யானையும் Appleம் ஒன்னு- இந்த வாட்சை ரிப்பேர் செய்யும் செலவிற்கு 3 Smart TV வாங்கிருவோம்..

|

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் Watch Series 8ஐ அறிமுகம் செய்தது. எதிர்பார்த்ததை விட பல்வேறு மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டிருந்தது.

இந்த நிகழ்வில் மூன்று ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அது ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ஆகும். Apple Watch Ultra என்பது நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்வாட்ச் ஆகும்.

Apple Watch Ultra ரிப்பேர் கட்டணம்

Apple Watch Ultra ரிப்பேர் கட்டணம்

இந்த நிலையில் Apple Watch Ultra ரிப்பேர் கட்டணத்தை நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் இதுபோன்று பழுதுபார்க்கும் கட்டணத்தை அறிவிப்பது வழக்கம் தான்.

இருப்பினும் இதுவரை இல்லாத அளவிலான அதிக தொகையை கட்டணமாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் பழுது ஏற்பட்டால் அதை ரிப்பேர் பார்ப்பதற்கு ரூ.43000 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

யானையும் ஆப்பிளும் ஒன்னு

யானையும் ஆப்பிளும் ஒன்னு

யானை வாங்குவது அவ்வளவு பெரிய விஷயமல்ல.. அதை பராமரிப்பது தான் பெரிய விஷயம்.. அதேபோல் தான் ஆப்பிள் சாதனங்களும்.

முடிவெடுத்தால் ஐபோன் உட்பட ஆப்பிளின் எந்த சாதனங்களை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். ஆனால் அதை காலம் முழுவதும் பாதுகாப்பதும் பராமரிப்பதும் தான் சிரமம்.

அப்படி ஒருவேளை தவறுதலாக கீழே விழுந்து உடைந்தாலோ, பழுது ஏற்பட்டாலோ அதை சரி செய்யும் செலவும் ஒரு ப்ரீமியம் ஸ்மார்ட்போனே வாங்கிவிடலாம். இது அனைவரும் அறிந்ததே. இதுபோன்ற ஒரு விஷயத்தை தான் பார்க்கப்போகிறோம்.

பழுதுபார்ப்பு செலவின் விவரங்கள்

பழுதுபார்ப்பு செலவின் விவரங்கள்

ஆப்பிள் சீனாவில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் பழுதுபார்ப்பு செலவுகளை அறிவித்துள்ளது. இதுவரை எந்த ஆப்பிள் வாட்சிலும் காணாத தொகையை நிறுவனம் பழுதுபார்ப்பு செலவாக இந்த வாட்சிற்கு அறிவித்திருக்கிறது.

ஆப்பிள் வாட்சை பழுதுபார்ப்பதற்கு ஆப்பிள் CNY 3,749 (தோராயமாக ரூ.43,113) ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது சீனாவுக்கான கட்டணம் தான் ஒவ்வொரு பகுதிக்கும் இந்த கட்டணம் மாறுபடும்.

இந்த கட்டணத்தை ஸ்மார்ட்வாட்ச் விலையில் இருந்து 50-60 சதவீதமாக கணக்கெடுத்துக் கொள்ளலாம்.

சலுகை அறிவித்த ஆப்பிள்

சலுகை அறிவித்த ஆப்பிள்

ஆப்பிள் இதற்கும் சலுகையும் அறிவித்திருக்கிறது. AppleCare+ சந்தாவை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.

AppleCare+ சந்தாதாரர்களுக்கான கட்டணம் CNY 588 (தோராயமாக ரூ.6,762) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

AppleCare+ உறுப்பினராக சீனாவில் சந்தா கட்டணம் இரண்டு ஆண்டுக்கு CNY 799 (தோராயமாக ரூ.9,188) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

நமது வித்தைக்கு இங்கு இடமில்லை

நமது வித்தைக்கு இங்கு இடமில்லை

இந்த இடத்தில் ஒரு யோசனை வரும், பழுதாகி விட்டால், Care+ சந்தா செலுத்தி உறுப்பினராகிவிட்டு ரிப்பேர் செய்யலாம் என்று. அதுதான் முடியாது நீங்கள் ஆப்பிள் சாதனம் வாங்கும் சமயத்திலோ அல்லது 60 நாட்களுக்குள் Care+ சந்தா செலுத்தி உறுப்பினராக வேண்டும். இப்படி செய்தால் மட்டும் இந்த சலுகை செல்லும்.

இந்திய நிலவரம் இதுதான்

இந்திய நிலவரம் இதுதான்

ஆப்பிள் தற்போது அறிவித்துள்ள கட்டணம் சீனாவுக்கானது மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பழுதுபார்க்கும் விலையை ஆப்பிள் இன்னும் வெளியிடவில்லை.

AppleCare+ ஐப் பொறுத்தவரை, ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவிற்கு இந்தியாவில் Care+ சந்தா கட்டணம் ரூ.10,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் விலை

ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் விலை

இவ்வளவு கூறுகிறீர்களே, அந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் விலை தான் என்னவென்று ஒரு கேள்வி வரலாம். இதன் விலை ரூ.89,900 ஆகும்.

சுமார் 1 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வரும் இந்த வாட்ச்சின் அம்சங்களில் எதுவும் குறை கூறிவிட முடியாது.

ஆம், ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா அதீத மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில், இந்த ஸ்மார்ட்வாட்சை இப்போதே ஆர்டர் செய்யலாம் செப்டம்பர் 23 முதல் இதன் ஷிப்பிங் தொடங்கும்.

அந்த 3 ஸ்மார்ட்டிவியும், அல்ட்ரா வாட்ச் அம்சங்களும்

அந்த 3 ஸ்மார்ட்டிவியும், அல்ட்ரா வாட்ச் அம்சங்களும்

தலைப்பில் குறிப்பிட்ட அந்த 3 ஸ்மார்ட் டிவி என்பது Mi 5A 80 cm (32 inch) ஸ்மார்ட்டிவி தான். ஆண்ட்ராய்ட் டிவியான இதில் எச்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளே உடன் டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவும் இருக்கிறது. இது 2022 மாடலாகும்.

வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் நல்ல மதிப்பெண்களை இந்த ஸ்மார்ட்டிவி பெற்றிருக்கிறது. இதன் விலை பிளிப்கார்ட்டில் ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ராஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

Best Mobiles in India

English summary
Apple Watch Ultra Repair Cost Revealed: you can buy a 3 Smart TV instead of Repair

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X