது.!!

By Meganathan
|

ஸ்மார்ட்போன் பிரியர்களின் கனவு கருவியாக விளங்கும் ஐபோன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அவற்றைப் பெரும்பாலானோரும் வாங்க முடியாத சூழல் நிலவுகின்றது. உலகம் முழுக்க ஐபோன்களை வாங்கப் பலரும் தங்களது சிறுநீரகங்களை விற்பனை செய்த கதை நிறையவே இருக்கின்றது.

ஐபோன் கருவிகள் என்றாலே கெத்து தான், அதன் அழகு, கருவியில் காணப்படும் ஆப்பிள் லோகோ, சிறப்பான கேமரா என எல்லாமே நன்றாக இருக்கும் அதே வேலையில் அவற்றின் விலை தான் நம்மைப் பெரிதும் பாதிக்கின்றது. இருந்தும் புதிய ஐபோன்கள் வந்தவுடன் பழைய மாடல்களின் விலை குறைக்கப்படும் அவற்றை வாங்கலாம் எனப் பலரும் காத்திருக்கின்றனர். ஆனால் இவை அனைத்திற்கும் ஆப்பிள் அடியோடு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அனைவரின் எதிர்பார்ப்புகளின் படி ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் கருவிகளை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஐபோன் 6எஸ் குறைந்த விலைக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

நீக்கம்

நீக்கம்

ஆப்பிள் இந்தியா இணையதளத்தில் ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் மற்றும் ஐபோன் 5 எஸ் போன்ற மாடல்கள் எடுக்கப்பட்டு விட்டன. இதனால் இந்தக் கருவிகள் இனி இந்தியாவில் விற்பனை செய்யப்பட மாட்டாது எனக் கூறப்படுகின்றது.

கருவிகள்

கருவிகள்

இதன் காரணமாக இந்திய ஆப்பிள் ப்ரியர்கள் இனி ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்இ உள்ளிட்ட கருவிகளை மட்டுமே வாங்க முடியும்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஐபோன் 5எஸ் கருவி நீக்கப்படலாம் என பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் உள்ளிட்ட கருவிகள் நீக்கப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இணையதளம்

இணையதளம்

ஆப்பிள் இந்தியா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட போதும் இந்தக் கருவிகள் மற்ற இணையதளங்களில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனை

விற்பனை

இந்தியாவில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருப்பதோடு அவற்றின் விலை ரூ.60,000 முதல் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Will Discontinue iPhone 5s, 6 And 6 Plus after iPhone 7 Launches In India Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X