நோ டச்.. டபுள் டேப் போதும்.. தொடாமலே கன்ட்ரோல்.. டெக் உச்சத்தில் ஆப்பிள் வாட்ச்.. என்ன விலை?
ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 (Apple Watch Ultra 2) ஸ்மார்ட்வாட்ச் உலகின் எதிர்கால தொழில்நுட்பங்களை கண்முன்னே கொண்டுவருகிறது. இந்த வாட்ச்சின் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை தேதி குறித்த விவரங்கள் இதோ.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 அம்சங்கள் (Apple Watch Ultra Specifications): இந்த வாட்ச் 49மிமீ டைட்டானியம் கேஸ் (Titanium Case) அளவு கொண்டுள்ளது. பிளாட் சேப்ஹர் ப்ரண்ட் (Sapphire Front) டிசைன் கொண்டிருக்கிறது. இதுவொரு ஆன்வேஸ்-ஆன் ரெடினா டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 3,000 பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவரை வெளியான ஆப்பிள் வாட்ச்களில் இதுவே அதிக பிரைட்னஸ் லெவல் கொண்டிருகிறது. இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 வாட்ச்ஓஎஸ் 10 (watchOS 10) கொண்ட எஸ்9 சிப் (S9 SiP) கொண்டுள்ளது.
இந்த சிப்செட்டில் மட்டுமே டபுள் டேப் கெஸ்ச்சர் (Double Tap Gesture), பாஸ்டர் ஆன்-டிவைஸ் சிரி (Faster on-device Siri) மற்றும் ஐபோன் பிரிசிஷியன் ஃபைண்டிங் (iPhone Precision Finding) சப்போர்ட் வருகிறது. இந்த டபுள் டேப் கெஸ்ச்சர் மூலம் உங்களது ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் 2 முறை சுண்டினால், போன் கால்களை அட்டண்ட் செய்யலாம்.
அதையே மீண்டும் செய்தால் கட் செய்யலாம். அதேபோல ஹே சிரி (Hey Siri) வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் ஹெல்த் அப்டேட்களை கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இதற்காக இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் மைக் வருகின்றன. அதேபோல ஐபோன் பிரிசிஷியன் ஃபைண்டிங் மூலம் இந்த வாட்ச்சை ஆப்பிள் ஏர்டேக் (Apple AirTag) போல பயன்படுத்தலாம்.
கஸ்டமைசபிள் ஆக்சன் பட்டன் (Customizable Action Button) வருகிறது. இந்த ஆப்பிள் அல்ட்ரா மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 36 மணி நேரம் பேக்கப் கொடுக்கும். அதுவே லோவ் பவர் மோடில் (Low Power Mode) பயன்படுத்தினால், 72 மணி நேரம் பேக்கப் கிடைக்கும்.
இதில் டிரெய்ல் லூப் (Trail Loop), அல்பைன் லூப் (Alpine Loop) மற்றும் ஓசன் பேண்ட் (Ocean Band) ஆகிய மூன்று வகையான பேண்ட்கள் வருகின்றன. டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual Frequency GPS), எல்இடி (LTE) மற்றும் செல்லூலார் (Cellular) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.
நைட் மோட் (Night mode), காம்பஸ் (Compass), ப்ரோ ரன்னிங் பீச்சர்ஸ் (Pro Running Features), டெப்த் கவுஜ் (Depth Gauge), கிராஷ் டிடெக்சன் (Crash Detection), எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் (Emergency SOS) மற்றும் ஃபால் டிடெக்சன் (Fall Detection) ஆகிய அம்சங்கள் வருகின்றன.
பிளட் ஆக்ஸிஜன் லெவல் (Blood Oxygen Level), இசிஜி (ECG), ஹார்ட் ரேட் (Heart Rate), கார்டியோ ஃபிட்னஸ் (Cardio Fitness) ஆகியவற்றை கண்காணிக்க ஹெல்த் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 100 மீ வாட்டர் ரெசிஸ்டன்ட், ஸ்விம்ஃப்ரூப் (Swimproof) மற்றும் IP6X தர டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 கார்பன் நியூட்ரல் (Carbon Neutral) அடிப்படையில் ரீ-சைக்கிள் செய்யப்பட்ட மெட்ரியல்களை கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். இந்த வாட்ச் டிரெய்ல் லூப் பேண்ட் டிசைனில் ஆரஞ்ச் (Orange), பெய்ஜ் (Beige), கிரீன் (Green), கிரே (Grey), ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் வருகிறது.
அதேபோல அல்பைன் லூப் பேண்ட் டிசைனில் ப்ளூ, இன்டிகோ (Indigo) மற்றும் ஆலிவ் (Olive) ஆகிய கலர்களில் வருகிறது. மேலும், ஓசன் பேண்ட் டிசைனில் ப்ளூ மற்றும் ஆரஞ்ச் கலர்களை கொண்டுள்ளது. இந்த வாட்ச்சின் விலை ரூ.89,990ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் ஆப்பிள் ரீடெய்லர் (Apple Retailer) மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர்களில் (Apple Online Store) விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications