IPL 2023: தல தோனி களம் வந்த போது ஆப்பிள் வாட்ச் செய்த காரியம்.! இணையத்தில் வைரல்.!
ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் மாடல்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. காரணம் என்னவென்றால் மனிதர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த ஆப்பிள் வாட்ச்.
இந்நிலையில் சென்னை மைதானத்தில் ரசிகர்கள் எழுப்பிய சத்தம் எவ்வளவு என்பதை ரசிகர் ஒருவரின் ஆப்பிள்வாட்ச்-இல் வந்த எச்சரிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

நேற்று (புதன்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. குறிப்பாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
அதைத் தொடர்ந்து 168 ரன்கள் வெற்றி என இலக்கை துரத்திய டெல்லி அணியால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் இந்த அசத்தல் வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடித்து வருகிறது.
அதேபோல் இந்த நடப்பு சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 7 வெற்றி மற்றும் 4 தோல்வியுடன் 15 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளைச் சந்திக்கிறது. இந்த போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சென்னை அணி டாப் 2 இடத்திற்குள் நிச்சயம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதியாகி விடும். இதனால் தற்போது சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் களமிறங்கிய போது ரசிகர்களின் சத்தம் விண்ணைப் பிளந்தது என்றுதான் கூறவேண்டும்.
அதாவது அவர் களத்தில் நுழைந்த போது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்தில் இடம்பெற்ற பாடலான, வெற்றி கொடி கட்டு, மலைகளை முட்டும் வரை முட்டு.. லட்சியம் எட்டும் வரை எட்டு.. படையெடு படையப்பா.. பாடல் ஒலிக்க அந்த தருணத்தில் ரசிகர்கள் எழுப்பிய சத்தம் விண்ணை முட்டியது.
மேலும் மைதானத்தில் ரசிகர்கள் எழுப்பிய சத்தம் எவ்வளவு என்பதை ரசிகர் ஒருவரின் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்-இல் வந்த எச்சரிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, ரசிகர்கள் எழப்பிய சத்தத்தின் அளவு 100 டெசிபல் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பின்பு இந்த சத்தம் இன்னும் சில நிமிடங்கள் தொடர்நதால், தற்காலிக காது கேளாமை பிரச்சனை வரும் என ஸ்மார்ட்வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதேபோல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படம் இணையதளத்தில் அதிக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications








