61 வயது முதியவரின் உயிரை காத்த ஆப்பிள் வாட்ச்.! நடந்தது இதுதான்.!

|

இப்போது வரும் புதிய புதிய கேட்ஜெட்டுகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன. மேலும் இது நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகி வருகின்றன. குறிப்பாக இவை நம் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமல்லாமல் உயிரைக் கூட காப்பாற்றுகின்றன.

 ராஜ்ஹான்ஸ்க்கு உடல்நிலையில்

அதன்படி சமீபத்தில் 61 வயதான ஒரு நபரை ஆப்பிள் வாட்ச் (Apple Watch) காப்பாற்றியுள்ள ஒரு சம்பவம் பற்றி தெரியவந்துள்ளது. மருந்தியல் தொழில் முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான ராஜ்ஹான்ஸ்க்கு அவரது மகன் சித்தார் ஆப்பிள் 5 சீரிஸ் வாட்ச் ஒன்றைப் பரிசளித்துள்ளார். மேலும் இந்த வருடம் மார்ச் மாதம் முதல் ராஜ்ஹான்ஸ்க்கு உடல்நிலையில் பாதிப்பு இருந்து வந்துள்ளது.

ஆப்பிள் 5 சீரிஸ்

குறிப்பாக ஆப்பிள் 5 சீரிஸ் வாட்சில் ஈசிஜி தகவல்களைப் பெற முடியும். இதன் தகவலை சித்தார்த் தான் பெறும்படி வழிவகை செய்து வைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக ராஜ்ஹான்ஸ்ன் இதயத் துடிப்பில் சில மாற்றங்கள் தென்படுவது நடு இரவில் சித்தார்த்துக்கு அலாரம் மூலம் தெரியவந்துள்ளது.

என்ன நேக்கா ஆட்டையை போட பாத்தப்பா.. டெலிவரி செய்யவேண்டிய போனை அபேஸ் செய்த Amazon டெலிவரி பார்ட்னர்.

இரண்டு மூன்று நாட்கள்

பின்பு இரண்டு மூன்று நாட்கள் இவ்வாறு முடிவுகள் கிடைத்ததால், சித்தார்த் அந்த முடிவுகளை மருத்துவர்களிடம் பகிர்ந்துள்ளார். மருத்துவர்கள் ராஜஹான்ஸ்யை பரிசோதித்துவிட்டு அவருக்கு அறுவைசிகிச்சை செய்துள்ளனர். இதனால் அவர் காப்பாற்றப்பட்டதாக சித்தார்த்துக்குத் தெரிவித்துள்ளனர்.

உதவியது என்று குறிப்பிட்டுள்ளார்

இந்த சம்பவம் குறித்து சித்தார் ஆப்பிள் நிறுவனத்திற்கு இ மெயில் வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளார். அதில் ஆப்பிள் வாட்ச் தான் என் அப்பாவின் இதயத்திலிருந்த பிரச்சனையை உடனே கண்டறிந்தது. அது என் தந்தையை காப்பாற்ற உதவியது என்று குறிப்பிட்டுள்ளார்.

 பதிலளித்துள்ள ஆப்பிள்

இதற்குப் பதிலளித்துள்ள ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக், நீங்கள் இதைப் பதிவிட்டதற்கு மிகவும் நன்றி. அவர் தற்போது நன்றாக இருப்பதாக நம்புகிறேன். எங்கள் குழு உங்களுக்கு துணையிருக்கும் என்று கூறியுள்ளார்.

ருக்கமாக கூறவேண்டும் என்றால், வரவிருக்கும்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், வரவிருக்கும் பெரிய ஆபத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கையை Apple Watch அளித்துள்ளது. அதனால் அந்த முதியவரால், சரியான நேரத்தில் சிகிச்சையும் எடுத்துக்கொள்ள முடிந்தது. நாம் தினசரி உபயோகிக்கும் கேட்ஜெட்டுகள் நமக்கு பல முக்கிய பயன்களை அளிக்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Apple Watch Series 5’s ECG feature saves life of a 61-year old Indian man: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X